Friday, October 6, 2023

Madhyamar- வீதி உலா

 பொட்டிக்கடை to boutique


சனிக்கிழமை வீதி உலா வரதுல எப்போதுமே ஒரு குஷி தான். நிறைய பேர் ஷாப்பிங் செய்யும் நாள். 

அதுவும் பேரம் பேசி ஒரு அஞ்சு ரூபா குறைச்சு கடைக்காரர்் தந்தார் என்றால் ஏதோ இமாலய வெற்றினு காலர் உசத்திப்போம்.


நானும் என் ஃப்ரண்டும் அப்படித்தான் நேத்திக்கு வீட்டில இருக்குற ஒட்டுப் போட வேண்டிய துணி ஒரு பையிலும் புதுசா தைக்க வேண்டியதெல்லாம் ஒரு பையிலும் எடுத்துண்டு கிளம்பியாச்சு.


மார்க்கெடல ஒரு சந்துக்குக்குள் ஒரு சின்ன டைலர் கடை. எந்த ஆல்ட்டரேஷனும் செய்யத் தயாராய் மண்டை ஆட்டினார். மொத்தமா அவர் கணக்கு சொல்ல பொங்கி எழுந்தா என் ஃப்ரண்ட். அவர் சொன்னதில் பாதி விலை தான் தருவேன்னு போராட்டம்.


 இப்படியே பேசி ப் பேசி ஒரு வழியா தான் நினைச்சதை சாதிச்சா. வெளியே வந்ததும் விழுந்தது எனக்கு வசவு. '

 கடைக்காரர் என்ன சொன்னாலும் தலையாட்டுவியா.பார் எப்படி நான் handle பண்ணேன்' என்றாள். பேசாமல் ஒரு ஸ்மைலிட்டேன்.

 (நானும் பேரம் பேசுவேங்க..ரொம்ப நல்லவ எல்லாம் இல்லை..ஆனா..அடி மாடு பேரம் பேசினால் எந்ற வூட்டுக்காரரு முரைக்கிற frame கண் முன்னாடி வந்து பயமுறுத்தும்..ஆமாங்கறேன்)


அடுத்த கடை ..ஒரு designer boutique. அங்கே  ஆங்கிலம் ஹிந்தியும் கன்னடமும் தமிழும் சரளமா பேசியபடி கடைக்காரரும் அவர் மனைவியும். இவளைப் பார்த்ததும் 'என்ன மேம் ரொம்ப நாள் ஆச்சு..வீட்டல எல்லாரும்..இப்படியே ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு ..இப்போ சொல்லுங்க..என்றார்.


இவள் கொண்டு சென்ற அத்தனை ப்ளவுஸுக்கும் இந்த ஸ்டைல், அந்த நெக், இதில் எம்பிராயிடரி பண்ணிடலாம்..இதுக்கு அழகா ஒரு பைப்பிங்..இந்த ப்ளவுஸுக்கு saree இலிருந்து கொஞ்சம் கட் பண்ணி க்ளாஸா தைத்துவிடலாம்னு அப்படி ஐடியா ஐயாக்கண்ணுவா சொல்லிண்டே போனார்.


என் தோழி அப்படியே மயங்கி ஹீராயின ்மாதிரி கொஞ்சம் கனவு சீன்ல போக..அவர் நீட்டின bill..கனவுலேர்ந்து straight ஆ 'கோமா'க்கு போய்ட்டா..

ஏம்ப்பா..எந்ற வூட்டுக்காரர் மாச சம்பளத்தையே கேக்குறீரேநு.

கண்ணீரும் கம்பலையுமா..ஆனா..இப்போ அந்த ப்ளவுஸோட கனவு வேற கண்டாச்சு..

எப்படி விட முடியும்.தலை கீழ நின்னு பார்த்தும் தம்படி கூட கம்மி பண்ண மாட்டேன்னுட்டார். தைச்சதுக்கு அப்புறம் சொல்வீங்கனு ..இது சார்ஜ் ஒன்னுமேயில்லைனு.


பில்லை வாங்கிண்டு பானி பூரி கூட சாப்பிட மனசில்லாமல் ..நடையைக் கட்ட..


நமக்குத் தான் கேள்வி கேட்காட்டி ஜனகராஜ் மாதிரி மண்டை வீங்கிடுமே..


அது சரி..அந்த பொட்டிக்கடையில போடு போடுனு போட்ட..இந்த boutique ல பொட்டிப் பாம்பா அடங்கிட்டே..அங்கே பிடிச்சதுல பல மடங்கை இங்கே விட்டியே..என்ன சாதிச்ச..'

எங்களுடன் மெளனமும் கூட நடந்தது.


யோசிப்போம்... பேரம் பேசணும்..இல்லைனா..ஏமாளினு பட்டம் எல்லா இடத்திலும் கிடைக்கும். ஆனால் இப்படி நிறைய இடத்தில் முரண்பாடா இருக்கோமே..


அது வெறும் ஒட்டு போடற வேலை..இதுல வெட்டணும் ஒட்டணும் ஓவரா வேலை பண்ணனும்னு சமாதானம் சொன்னாலும்..


நானும் யோசிக்கிறேன்.

No comments: