#மருந்தாகுமே_மதிய_உணவும்..
தண்டு ஒண்ணு வாங்கி வந்தேன்..வாழைத்
தண்டு ஒண்ணு வாங்கி வந்தேன்..
துண்டு துண்டா நறுக்கி வெச்சேன்.
துளி உப்பை போட்டு வேக வெச்சேன்..
தாளித்து எடுத்து வைத்தேன்..
தேங்காய் சேர்த்து வதக்கி வைத்தேன்..
பாகப் பிரிவினையும் செய்தேன்..
பங்கில் ஒன்றில்....தயிர்
பச்சடி செய்தேன்..
பொரித்த வேப்பம்பூ ரசத்துடன்..
பாசத்துடன் பரிமாறினேன்..
பாத்திரமெல்லாம் காலியாச்சே..
பார்த்துப் பார்த்து கவனிப்பதில்
பெண்களைப் போல யாருமுண்டோ.
பத்தியமும் படைப்பாள்..கூடவே
பஜ்ஜியும் பொரிப்பாள்..
Work from home செய்வோருக்கும்..
Vacation ல் இருப்போருக்கும்..
வலது கரத்துக்கும் விடுப்பளித்து
வழக்கம்போல வேலை செய்யும்..
வீட்டுப் பெண்களை ..
வாழ்த்துவோம்..வாழ்த்துவதோடு..
வேலையிலும்.. பங்கும் கொள்வோம்..
No comments:
Post a Comment