Friday, October 6, 2023

Madhyamar-ரீலா ரியலா

 #challengepost  Meena Anand

முயற்சி செய்திருக்கேன்.. ஊரு சுத்தினதால லேட்டாப் போச்சு.


ரீலா..ரியலா..ஃபீலா..பீலாவா???


இன்னாமே..மணி அஞ்சே முக்காலவுது. வூட்ல ஆரும் காணும்.இந்த பெர்சு ரெண்டு என்கிட்டும் போவாதே..ஞாயித்து கிலமை அந்தம்மா துணி தோச்சு இஸ்திரி போட்டுகினு இருக்கும்.அந்த ஐயா செடிக்கு தண்ணி ஊத்திட்டு இருக்குமே..எங்கன போய் தேடுறது? குப்பம்மா குமுறிகிட்டு கிடக்க.. அங்கே வந்த கிருஷ்ணவேணி..' உன் நைனா வூட்டாண்ட உன்ன தேடிக்கினு கீது..நீ இங்கிட்டு இன்னா பண்றே.. எங்கிட்டு.போச்சு அந்த ஐயா ..கேட்டை துறக்காம..மணி வேற ஆயிடிச்சு. அவளோட வந்த கும்பலோ 'அம்புடுத்தானா..என்னமோ பெர்சா உதார் வுட்டியே..கூட்டிகினு போறேனு..பூட்டின வூட்டை காட்டி ரீல் சுத்தறியா மவளே..கூட்டம் கறுவ..


'எலேய் கோவாலு..அந்தாண்ட அந்த அம்மாவோட தங்கச்சி வூட்ல பெர்சு ரெண்டும் குந்திகினு கீதானு பாருடா..மணி வேற ஆவுது..இன்னா செய்யறது..டபாய்க்காம போய்ட்டு வாடா..பிஸ்கோத்து வாங்கித் தாரேன்


 'சொல்லி முடிக்குமுன்.."ஆத்தா..சும்மா கூவிகினு கிடக்காதே..இரு சைக்கிள் ஒரு மெரி மெர்ச்சு போயாரேன்'.

தன்னோட கும்பலோடு மினிம்மா அங்கே வர..ஏய் மினிம்மா இன்னாது இது..அதிசயமா கீது ..நீ இங்கன வந்திருக்க என்று மொத்த கூட்டமும் கோரஸ் பாட...


கோவாலு..வேகமா வந்தான். ஐயா வராரு..அம்மா வராங்கா.வழி விடுங்க..வழி விடுங்க. பிள்ள..சொல்லும் போதே..கூட்டம் முட்டி மோத..


லீடர் கணக்குல குப்பம்மா..' ஏய் சும்மா கம்முனு இருக்க மாட்டீங்க..குளாய் அடி சண்டை இங்கன போடறது எவ அவ..குரல் எழுப்ப.


ஐயாவும் அம்மாவும் ஆஜர். 'குடு நைனா சாவிய..நானு தொறக்கறேன்..எங்கன பூட்டிங்க ..பேஜாராப் பூடிச்சி இங்க..'


கேட் திறக்க..தப தபனு அத்தனை சனமும் கூடத்தில் குந்த..(ஐயோ..உட்கார)...


டேய் அன்னாண்ட போய் குந்து..கப்பு தாங்கலை..சொல்லும் போதே..

ஐயா..அல்லாரையும் தாண்டி வந்து..அந்த சாலிடேர் கறுப்பு வெள்ளை டீவி ஸ்விட்சை ஆன் செய்ய..ஒரே பிகிலு சத்தம்..


ஐயாவும் அம்மாவும் அவுக வேலையை பார்க்க உள்ளாற போக..


'தலைவா'..சவுண்டு விட்டு பிகிலோடு அந்த வீடே ஒரு மினி தியேட்டர் ஆக..

அந்த வீட்டு குட்டிப் பெண் அல்லார்க்கும் ஜில்லுனு தண்ணி சப்ளை செய்தபடி.


சூப்பர் ஸ்ட்டாருடா..இன்னாமா சுத்தி சுத்தி அடிக்கறாரு பார்..தலீவா..டக்கரு பா..

மெய்யாலுமே..இத்தினி அ(ழ)ளகா இந்த கதாநாயகி..இன்னாமா இங்கிலிபீஸ் பேசுது..பெருமூச்சுகள். 


அக்கிஸ்டு மாட்டிக்க..வில்லன் கும்மாங்குத்து வாங்க..ஹீரோ ஹீரோயின் கண்ணாலம் ..பிலிம் முடிய..


அல்லா கும்பலும்..ஐயா..அம்மானு கூப்பிட்டு "ஐய்யா..ரொம்ப டாங்க்ஸ் ..நீங்க இங்கன வந்தப்பொறவுதான் வாரா வாரம் சினிமா பாக்குறோம்.ரொம்போ டாங்க்ஸ்..ஒவ்வொர்த்தரா விடை பெற்றாச்சு.


இது நடந்தது 1983. ஐயா..அம்மா வேற யாரரு..என் அப்பன் ஆத்தா தான்..தண்ணி கொடுத்த பொண்ணு நாந்தேன்.


அவர்களின் ஆதர்ச ஹீரோவின் சினிமா..ஞாயிற்றுக்கிழமை டீவியில்..களைப்பை மறக்க அந்த ஏரியாவில் இருந்த ஒரே டீவி வீடு எங்க வூடுதான்..

இப்போ எல்லாம் மாறி போச்சு..எல்லார் வீட்டிலும் ரெண்டு மூணு கலர் டீவி இருக்கு.


இன்னிக்கும் அவுக என்னைப் பாக்கும்போது ' உங்கப்பனாத்தா மாதிரி வருமா' என்று சொல்லும்போது..

நான் வெளியூரில் இருந்து வந்து விட்டு போகும்போது..' நீ சந்தோசமா போய்ட்டு வா தாயி..நாங்க அல்லாரும் கீறோம்ல ' என்ற.அன்பு , எத்தனை வருஷம் கழித்துப் பார்த்தாலும்..' இன்னாமா மெலிஞ்சு போய்ட்டியேனு' வயிற்றில் பால் வார்க்கும் வாஞ்சை. மெய்யாலுமே ..மெர்சலாயிட்டேன்.


பின் குறிப்பு: Rohini Krishna mam..என் வட்டத்தை விட்டு வெளியே ஒரு நாள் வர முயற்சிக்கிறேன்

Keerthivasan Rajamani: you have given me a toughest challenge. I will try.

Thanks all

No comments: