Thursday, June 17, 2021

Madhyamar-முதல் அனுபவம்

 #முதல்அனுபவம்


2012. மே மாதம். ஸ்கூலில் இருந்து prize  ம் ,பையுமா ஓடி வந்தாள் என் பெண். இரண்டு certifcate, 2 புக் . புக்கைத் திருப்பி பார்த்தேன். கங்கை ஆற்றைப் பற்றி ஒருவர் பக்தியோடு, தேசப் பற்றோடும் இந்தியில் எழுதிய கவிதைத் தொகுப்பு. free ஆ school க்கு distribute பண்ணச் சொல்லிட்டார் போல இருக்கு. அதனால் 2புக்கும்.ஒரே புக்..அவரே publisher ம் கூட..


திடீர்னு எதோ ஐடியா தோண ,வீட்டுக்காரருக்கு ஃபோன் போட்டு சொன்னேன்.

'. உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..இந்த வேலையெல்லாம் அவர் எப்படி செய்வார்..எங்கியாவது போய் வாங்கிக் கட்டிண்டு வராதேனு ஒரே அட்வைஸ்..


ஒரு சுப முகூர்த்த நாளில் அந்த writer cum publisher கிட்ட போனேன் ..என் மாமியார் தங்கமணி சிவபெருமான் மேல் தினமும் எழுதிக் குவித்த கவிதைகளை எடுத்துண்டு.

  publishing க்கு வந்திருக்கேன் என்று சொன்னதும் வாயெல்லாம் பல்லானவர், பல்பு வாங்கின மாதிரி ஆனார் நான் நீட்டிய தூய தமிழ் கவிதைகளைப் பார்த்து.


'.yeah kaunsi basha mein hai  ...

நான் ரொம்ப பெருமையா இது தமிழ் என்றேன்..behenji yeah nahi ho payega..sorry. aap Chinnai ( Chennai அப்படி அழுத்திி தான் சொல்வா அங்கே எல்லாம்.. 

ரொம்ப ஏமாற்றத்தோட வீடு திரும்பின கொஞ்ச நேரத்தில் அவரிடமிருந்து ஒரு SMS. I am ready to take this project. 


தமிழ் வாசமே இல்லாத தேவ பூமி தேஹ்ராதூனில் , முதல் முதலாக ஒரு தமிழ்ப் புத்தக அச்சடிப்பு துவக்கம்.

அங்கே யாருக்கும் தமிழ்,தமிழ் font எதுவும் தெரியாது. நாங்கள் சொன்னாலும் இது முடியாது என்று ஆரம்ப கட்ட எதிர்ப்பு.


 முதல் கட்ட பிழை திருத்தங்கள் . 

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் புத்தக வேலை நடப்பு. தினமும் proof reading. correction. correction க்கு correction. 


ஒவ்வொரு எழுத்தும் பார்த்து பார்த்து பத்தி பிரித்து ..இது நடக்குமா என்று கவலை வந்தாலும்..முன் வைத்த காலை பின் வைக்காமல் முட்டி மோதி துரிதமாக வேலை நடக்க..


தங்கமணி அம்மாவிடம் ( என் மாமியார்) சொன்னதும், தனக்கே உரிய அடக்கத்தோடு ' அதெல்லாம் எதுக்கு செலவு அகிலா.. blog போதும் எனக்கு' ..நீயும் அலையாதே மழையிலெல்லாம்..( அது மழை கொட்டும் காலம் அப்போ)..அந்த வாஞ்சை..


அப்பப்பா..இதுக்கே  இவளுக்கு ஏதாவது செஞ்சுடணும்னு ஒரு வைராக்கியம். 


அட்டை கலர் selected. படம் வேணுமே..அந்த publisher நிறைய modern art of Shiva எல்லாம் காண்பிச்சு அதுக்கு தனி ரேட் பேசினார்.

 திடீர்னு ஒரு ஐடியா எனக்கு..' ஐஷு ..நீ தான் drawing பண்ணுவியே..simple ஆ நம்மூர் கோயில் கோபுரம்..ஒரு சிவ லிங்கம் try பன்ணு என்றேன்..அவள் வரைந்த்தது அட்டைப் படமாய் அச்சில்.


 தங்கமணிக்கு ஏக சந்தோஷம்.

அந்த வழ வழ புத்தகத்தின் முதல் பிரதியை, 'என் பணி அரன் துதி' என்ற தலைப்பிட்ட அந்த புது புத்தக வாசத்தை முகர்ந்த முதல் அனுபவம். 


இது நம்மால் முடியுமா என மலையாய் நினைத்த செயல்..பனி போல உருகி கையில் .

ஆனந்தக் கண்ணீர்.


book publishing..மிக எளிமையான முறையில் tupkeshwar சிவன் கோயில் சன்னதியில் .

இடியும் மின்னலும் இசை பாட கொட்டும் மழைத் துளிகள் பூமாரி தூவ..


புடவைகள் எத்தனை வாங்கித் தந்த போதும் ..இந்த புத்தகத்தை..அவள் எழுத்துக்களை அவள் கையில் கொடுத்தபோது கிடைத்த சந்தோஷ அனுபவம்..

மனது வைத்தால் மாமலையும் ஓர் கடுகாம் என்பதை உறுதிப் படுத்திய அந்த முதல் அனுபவம்..


அவள் கண்ணில் சந்தோஷத் துளிகள் எட்டிப் பார்த்து பெருமையுடன் என்னை கட்டித் தழுவிய தருணம்..


அந்த publisher க்கும் முதல் அனுபவம்..ஹிந்தியைத் தவிர முதல் முதலாக வேறொறு மொழியில் அச்சிட்ட பெருமை. இனிமேல் எந்த மொழியிலும் அச்சிடுவேன் என்று அவருடைய comfort zone லிருந்து வெளியே வந்த முதல் அனுபவம் அவருக்கும்

No comments: