Tuesday, June 15, 2021

பூபாளம்...இசைக்கும்..

 பூபாளம்...இசைக்கும்..


இளங் காற்று  இசைபாட

கூவிக் குயில் அழைக்க..

பூக்கள் சோம்பல் முறிக்க..

காலை நடைத் துவக்கம்.


சுப்ரபாதமும் சினிமாப் பாடலும்

சத்தமாய் அலறிய தள்ளுவண்டிகள்

காயும் பூவும் கட்டவிழ்த்து

கடவுளை வேண்டும் வியாபாரிகள்


'coffee mane'க்கள் க்யூவில்

கால்கடுக்க  காப்பி பிரியர்கள்

கைப்பேசியில் கட்டளை இட்டபடி

கணிணி உபாசகர்கள்..


கைக் கோர்த்து நடந்தபடி

காலத்தை அசைப்போட்ட முதியோர்கள்

புகார் பல சொல்லியபடி

பொரிந்து தள்ளிய மனைவிகள்..


கையும் காலும் முறுக்கியபடி

கடும் பயிற்சியில் ராம்தேவ் பாபாக்கள்

காலைக் கடன் முடிக்க

எசமனை இழுத்த செல்லக் குட்டிகள்


வாசல்கள் எல்லாம் வழியடைத்த

வால் சுருட்டிய  வாண்டுகள்

வாயைப் பிளந்த கொட்டாவியுடன்

வாய் மூடா பொதிமூட்டையுடன்

வரப் போகும் பஸ்ஸுக்காக.


சூரியனும் சுறுசுறுப்பாக

சுற்றியது போதுமென்றெ

வேகமாய்  வீடு வந்தேன்

வீதி் உலா முடித்தபடி.

No comments: