ஏப்ரல் மே யிலே பசுமையே இல்ல..
( போன வருஷம் இதே சமயம் போட்ட பதிவு)
இந்தப் பாட்டைப் பொய்யாக்கும் மாணவர் பட்டாளம்..இப்போ ஆரம்பபிச்சாச்சு entrance exam fever. Board exam எழுதின பேனா இங்க் காயுமுன் ,காய்ந்து பஞ்சடைந்து தூக்கத்துக்காக ஏங்கும் கண்களோட மாணவரும்,மாணவிகளும் கல்லூரி நுழைய..கடும் போட்டியில் நடக்கும் நுழைவுத் தேர்வு.
mark வரும் பின்னே..காலேஜ்
அட்மிஷன் நடக்கும் முன்னே.
முன் ஜாக்கிரதை முத்தண்ணாவா நாங்க.
பாஸா ஃபெயிலானு தெரியறதுக்குள்ளயே பிடி சீட்டை..கட்டு பணத்தைனு எல்லா கல்யாணமும் முடிஞ்சிடும் பெங்களூரில்.
60% மேலே வாங்கணுமே..சீட் தங்கணுமேனு ஒரே கவலை மட்டும் இருக்கும்.
இது commerce சம்பந்தப்பட்ட படிப்புக்கு இங்கே நடக்கும் மேளா.
பழுத்த பக்தியில்அம்மாவும், அப்பாவும்.
முதல் நாள் சாயந்திரம் போய் முடி வெட்டிட்டு வந்த பவ்யமான boys. Jeansம் T- shirt strict ஆ no என்பதால் , kurti and Patiala suit ல் புதுசாய் தெரிஞ்ச பொண் குழந்தைகள்.
ஒரு பொட்டும் பூவும் compulsory நு சொன்னா கட்டாயம் வெச்சிண் டிருப்பாளேனு ஒரு சைடில் ஆதங்கம் என்னைப் போன்ற அம்மாஸ்க்கு.
அரைப் பரீட்சை க்கு கூட இனிமே ஆதார் கேப்பா போல இருக்கேனு புலம்பிய ஒரு மாமா. 'கண்ணா..நம்ம குடும்ப மானமே இதுல தான் இருக்குனு 'அஸ்திரமிட்ட பெற்றோர் சிலர்.
Reception counter ல..வெளியூர்க் காரங்களுக்கு side entrance உண்டா என குசுகுசுனு விசாரித்த ஒரு மஞ்சப்பை நபர்.
இவர்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்ட எனர்ஜி man , என் பெண்ணின் ஃப்ரெண்டோட அப்பா..super cool daddy.
டேய் ஆதி..இதுதான் உன்னோட life end இல்லடா..இது கிடைக்காட்டி ஒன்னும் பெரிசா இழைப்பில்லை..give your best confidentlyனு அவர் சொன்னது எனக்கு ரொம்பபிடிச்சது.கூட்டத்திலே ஒரு odd man out.
இங்கே entrance test, skill assessment, micro presentation நு ஒரு ஒரு லெவலில் வடிகட்டல்.
எல்லாம் முடிந்து சக்கையாய் வெளியே வந்த என் பெண்ணிடம் கேட்ட்டேன்..
என்னடா topics micro presentationலனு ..
குடுத்த நாலு தலைப்பில் இவள் எடுத்ததன் பேரைக் கேட்டதும் ஒரே ஆச்சரியம் எனக்கு..'ஜல்லிக்கட்டு '...அதான்..
உனக்கென்னடா தெரியும் அதைப் பத்தினு நான் பயந்துண்டு கேட்க..அவள் போட்டாளே ஒரு போடு..நீதான் இதப்பத்தி பேசிண்டே இருந்தியே..fb ல வந்தது..
.அதெல்லாம் தான் சொன்னேன்..புல்லரிச்சு போச்சு..(நன்றி..நன்றி..மத்யமர்களே)
ஜாம்பவான்கள் பதிவெல்லாம் படிச்சு கரைச்சு குடிச்சதை போய் கொட்டினது வீண் போகலை.
( ஜாம்பவான்கள்..யாருனு சொல்றேனு புரியும்னு நினைக்கிறேன். )
அம்மாக்களே..நாம ஊதற சங்கை ஊதிண்டே இருப்போம்..அவங்க கேட்கறதே இல்ல நம்ம பேச்சைனு பேசாம இருந்துடாதீங்க..they know where to use aptly..
இந்த தவிக்கும் மணிகளில் எனக்கு துணையா இருந்தது..என்னைக் கவர்ந்த அந்தக் கூண்டுக் கிளிகள் தான்..கீ..கீனு கத்திண்டு..ஃபோட்டோஎடுக்கறியே.
கொஞ்சம் இந்தக் கூண்டைத் திறந்து விடேனு கெஞ்சின மாதிரி ஒரு கலக்கம்..
பரீட்சை எழுதும் குழந்தைகள்..
பள்ளிக் கூண்டை விட்டு,கல்லூரிக் கூண்டு, வேலைக் கூண்டு...இப்படி அடுத்த கூண்டுக்குள் அடைய வரிசையில் நிற்கும் நம் இளைய தலைமுறை..
சுதந்திரமா கொஞ்ச நாள் பறக்கணும் இவர்களும்..வாழ்க்கையை ரசிக்கணும்..ஆசையோடு...
ஆதங்கதோடு..
Admission கிடைக்கணுமே என்ற கவலையில் ஒரு ordinary அம்மா..
No comments:
Post a Comment