வர வர மணி ஏன் இப்படி வேகமா ஓடறது?
சீக்கிரம் வேலை முடிச்சாதான் இன்னியோட syllabus cover பண்ண முடியும். மூளை பரபரக்க..
மொபைல் அடியோ அடியென்று அடிக்க..இரு வரேன்..வர்..ரேன்னு ஓடி எடுக்க..மறுமுனையில் உயிர்த் தோழி..'ஏய் உயிரோட தான் இருக்கியாடி நீ.. நாலஞ்சு நாளாச்சு..Watsapp ல் நம்ம காலேஜ் க்ரூப்ல இருந்தாளே.மீரா..அவளைக் கண்டுபிடிச்சேன்னு ஃபோட்டோ போட்டு.. blue tick வரவேயில்லை..ஏய்..அப்பா ஓகே தானே..non stop ஆ கேள்விக் கணைகள்..
கடகடனு அவளுக்கு பதில் சொல்லிட்டு ..
அப்புறம் பேசறேனு ஃபோனை வைத்து முடிக்க...அப்பாடா. சீக்கிரம் ..சீக்கிரம் ..மனசு வேகமா ஓட..வூட்டுக்காரர் மொபைலில் ... ம்ம்ம்ம்..சொல்லுப்பா ..அவசர கதியில் நான் கேட்க..'ஏம்மா..mail check பண்றதே இல்லையா..ஒரு excel sheet அனுப்பி இருக்கேன் பாரு..இந்த financial year ல எப்படி எகிறியிருக்கு செலவெல்லாம்னு ஒரு comparative analysis போட்டு இருக்கேன்.ரெட் கலர்ல highlight பண்ணது என்ன payment நு புரியல. என்னனு பார்த்து சொல்லு.. அது என்ன டிசைனோ..நான் எந்த மெயில் அனுப்பினாலும் செக் பண்றதில்லனு சங்கல்பம் உனக்கு'.. பாவம் நல்லவரு வல்லவரு..டொக்குனு ஃபோனை வைக்காமல் சரி சரி ..டைம் கிடைக்கும்போது பாரு..என்றார்.
மீண்டும் பரபர ..இன்னும் இரண்டே வேலை..அப்பறம் free free freeனு fly பண்ண..காலிங் பெல் கூப்பிட்டது.. ' எதிர்த்த வீட்டு குட்டி பெண்ணும் அவள் அம்மாவும்..என்ன aunty ..திடீர்னு உங்க வீட்ல சத்தமே காணும்..ஊருக்கு போயிருக்கீங்களோனு நினச்சேன்.( அப்படியா சத்தம் போடறேனு ..கேட்கலை அவளிடம்) ஹி..ஹி..ஹி..கொஞ்சம் பிஸி..அதான்..என் அவசரத்தை உண்ர்ந்த மாதிரி.. ஓகே aunty..வேலை முடிச்சதும் சொல்லுங்க..அரட்டை அடிக்கலாம் ..
கிளம்பும் குட்டிக்கு ஒரு ஆப்பிள் கொடுத்து விட்டு..விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடர்ந்தேன்.
அப்பாடா..முடிச்சேன்..
பின்ன என்னங்க..மத்யமர் தளம் சுறுசுறுனு சூப்பரா போய்ட்டிருக்கு..யார் யார் என்னென்ன பதிவு..ஒரு ரவுண்டு கண்ணை சுழற்றி வருவதற்குள்..நேரம் ஓடிடுது..
காலேஜிலிருந்த வந்த மகளிடம் ஒவ்வொரு topic ஆ சொல்லி அதில் என்னமாதிரி views and comments எல்லாம் வந்திருக்குனு சொல்ல..all news at one place ..அதில் நானும் இருக்கேண்டா என்று பெருமையுடன்...
உன்னால் முடியும் தம்பி படம் பார்த்தோமே..அது மாதிரி ஒரு நல்ல movement ஆ வரணும்டா.. நீயும் சொல்லு உனக்கு தெரிஞ்சதை ..உன் view point ல ..சொல்லி முடிக்கும்போது..எதையோ சாதிக்கப் போறோம்னு ஒரு conviction.
அவள் ஆசையாய் கேட்ட babycorn capsicum curry செய்து தர..
"அம்மா..எப்பவும் போல உன்னோட சமையல் ரெசிபியை எங்கியாவது இதுல போட்டுடாதே...இந்த இடம் அதுக்கில்ல..ஞாபகம் வெச்சுக்கோ..தட்டை ஏந்தியபடி தன் வேலை பார்க்கச் சென்றாள்..
yes..sowing the seed in the minds of youth is more important. மத்யமர் குரல் இளைய தலைமுறையையும் போய்ச் சேரணும்.
No comments:
Post a Comment