Friday, October 6, 2023

Madhyamar-கடவுச்சொல்

 #பயனுள்ளதகவல்


#கடவுச்சொல்..


போன வருடம் என் நெருங்கிய தோழியின் கணவர் திடீரென மரணமடைந்தார். தோழியும் வேலை பார்ப்பவள். ஆனால் எல்லா வேலையும் க்யூவில் போய் நின்று செய்வாள்.ஆன்லைனில் செய்யணும் என்றால் ஆயிரம் மைல் ஓடுவாள். அவரே பார்த்துக்கட்டும் அந்த மாதிரி வேலையெல்லாம் என்று தட்டிக் கழிப்பாள்.கணினி மயமான காலம் இப்போது. 

மயானத்துக்கு கூட money transfer பண்ண வேண்டிய காலம். வந்தது இக்கட்டான நிலைமை.


internet banking id ,password எதுவும் தெரியாது. he was handling everything என்றாள். ( எல்லாரும் இது போல என்று சொல்ல வரவில்லை)

அவருடைய மொபைல் கூட திறக்க முடியவில்லை. ' நான் எதுக்கு use பண்ணப் போறேன் அவர் மொபைலை ' என்றாள்.

idயும் ,password ம் அத்யாவசியமாகிப் போன காலம் இது.


பில்லு கட்டணுமா பாஸ்வேர்ட்

செல்லு திறக்க பாஸ்வேர்ட்

வரி கட்ட பாஸ்வேர்ட்..ஆன்லைனில்

வாரி இறைக்க பாஸ்வேர்ட்

மெயில் பார்க்க பாஸ்வேர்ட்

மெயிலில் டிக்கட் எடுக்க பாஸ்வேர்ட்

ஆதாருக்கு பாஸ்வேர்ட்

ஆதாரமானது பாஸ்வேர்ட்

பாஸ்வேர்ட் இல்லாதோர்

பாரில் இப்போ இல்லையன்றோ.?


கணவனுக்கு ம் மனைவிக்கும் முக்கியமாக தெரிந்திருக்க வேண்டிய விஷயம் இந்த கலி(ணினி)யுகத்தில் id  and password.


அடுத்து முக்கியமாக ஒன்று.

ஒவ்வொரு operation க்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதால்..its humanly impossible to remember all our IDs and password.

so , ஒரு excel sheet ல் columns and rows with proper heading போட்டு நம்ம PC ல் நமக்கு மட்டும் புரியும்படி வைத்திருக்கணும்.

correct ஆக update செய்யணும். 


ஆனால் கம்ப்யூட்டரில் தானே எல்லாம் இருக்கே என்று ரிலாக்ஸ் ஆகி விடாதீர்கள்.


அந்தக் காலம் என்று கேலி யார் செய்தாலும் பொருட்படுத்தாமல் ,manual ஆக உங்கள் சொந்த பொக்கிஷ டைரி யில்  குறித்துக் கொள்ளுங்கள்.

திடீரென்று கம்ப்யூட்டர் காலாவதி ஆகி..இனிமே உயிரே வராது என்றால்..நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்.அப்பறம்.


வரி, பில் போன்று என்னென்ன பணம் கட்டுகிறோமோ அதையெல்லாம் printout எடுத்து வைத்து அழகாக ஒரு ஃபைல் தனித்தனியாக maintain செய்யுங்கள்.


portal  ல் எல்லாம் இருக்குனு போர்த்தி தூங்கிடாதீங்க. எப்ப எங்கே ஆப்பு வரும் என்று யாருக்கும் தெரியாது.


வளரந்த குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கணும்.

எதெடுத்தாலும் நான் செய்கிறேன் என்று சொல்லாமல் அவர்களையும் பழக்கப் படுத்தணும்.


நம்ம வீட்டு வாசல் எதுனு இப்போ எல்லாம் WiFi connect ஆவதை வைத்து assure பண்ணிக்கிறோம்.

நம்ம கணக்கு வழக்குகள் திறக்க உதவும் திறவுகோல் ..திறந்திடு சீசே என்றால் ..சீ..போ..ஆள்மாறாட்டாமா செய்யற என்று நம்மையே திட்டும்.


so நட்புக்களே..நான் செய்வதை உங்களிடம் பகிர்ந்தேன். நீங்களும் இப்படிதானே..?

No comments: