Friday, October 6, 2023

Madhyamar-பரீட்சைக்கு நேரமாச்சு

 #ஸண்டே_ஸ்பெஷல்


#பரீட்சைக்கு_நேரமாச்சு.


" இன்னும் என்னம்மா சமையல் ரூமில் குடைஞ்சுண்டே இருக்கே..கிளம்பு சீக்கிரம்..direct bus போய்டுத்துனால்...சென்டருக்கு போகவே முடியாது.... '


" அட இருங்கோப்பா....நான் சொல்றதைக் கேளுங்கோ..இந்த டப்பால குழந்தைக்கு மினி இட்லி இருக்கு..அதோ அதுல அவளுக்கு காரமில்லாமல் லெமன் ரசம் இருக்கு..நெய். அதோ பக்கத்தில இருக்கு..

குழந்தையைப் பார்த்துக்க கிருஷ்ணா வருவான். அவனும் மிளகாப் பொடி இட்லி,  ஃப்ரிட்ஜில தயிர் இருக்கு.. சாதம் இதோ குக்கர்ல..உங்க லஞ்ச் பாக்ஸ்..'..


" ஆத்தீ..நீ கிளம்பு..முதல்ல பேனா, பென்சில், ஹால் டிக்கட் எல்லாம் இருக்கானு பாரு...' வூட்டுக்காரரு படு டென்ஷனில்..


செல்ஃபோன் இல்லாத 1996. டெல்லி ஆட்டோவில் தனியாக என்னை அனுப்ப வூடே பயப்படும்..ஏன்னு கேக்கறீங்களா..நம்ம ஹிந்தி அப்புடி..எங்கியாவது நான் பேசற ஹிந்தி கேட்டு, ஆட்டோக்காரர் ஏதாவது தப்பான முடிவுக்கு வந்துட்டா..அப்புறம் என்ன பண்றது?


நமக்கு பரீட்சை நாளில் கரெக்டா வூட்டுக்காரருக்கு மீட்டிங்கோ மீட்டிங்.  என் பொண்ணு, அப்போ மூணு வயசு. யார்க்க்கிட்டயும் போக மாட்டாள். என் கஸின்  அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் ஜாலியா இருப்பாள். So, ம்ம்ம்ம் மாட்டிக்கினான் பாவம் ..baby sitting வேலை அவனுக்கு.


" கண்ணு..சமத்தா இருடா..மாமாவை தொல்லை பண்ணாத..மம் மம் சாப்டுனு' நான் கண்ணீரும் கம்பலையுமா கிளம்பி..


பஸ் பிடிச்சு, கிடைச்ச சீட் ஓரத்தில் உட்கார்ந்து, எதைப் படிப்பது..எதை விடுப்பதுனு ஒண்ணுமே புரியல..

நல்ல வேளை .. Last stopping ..பக்கத்திலேயே செண்டர்..

க்ளாஸ் தேடி, இதர், உதர்..ஓடி..  மூச்சு வாங்க ..நம்ம பெஞ்ச்ல போய்  உட்கார்ந்ததும்....

"ஆண்ட்டி..ஆப் கி சாடி பஹுத் சுந்தர் ஹை" ஒரு பெண் வந்து சொல்ல..

அங்கே நம்மள கலாய்க்க அனுப்பபட்ட ஏவுகணைனு புரிஞ்சாலும்..என்ன செய்ய..நமக்கு பதில் சொல்ல ஹிந்தி வராதே'...அந்த moment இருக்கே...😠


question paper ல  பாதி "ஒண்ணுமே புரியல 🌏 உலகத்துலனு" சோக கீதம்😭 பாட வைக்க.. .. , நம்ம சிலபஸ்ல இதெல்லாம் இருக்கானு ஒரே டவுட்டு..பக்கத்துல உட்கார்ந்திருந்தவர்கள் பேப்பரை ரொப்பிக் கொண்டே போக.." இவங்க எல்லாம் நெசமாவே பரீட்சைக்கு படிச்சுட்டு வந்திருக்காங்க..நானு...?🤔


"தஸ் மினிட் பாக்கி ஹை..ஜல்தி ஜல்தி..'

அப்பாடா..அந்த invigilator பேசினது புரிஞ்சது.


என்ன எழுதினேன்னு தெரியாது...பேப்பரை கொடுத்து விட்டு..ஓட்டமும் நடையுமாக அந்த செண்டரின் கேட்டுக்கு ஓடினேன்.. 


அங்கே..

" அம்மா..அம்மா.' வேற யாரு என் பொண்ணுதான்.

" பிடி இவளை..எனக்கு ஆபீஸுக்கு லேட்டாகறது" ..என் தம்பி தன்னோட கடமை முடிஞ்ச 😃 சந்தோஷத்தில்..

பை..பை சொல்லிட்டு கிளம்பிட்டான்..


அவள், அவ பை எல்லாத்தையும் தூக்கிண்டு..பஸ் பிடிச்சு வீட்டுக்கு வந்து..ஆடிப்பாடி அவளுக்கு சாப்பாடு கொடுத்து..தூங்குடா கண்ணுனு....அவ கண்ணை இறுக்க மூட வைச்சால்..கடைசில நான் தான் தூங்கி..


அடுத்த நாள் பரீட்சைக்கு புக் எடுத்ததுமே..

ஏதாவது பொம்மை கொண்டு வருவா..drawing note எடுத்துண்டு வருவா..'.அவளோட விளையாடிண்டே படிப்பு....


சைக்கிள் 🚲 கேப்ல ஏதோ படிச்சு..இப்படி ஒரு மூணு நாள் பரீட்சை எழுதறதுக்குள்ள..மூச்சு திணறிப் போய்..


ஆனால்.. ....

Kahaani mein ek twist..

3 attempt எழுதி fail ஆகி நொந்து 🍜 நூடுல்ஸ் ஆகி இருந்த நான்...

" சக்ஸஸ்..சக்ஸஸ்..ஆத்தா...நான் பாஸாயிட்டேன் '..

ரிசல்ட் வந்ததும் நானா..நானே நானு பாஸாயிட்டேனா..?


ஆமாம்...புது சிலபஸுக்கு மாறப் போறதுனு தகவல் தெரிஞ்சு..ஏதோ படிச்சு ஒருவழியா..கனவாகிடுமோனு பயந்த ICWA முடிச்ச அன்று கிடைச்ச சந்தோஷம் இருக்கே..no words..


வாழ்க்கை தத்துவம் புரிஞ்சது..


எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்..


எதுவும் ஈஸியா கிடைக்காது..


பின்ன என்ன?

அம்மாவும் பாட்டியும் அலாரம் வெச்சு, எனக்கு படிக்கறதுக்கு எந்த disturbance ம் இல்லாமல் இருக்கணும்னு பார்த்து பார்த்து என்னை கவனித்தபோது ..ஃபெயில் ஆன நான்.. 

போ..நீயே நீந்து..தத்தளிச்சு..சாமர்த்தியம் இருந்தால்  வெளியே வந்துக்கோனு ..விட்டபோது ✌️ வெற்றியோட வெளியே வர முடிஞ்சது..


அது வெறும் certificate ஆக மட்டும் இருக்கு என்னிடம் இப்போது.. அப்புறம் பசங்களோட ஏகத்துக்கு பரீட்சை..இன்னும் எழுதிக் கொண்டே இருக்கேன்..அதே டென்ஷனோட இல்லாமல்..இப்போ relaxed ஆ வாழ்க்கை தொடுக்கும் கேள்விகளுக்கும் விடை தேடிக் கொண்டு இருக்கிறேன்.


 வித்தியாசமான டாபிக்..thank u Rohini Krishna

No comments: