#உயர்ந்த_உள்ளம்
#குட்டிக்கதை
சுந்தர்நகர்..ஒடிஷாவில் எந்தப் புயல் வந்தாலும் முதலில் பாதிக்கப்படும் கிராமம் அதுதான். புயலின் சீற்றம்..மீண்டு எழுவதற்குள்..அடுத்தது வந்து விடும்.
ப்ரேம்..பதினாறு வயது இளைஞன்
அம்மாவையும் தங்கையும் காப்பாற்ற ..சென்னை பட்டணம் கிளம்பி விட்டான்.
அவன் தோழன் சஞ்சய் இருக்குமிடம் தேடிச் சென்றான்.
மெட்ரோ வேலையில் அவனும் ஒரு நாட்கூலியில் வேலை செய்பவன்.
அவன் சொல்லி பல இடங்களில் வேலை செய்தான். ஒரு ஓட்டலில் வேலை செய்தபோது, அங்கே அடிக்கடி வரும் வாடிக்கையாளர் ஒருவர் பழக்கமானார்.
'ப்ரேம்..எங்க அபார்ட்மெண்ட்டில் நிறைய கார்கள் இருக்கு..ஒரு கார் நீ சுத்தம் செய்தாலே ஐநூறு கிடைக்கும்..'அட்ரஸ் கொடுத்துவிட்டு..' நாளைக்கு வா..என் ஃப்ரண்ட்ஸிடம் சொல்லி உனக்கு வேலை வாங்கித் தரேன் ' என்றார்..
இவன் சுத்தமாக வேலை செய்வதைப் பார்த்து..அந்த அபார்ட்மெண்ட் டின் எல்லா கார்களின் துடைக்கும் வேலையும் அவன் கையில் கொடுத்தார்கள்.
சம்பளப் பணத்தில் பாதியை அம்மாவுக்கு மாசா மாசம் அனுப்பினான்..
..அங்கு ஃப்ளாட்டில் இருக்கும் எல்லாருக்கும் ஓடி ஓடி முகம் சுளிக்காமல் வேலை செய்தான்..
அங்கேயே அவனுக்கு ஒரு ரூம் கொடுக்க..அவன் ஓட்டம் ஓடியபடி இருப்பான்.
ப்ரேம்..பேருக்கு ஏற்றாற்போல எல்லாரிடமும் அன்பாகப் பழகும் ஒரு இளைஞன் 👨.
அவனை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள் அந்த அபார்ட்மெண்ட் மக்கள்
. தங்கை திருமணம் நடந்தது. அம்மா மட்டும் இங்கே வர மறுத்து விட்டாள்.
உயிரும் விட்டாள்.
மனசு முழுதும் அம்மா சொன்ன வார்த்தைகள்
" எங்கே இருந்தாலும் ஒழுக்கமா நடக்கணும்..நல்ல பேர் எடுக்கணும்..நாலு பேருக்கு உதவி செய்யணும் நீ'..
அவனுக்கு உந்து சக்தி அதுதான்
அந்த அபார்ட்மெண்ட்டுக்கு புதிதாக ஒரு வயதான அம்மாள் குடி வந்தாள்.
"யாரு நீ.." .....ப்ரேமை.. அதட்டினாள்
' நான் உன்னைக் கூப்பிட்டேனா இங்கே..போய் உன் வேலையைப் பார்" கத்தினாள்.
அந்த அம்மாவின் பெயர் புஷ்பா.
அவளுக்கு ஏனோ ப்ரேம்மை பிடிக்கவே இல்லை.. அவனை வெளியே அனுப்ப வேண்டுமென்று சண்டை பிடிப்பாள்..
'எங்கம்மா வயசு..போனால் போகட்டும் .
அவங்களுக்கு மனசில என்ன உளைச்சலோ? ' நினைத்துக் கொள்வான்.
'
புஷ்பா அம்மாவின் குரல் சிறிது நாளாக கேட்காமல் போக ..
விசாரித்ததில் ..அவர்கள்
உடம்பு சுகமில்லாதது தெரிய வந்தது. அமெரிக்காவிலிருந்து அவர் ஒரே மகன் வரப்போவதாக பேசிக் கொண்டார்கள்.
மனசு கேட்கவில்லை ப்ரேமுக்கு.
மெதுவாக அவர்கள் ஃப்ளாட் அருகில் சென்றான்..
அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ் கதவைத் திறக்க..
கத்தி ஊரைக் கூட்டப் போகிறாள் என்று நினைத்தவனுக்கு..
வா..என்று தலையசைத்து கூப்பிட்டாள்.
அவனால் நம்பவே முடியவில்லை..
மிக இளைத்திருந்தாள்..சோர்வு கண்ணிலும் உடலிலும்..கண்ணிலிருந்து நீர் மட்டும் வழிந்தபடி..
வயசாச்சு..பாவம்..ஒரு பயத்தில் யாரையும் சேர்க்காமல் இருந்திருப்பாங்க..ப்ரேம் சமாதானப் படுத்திக் கொண்டு..தினமும் அவர்களைச் சென்று பார்ப்பான்.
அடுத்த வாரம் அவர் மகன் வந்துவிடுவார்.
ஆனால்..அதுவரையில் காத்திருக்க புஷ்பா அம்மாவின் உடல்நிலை இடம் கொடுக்கவில்லை..
கண் மூடினார்..
நியூயார்க் நகரத்தில் வைரஸ் தொற்று பரவ. அனைத்து விமானமும் ரத்து செய்யப்பட்டது.அவர்கள் மகன் வருவது கேள்விக் குறியான வேளை..
' யார் இவங்களுக்கு ....செய்யறது'..
அபார்ட்மெண்ட் குடிவாசிகள் குழம்பிய வேளை..
" நான் செய்யறேன் சார்..அம்மாவுக்கு இறுதி மரியாதை'
ப்ரேம்மின் குரல் ஆச்சரியப் படவைத்தது எல்லாரையும்..
அவர்கள் மகனும் ஒப்புதல் அளிக்க..
புஷ்பா அம்மாவின் இறுதிச்சடங்கை முடித்து விட்டு வந்த ப்ரேம்மின் அழுகை சத்தம்..அந்த அபார்ட்மெண்ட்டையே கலங்க வைத்தது..
தன் சொந்த அம்மாவுக்கு செய்யமுடியா விட்டால் என்ன?..
இந்த அம்மாவுக்கு செய்ய முடிந்ததே..🙏🙏
..
No comments:
Post a Comment