Thursday, June 17, 2021

நல்ல பேரை

 நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..

#நம்_நாடு_என்னும்_தோட்டத்திலேநாளை_வளரும்_முல்லைகளே


என் தோழிக்கு ஒரே பையன். ஆறு வயது. சித்தார்த் என்று பெயர்.

ரொம்ப சூட்டிகை சேட்டை..சமத்து..


அவள் மாமியார் பல நோய்களால் அவஸ்தைப் பட்டு ஒரு சில நாள் முன் காலமானார்.


மயானத்துக்கு கிளம்ப இருந்த வேளை..


அவன் ஒரே அழுகை..என்னனு கேட்டால்..

' பாட்டிக்கு gun salute' எங்கே என்று?


என் தோழியின் அப்பா..அவர்கள் குடும்பமே இராணுவத்தில் பணி புரிந்தவர்கள். அவன் இதுவரை பார்த்த கடைசிப் பயணங்கள் இந்த மரியாதைகளுடன் தான்.


அவனை சமாதானப் படுத்திய என் தோழி' சித்தார்த்..

'நீ அந்த மரியாதையை சம்பாதிக்கணும்.'.( you have to earn the respect. its not as easy as earning money 'என்று சொன்னாள்.


இந்தச் சின்னப் பையனுக்கு என்ன புரியும் என்று நான் ஒரு கேள்விக் குறியோடு பார்த்தேன்.


'அம்மா..when i die i want  my cap and medals to be kept on my trunk box  and mainly i want that  gun salute.. I will earn that '   என்றானே பார்க்கணும்..


வாயடைத்து போய் நின்றேன். 


காலச் சக்கரத்தில் இவன் கனவுகள்.. இலக்குகள் மாறலாம்.


இன்று அவன் பேசிய வார்த்தைகள் ஏனோ என் காதுகளில் ரீங்கரித்து கொண்டே இருக்குறது..


 Squadron leader Siddharth

Colonel siddharth..

சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.

No comments: