Friday, October 6, 2023

Madhyamar- படம் பார்த்து கதை

 #சண்டே_ஸ்பெஷல்

#படம்_பார்த்து_கதை


ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்.


அப்பா..ப்ளீஸ்ப்பா..ப்ளீஸ்ப்பா..அம்மாகிட்ட பேசி பர்மிஷன் வாங்கி தர வேண்டியது  உன்னோட பொறுப்புப்பா.. மகள் அனிஷா சொன்னதும் ஆடித்தான் போனான் அர்ஜுன்.


' baby ..நான் சொல்றதைக் கேளுடா

எங்க இரண்டு பேராலயும்.உன்னை விட்டு எப்படி இருக்க மு்டியும் சொல்லு..அதுவும் அம்மாவுக்கு எல்லாமே நீ தாண்டா..உடைஞ்சு போய்டுவா.. தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தான்.


அப்பா..அதனால தான் சொல்றேன். காலம்பற எழுந்ததுலேர்ந்து..எனக்கு சாப்பாடு, என் துணிமணி சரி பண்றது, எங்கே போனும்னாலும் அலுக்காமல் என்னை கொண்டு போய் விட்டு கூட்டிண்டு வந்து....நான் எப்போ கத்துப்பேன் வெளி உலகம்?.நீங்க எத்தனை தியரி சொன்னாலும் எனக்கு அந்த experience வேணும்ப்பா

ஹாஸ்ட்டல இருந்தா..எல்லாம் கத்துக்க எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும்ப்பா..


2 மணி நேரம் ..காரை எடுத்தால் நீங்க அங்கே வந்துடலாம்ப்பா.. நானும் weekend ஓடி வந்துடுவேன்..ஓகேயா என்றாள்.

அதெப்படி ம்மா..பழைய பல்லவி ஆரம்பித்தான் அர்ஜுன்.

பொறுமை இழந்த அனிஷா..கோபத்துடன்

"அப்பா.....உனக்கு தெரியுமா ..அம்மா பேர் இப்போ என்னனு?

Mrs Arjun னு சொன்னால்தான் இங்கே எல்லாருக்கும் தெரியும். அங்கே என் ஃப்ரண்ட்ஸ் சர்க்கிள், ஸ்கூல் எல்லாத்திலும் அனிஷாவோட அம்மா..

எங்கேப்பா...காணாமல் போச்சு...'ஸ்வாதி'ங்கற

அழகான பேர்?

 இருபத்தினாலு மணி நேரமும் நம்மைச் சுத்தியே இருக்காப்பா..

அம்மாவுக்கு ஒரு புது உலகம் காண்பிக்க வேண்டியது நம்ம கடமையில்லையா.. அவளுக்கு பிடிச்சது செய்ய ஆரம்பிக்கணும்.. அதுக்கு அவளுக்கே அவளுக்குனு ஃப்ரீ டைம் கிடைக்கணும். கரெக்டாப்பா...?


ஹாஸ்டல் வாழ்க்கை ஆரம்பித்து 2 மாதம் ஓடிப்போச்சு. 

அம்மாவிடமிருந்து குட்மார்னிங்குடன் அனிஷா செய்ய வேண்டிய வேலைகளின் லிஸ்ட் வந்து உள்டப்பியில் விழும். 

 அதோடு சேர்த்து அம்மா volunteer ஆக இருக்கும் NGO  வின் அன்றைய schedule வந்து விழும்.

சாயங்காலம் ..கண்டிப்பா அம்மா எடுத்த ஃபோட்டோக்கள் அனிஷா அர்ஜுன் ஃபோனின் மெமரியை நிரப்பும். 


அப்பாவுக்கு ஸ்மைலியுடன் மெசேஜ் அனுப்புவாள் .." எப்படி ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்' என்று .

No comments: