#ஸண்டே_ஸ்பெஷல்.
#தனித்துவம்
சொந்தப் புராணம் எழுத வேண்டாம்னு பார்த்தால் விட மாட்டேங்கறீங்களே சார்..
தனித்துவம்..
இதுக்குள்ளேயே இருக்கு என்
"தனி" த்துவம்..
என் வழி தனி வழி..😃😃😃
தனித்துவம் ..இதே பொறக்கும் போதே இருக்கும் சிலருக்கு..
நமக்கு..அது..பாதில தான் வந்ததுனு நினைக்கிறேன்..
எங்க வீட்டுக்கு யார் வந்தாலும்..'அவங்க டாடா பை பை சொல்லும்போது..
" இன்னொரு முறை கண்டிப்பா வந்து இன்னும் நிறைய நேரம் இருக்கணும்னு "..
சொல்லிட்டு போவாங்க..
நம்ம விருந்தோம்பல் அப்படி..
சின்ன வயசில் சில வீடுகளுக்கு போகும்போது.. " எப்படா அந்த வீட்லேர்ந்து கிளம்புவோம்னு துடிப்பேன்..
அவங்க பேச்சு நடவடிக்கை எல்லாம் ஒரு விதமா கிட்டத்து உறவா இருந்தாலும்..ஒட்டவே ஒட்டாது..வெடுக் வெடுக் பேச்சு..செய்கைகள்..
So..சில வாழ்க்கையின் முக்கியமான நல்ல முடிவுகள் எடுக்க உதவின அவர்களை என்னிக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கேன்.
"Making our guests feel at home'..அது பொடிசா இருந்தாலும்.சரி..பொக்கவாய் பாட்டி தாத்தா வாக இருந்தாலும் சரி..clean bowled தான்.நம்ம அன்பென்ற மழையில நனைச்சு..ஜல்ப்பு புடிக்க வெச்சிருவோம்ல..💪💪💪💪
ஏதோ ஒரு வேலை புடிக்கலைனு வெச்சுக்கோங்க..for example..வெண்டைக்காய் நறுக்க பிடிக்காதுனு வெச்சுக்கோங்கோ..
அதுலேர்ந்து ஒரு #தத்துவம் #கவிதை /#vegetable craft யோசிப்பேன்..
#வெண்டைத்துவம்
தலையே போனாலும்
தளிகைக்கு தனிச்சுவை
கொண்டையிழந்த வெண்டையே
வாணலியில் வதங்கும் நேரம்
வலையில் மாட்டி முழிக்குமே
தயிரும் கொஞ்சம் சேர்க்க
தடையும் தாண்டி வெளிவருமே
தீயும் கூட்டிக் குறைக்க
தன் அடையாளம் மீட்குமே..
வெண்டையும் வாழ்வும் ஒன்றே
வழவழப்பு வறுவலாய் மாற
வாழ்க்கைப் பாடம் புரியுமே.
பிணையிலிருந்து விடுபடவே
பெரு முயற்சி தேவையே..😃😃😃😃😃😃
காயும் கட் ஆகும்..roast ம் ரெடியாகும்..
இது எப்படி இருக்கு ..என் தனி(த)த்துவம்.
வூட்டுக்காரர் ஏதாவது முக்கியமான விஷயம் or வேலை step by step ஆ சொன்னால்..
அதான் தெரியுமேனு ..அப்போதைக்கு தப்பிச்சு..ஜூட் விட்டுடுவேன்.
அதே வேலை செய்யணும்னு pressure வரும்போது..' நீங்க என்னமோ steps சொன்னீங்களேப்பானு".. கடுப்பேத்திங் மை லார்ட்னு ,வூட்டுக்காரர் ப்ரெஷர் ஏத்திடுவேன்..😃😃😃😃💪💪
முகத்தை திருப்பிட்டு போகத் தெரியாது..
விவேக் சொல்ற மாதிரி இன்னிக்கு செ..நாளைக்கு பா..
So live the present..அதுதான் நம்ம பாலிஸி..😃😃😃😃
பொண்ணுங்க கூட அடாவடியா சண்டை போட்டுட்டு..அப்பறம் போய் sorry da நு..டமால்னு கால்ல விழுந்திங்..😭😭😭😭
"அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்னு'..நிறைய சமயம் நகர்ந்துடுவேன்..எதுக்கு தேவையில்லாமல் எனர்ஜி வேஸ்ட் பண்ணிக்கிட்டு..prove பண்ண வேண்டிய அவசியம் என்ன?..💡💡💡💡
Arguments என்றால் கொஞ்சம் என்ன நிறையவே அலர்ஜி..
Healthy argument ஆ ஆரம்பித்து..harmony போய்டுமோனு கவலை உண்டு..🤣🤣
#வியந்த_தனித்துவம்.
இதைப் படிச்சதுமே என் கண்ணில் வந்து நின்ற ஒரே முகம்..
Super senior citizen இவங்க..
பதிவெல்லாம் ..சில சமயம் அனல் பறக்கும்..
மனசில இருப்பதை..அப்படியே கொட்டுவாங்க..
ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் புலமை பெற்றவர்..
பெண்ணும் பேத்தியும் இவர் உலகம்..
தன் அனுபவங்களை அழகாக எழுதி..நம்மை.ஆழமாகச் சிந்திக்க வைப்பவர்..
இந்த அகிலாவிடம் எப்போதும் அவர் கேட்கும் கேள்வி.." எப்போ வீட்டுக்கு வர?"..
கண்டுபிடிச்சிட்டீங்களா?..
She is none other than my beloved
Mythili Varadarajan mam..
No comments:
Post a Comment