Friday, October 6, 2023

Madhyamar-சுய பர்சோதனை

 #சுயபரிசோதனை


நானே நானா..யாரோ தானா..மெல்ல மெல்ல மாறினேனா..

சுயபரிசோதனை செஞ்சு முடிச்சதும் இந்த பாட்டு பாட ஆரம்பிச்சுடுவேனா ..தெரியல..


ஆள் காட்டி விரல் யாரையோ காட்ட..மீதி நாலு விரலும் அமைதியா மடங்கி நம்மையே குறி வைக்க..மகளே..முதல்ல உன்னை சரி பண்ணு..அப்பறம் எதிராளியை.என்று அங்கேயே மண்டையில் அடிக்கும்.


சுய பரிசோதனை..


ஒரு பேப்பர் பென்சில் எடுத்து என்னோட ப்ளஸ் என்ன..மைனஸ் என்னனு எழுதலாமுனு முதல் அடி எடுத்து வெச்சேன்.

நீ நல்லவரு, வல்லவரு ..எல்லாம் தெரிஞ்சவருநு எழுதி முடிக்க..

இப்போ வா..மகளே..உன்னோட மைனஸ் எழுத..

"மைனஸா..எனக்கா..கண்ணுல மட்டுந்தாங்க மைனஸ்..மத்தபடி எல்லாம் ப்ளஸ்ஸுனு ஒரு ego . இதுதான்னுங்கோ ..நம்மை கொஞ்சம் ஆட்டிப்படைக்கிற ..படைத்த அசுரன்..

நம்மள சுத்தி வர ஈ யை..ஓட ஓட விரட்டறமாதிரி..இந்த ego வையும் U  GO ..என்று விரட்ட ப்ரம்ம ப்ரயத்தனம்.


அமைதிக்கு பெயர்தான் சாந்தி ..இந்த பாட்டை..

"அமைதிக்கு பெயர் தான் ராமசாமி..அந்த 

அலம்பலுக்கு பேர்தான் அகிலா" நு பாடலாம்..

அப்படி நாங்க..


"கேள்வியை நீங்க கேட்கிறீங்களா..நானே கேட்கட்டுமானு" ..நானே நானு என்று கேள்வியை கேட்பேன்.. ரொம்ப சிரத்தையா அவர் பதில் சொல்லும்போது..மண்டையில்..குழம்பை இறக்கணுமெ..குக்கர் ஆஃப் பண்ணனுமே..சித்திக்கு ஃபோன் பண்ணனுமே என்று அலை பாயும்.

நாள் ஆக ..நாள் ஆக..அவர் சொல்றதை குறைத்த போது தான் ..அடடே தப்பு எங்கேனு தோண.. இப்போ ..correction mode ல ..


2. இதுக்கு பணம் கட்டினியா..top up செஞ்சியா...

இப்படியே நம்ம conversations ஆகிவிட்ட காலத்த்தில்..romantic ஆ பேசாட்டாலும் வெறும் reminders ஆக மட்டும் இல்லாமல் நம்ம பேச்சு இருக்க வேண்டாமேனு  ஒரு fine tuning.


3. எல்லாரும் ஒரே மாதிரி perfectionist ஆ இருக்க முடியாது. பொறுமை என்னும் நகை அணிந்து ..பாட்டு அப்பப்போ மனசுக்குள் ஓட..

சுருக் கோவம், துடுக்குனு பேச்சு ..எல்லாம் குறைக்க ப்ரம்ம ப்ரயத்தனம். 


இப்படி லிஸ்ட் பெரிசா இருக்க..லைஃப் ஓடுகிறது.

ஒவ்வொரு நாளும் i am better than yesterday என்று சொல்லிக் கொண்டு ..


கடைசியில மாத்தி யோசி ஸ்டைலில்..

'உன்னைக் கேட்டுப் பார் நீ யாரென்று.. உன் வீட்டுக்காரர் சொல்வாரே நீ எப்படியென்று'

ராஜா சார் பாடலுடன் ..என் சுயபரிசோதனை தொடரும்...தொடரும்..தொடரும்

No comments: