Thursday, June 17, 2021

Madhyamar-language

 Language பற்றி Shyamala Raghavendra mam post..என்னை கொஞ்சம் பின்னோக்கி பார்க்க வைத்தது.

மீள் தான்..என் சொந்த கதை..சோகமில்லா..சந்தோஷக் கதை.


மனிதர்க்கு மொழியே தேவையில்லை..' மொழி படத்தில் வரும் பாட்டு...


இந்த பாட்டு..எப்போது கேட்டாலும் என் இதயம் போகும் பின்னோக்கி..

காவேரிக் கரையிலே வளர்ந்த சிறுபெண்.(அட நாந்தேன்்)..பட்டணம் பார்க்க கிளம்பினா..

மதராஸப் பட்டினம் அன்புடன் வரவேற்க..இன்னாமா எங்கே போவணும் ..என் ஆட்டோல குந்துனு ஆட்டோகாரர் அடம் பிடிக்க..மலங்க மலங்க சித்தியின் தலைப்பில் ஒளிந்தபடி செல்ல..வீடு வந்தது..சில்லறை தேட..இன்னாமா..காலங்காத்தால ..சரியான சாவு கிராக்கி...வசை பொழிய..(2 ரூபாய் சில்லரை சரியாக கொடுத்ததால் வந்த கோபம் )..இப்படியே மதராஸ் பாஷை....mother tongue ஆனது..


படிப்பு முடிய வேலை கிடைக்க..அடுத்தது..கல்யாணந்தான்..Delhi பையன்.. ஐயோ சாமி.. prathmik exam.. எதோ fluke ல பாஸ் பண்ணோம்..இது என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை ஸ்டைலில் வடக்கு நோக்கிப் பயணம்... (அப்ப வேறு மெளன ராகம் படம் வந்த நேரம்..அந்த சர்தார்ஜி role எனக்கு ரொம்ப பிடிக்கும்)..கடைக்கு போகனும்னா..கைகால் உதறும்..கரோல்பாக் கடைத் தெருவில் , கடைக்காரன் 60 ரூபா சொல்வதை..பயங்கர ஹிந்தி பேசி 70 ரூபா வில் வாங்கி வெற்றிப் புன்னகை புரிய....ஏன் இவன் நம்முளப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்கிறானு..விவரம் புரியாம..ஐயோ பயங்கர bulb .


.அடுத்து இந்த time சொல்றது ..ஹிந்தி ல 11/2 மணியை சாடே ஏக் நு (daid nu சொல்லனுமாம்)சொல்லி அது தனி bulb..


இப்படி தட்டுத் தடுமாறி ஏ வகையறா ..ஓ வகையறானு சொல்லியே..காலம் ஓட  .. அடுத்த ஊர் மாற்றம்..

நிமாடி பாஷை பேசும்,  நர்மதை நதியும், விந்திய மலையும்..அங்கங்கே கண்ணில் படும் ஓரிரண்டு மனிதர்களும்.. மண்டலேஷ்வர்..madhya pradesh ..(அலை பாயுதே movie  shooting  இங்கே தான்)

ஆத்தா சந்தைக்கு போயிருக்கு ஸ்டைலில்...நானும் வாரச் சந்தை போக..'காந்தா லோ காந்தா லோ'..நு ..என்னனு பார்த்தா..நம்மூர் வெங்காயம்.. 

வேலை செய்யற மன்னு பேசற ஒரு மண்ணும் முதல்ல பு்ரியல...வெறும் தலையாட்டல் தான் பதில்.


 ஆனால் ...இப்படி வாழ்க்கை ஓடம் போக..அடுத்த இட மாற்றம்.. west Bengal ல ஒரு குக்கிராமம்...ஊரே கடுகெண்ணையும்..மீன் வாசமும்..kothay, ki, Ami,bhalo..shundhar..இப்படி ஒரு நாலு வார்த்தை கத்துண்டு அலம்பல் பண்ணிய காலம்...இரண்டு வருஷம் ஓடிப்போச்சு..


அடுத்து மாற்றம் இமயமலை அடிவாரம்,. dehradun..garhwali மொழி.. ஆனால் என் ஹிந்தி கொஞ்சம் செப்பனிடப்பட்ட இடம்..(ஆனாலும்... அந்த ka,kha சரியா இன்னும்  வரல..shah rukh khan..அவர்கள் அந்த kha  வை உபயோகப்படுத்தும் அழகே தனி..

எல்லாம் போக இப்பொ கன்னட பூமி..எப்படியாவது கன்னடத்தை கத்துக்கனும்னு முயற்சி.. (விக்கிரமாதித்தன் நினைப்பு)..


ஆட்டோ ல ஏறினேன் ஒரு நாள்..அந்த ஓட்டுனரிடம்...இல்லி ஹோகு..அல்லி பேட. .கொத்தில்லா..எல்லாம் என் Kannada barathe.app சொல்லிக் கொடுக்க.. ஒரே வெற்றிப் புன்னகை..ஆட்டோ லேர்ந்து இறங்கும் போது அந்த டிரைவர்..madam..நான் தமிழுதான் என்றாரே பார்க்கணும். செம்ம bulb..விட்டேன் ஜூட்..

No comments: