Friday, October 6, 2023

Madhyamar-happy daughter's day

 Happy daughter's day..


#மகள் ..

அந்தப் பேரைச் சொல்லும்போதே..

'கள்' குடித்த மாதிரி இருக்கு இல்ல..


நம்ம வீட்டு #angels..

வளர வளர..

சொல்லிக் கொடுப்பாங்க..

பல..#angles..


#புதல்விகள்..

வாழ்க்கையில் ..கொடுப்பார்கள்

நமக்கு....'தில்'

நம் "dil" ( இதயத்தில்) என்றும் இருப்ப்வர்கள்..


#புத்திரிகள்..

நம் வாழ்வில் ..

ஒளியேற்றும்..

"#புதுத்திரிகள்'..


#இளவரசிகள்..இவர்கள்

இறைவன் ..

எமக்களித்த ஆசிகள்..


பட்டுப் பாவடை உடுத்திய

பட்டாம்பூச்சிகள்..


மனதில் நினைக்கும்போதே..

மத்தாப்புகள்..தோன்றுமே..


சும்மா..அதிருமில்ல..

சுத்தி இவர்கள் இருக்கும்போது..


🌟 நட்சத்திரங்கள்..

நிலவிலிருந்து..

மண்ணில் நடக்கும் அதிசயம்..

மகள்கள் மூலம் கண்டேன்..


❤️ அன்பும் அதிகாரமும்..

அளவாய்க் கலந்த கலவை..

அப்பாவின் செல்லம் தான்..

அருமைப் புதல்விகள்..எப்போதும்..


 தளர்ந்து போக முடியாது..

 தூணாக இவர்கள் இருக்க..


மகள் என்பது வரம்..

மறுபிறவி ஒன்று  இருந்தால்..

இவர்கள்..

மகளாக நான் பிறக்கணும்..

மகிழ்ந்தே என்றும் இருக்கணும்..


Feeling blessed Amma Akila..🙏💐


Happy daughter's day to all the wonderful daughters here in Madhyamar💐🍨🍿

No comments: