Friday, October 6, 2023

Madhyamar-kaapi sindhu

 Ramani sir ம் brinda kannan post ம் படிச்சு சும்மா இருக்க முடியல..

எழுதி வெச்சதை எடுத்து விடறேன். 


படிச்ச்சுட்டு நல்லா ஒரு கப் காஃபி குடிச்சிடுங்க


காஃபி சிந்து..( காவடிச் சிந்து இல்லை)


கண் மூடித் தேடினாலும்

கண்டே பிடித்திடுவேன்..

கள்ளி உனையே..

கள் சொட்டும் காஃபிப் பொடியே..


காலன் கதவு தட்டினாலும்

குடித்துட்டு வரேனே ...

காபி ஒரு முழுங்கென்பேன்.


காபி யில்லா வாழ்வு

கனவிலும் கண்டதில்லை..


பாலும் டீயும் பூஸ்ட்டும்

பல பானம் இருந்தாலும்

பரவசம் தருமே என்றும்..ஆவி

பறக்கும் சூட்டில் காபி..


தூக்கிக் குடிக்கையிலே

தொண்டைக்கு சுகமே


சீப்பிக் குடிக்கையிலே

சொர்க்கமும் தெரியுதிங்கே


சிக்கரி காஃபிக் கோர்

சங்கமும் உண்டிங்கிங்கே.


இவனன்றி அசையாதே

என்னில் ஒரு அங்கமுமே..


ஒர் இழு இழுக்கையிலே

உடம்பில் தெம்பு ஏறுமே

உனக்கென்றும் என் ஓட்டே

உன்னடிமை நான் தானே.

No comments: