Friday, October 6, 2023

Madhyamar- ஐம்பதிலும் ஆசை வரும்

 #ஐம்பதிலும்_ஆசை_வரும்..


குண்டக்க மண்டக்கனு நோ யோசிச்சிங்😁😀


அட ஆமாங்க..அரை சதம் அடிச்சாச்சுனு இனிமே நமக்கு படிப்பெல்லாம் வருமானு கொண்டிருந்த நான்..


Facebook புழுவா இருக்கும்போது..வா..face பண்ணு ஒரு பரீட்சையை என்று என் தம்பி பெண் ,அவள் online free course படிச்ச certificate என்ற கேரட் காட்ட..


நீயும் ஏன் படிக்கக்கூடாது..வா நான் உனக்கு help பண்றேன்னு ..என் பொண்ணு சொல்ல..


ஒரு இன்ப படிப்புப் பயணம்.


Law learners online free courses..

இது படிக்கிறயா..அது படிக்கறயா என்று options இருக்கு.

நான் என் மனசுக்கு பிடித்த ஒரு topic select செய்தேன்..


20 pages தான். 

4 modules ஆ நமக்கு மெயிலில் வரும்.


முதல் 2 module வந்ததும்..சுடச் சுட படித்தேன்..


3 ,4 வந்து விழுந்தும்...' படிக்கலாம் படிக்கலாம் ' இப்போ என்ன அவசரம்னு இருந்துட்டேன்..


Assignment எழுதி அனுப்பணும்..


நானும் கெஞ்சி கூத்தாடினேன்..என் பொண்ணுகிட்ட.." அவல் உப்புமா பண்ணித் தரேண்டா..assignment எழுதிக் கொடுத்துனு' 

மசிய மாட்டேன்னுட்டா..இது உன் படிப்பு ..நீயே தான் செய்யணும்..

"முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும்'..

மசிய மாட்டேனுட்டா..


ஆச்சு..இன்னும் ஒரே நாள்..


வலது கரம் வரலைனு ஃபோன்.. அன்னிக்குனு வேற ஏதோ வேலை வேறெ..


எல்லா வேலையும் முடிச்சுட்டு படிக்க உட்கார்ந்தால்..தூக்கம் சொக்கறது..


" அம்மா படிக்கிறேன் இல்ல..ஒரு ginger tea போடுடானு" பொண்ணுக்கிட்ட சொல்லிட்டு..நான் கொர் கொர்னு குறட்டை..


படிக்காமல் ,எழுதக்கூடாதுனு ஒரு வைராக்கியம்..

அப்பா..20 pages பாடம் படிக்க முடியலையேனு மண்டைக்குள் சுர்ருனு தோணித்து..


இஷ்ட தெய்வமெல்லாம் வேண்டிண்டு , question paper மீண்டும் படித்தால்..படிச்சது எதுவுமே எங்கே இருக்குனு புரியல..( வயசாயிடுத்தோ..பகீர்னு பயம்)


நல்ல வேளை..மனப்பாடம் எல்லாம் கிடையாது.. Only write in your own words..


So, akila தப்பிச்சிங்..


அடுத்த பெரிய கஷ்டம்..typing ..நமக்கு இப்போ smileyம் , short cut words எழுதியுமே பழகியாச்சா..

👅 நாக்கு தள்ளிங்..


அப்பாடா..

11 pm submission.. 

10.49 pm ..submit பண்ணிட்டேன்..


Certificate ஒரு வாரத்தில்..


ஆஹா..எனக்கே எனக்கா..😀😀


நிறைய கற்றேன் இந்த 20 நாளில்..20 பக்க படிப்பில்..


💪படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை

💪நிறைய free online courses.


 இருக்கு..சேர்ந்து படித்து நம் knowledge வளர்த்துக் கொள்ளலாம்.


💪 Last minute வரைக்கும்  காத்திருக்காதே..முடிச்சு வை..பசங்களுக்கு சொன்னது...நமக்கே திரும்பி வரும்.


💪Plan for contingencies.


ஆஹா..certificate ஒண்ணு இப்போ என் folder ல் added.


இந்த லாக்டவுனில் , unlocking my potentials..

 இது நான் கற்ற பாடம்..

அப்பறம் சொல்லவே இல்லையே..நான் என்ன topic படிச்சேன்னு..


#Laws_relating_to_protection_of_women' ..

இது எப்படி இருக்கு..😀💪


அதனால்..


கிடைக்கும் வாய்ப்பை..வயது என்ற காரணம் சொல்லி நழுவ விடாதீர்கள்..


செலவில்லாமல் படிப்பு..

சேமிக்கலாம் ..உங்க அறிவுக் கிடங்கை.🎵🎤🎺🎸


https://www.thelawlearners.com/


அன்புடன்

Akila


No comments: