Thursday, June 17, 2021

மத்யமர்_என்_பார்வையில்_2019

 #மத்யமர்_என்_பார்வையில்_2019


பழைய டைரியை புரட்டிப் பார்க்கும் சுகமே தனி.

அசை போட ஆயிரம் விஷயங்கள்.


ஏதோ group நு  உள்ளே நுழைஞ்சு ,அதோடு glue ஆன கதை என்னுடையது.


"என்ன மத்யமரா..?

மத்யமர் ஃப்ரண்ட்ஸ் தான் இப்போ ஸ்பெஷல் உனக்கு..

இந்தப் பேச்சு.. 

் இந்த பெருமூச்சு..கொஞ்சம் புகை வாசனையோடு.. வீட்டிலும் வெளியிலும் இப்போது.😁


Extend ஆகிக் கொண்டே போய்க் கொண்டிருக்கும் ஒரு அன்பு நட்பு வட்டம்..


#கற்றதும்_பெற்றதும்

*எழுதுவது எப்படினு கற்றுக் கொடுத்த தளம்.


* ஒரு வட்டத்துக்குள் சுற்றாமல் , வெளியே வா..சிறகை விரி என்று கூப்பிட்ட தளம். ஊக்குவித்த நட்புள்ளங்கள்


*comedy post எழுத கற்றேன்.


* வீடியோ செல்ஃபி போடக் கற்றேன். 


*மீம்ஸ் ..என் பொண்களுக்கு இப்போ க்ளாஸ் எடுக்கற அளவுக்கு முன்னேற்றம்.


* appreciate and acknowledge..அந்த தாரக மந்திரம் தெரிந்திருந்தாலும், அதை பழக்கமாக்கியது இந்தத் தளம்.


*அன்பு அன்பு அன்பு ..இந்தத் தளத்தின் அடித்தளம்.


*மனம் திறந்து தைரியமாக இங்கே வந்து கொட்டித் தீர்க்கலாம்.


* எதைப் பார்த்தாலும் ,கேட்டாலும் இதை மத்யமரில் எப்படி எழுதலாம் என்று எப்போதும் மண்டையில் ஒரு type writer அடித்துக் கொண்டே இருக்கே..

உங்களுக்கும் அப்படித்தானே?😁


*வூட்டுக்காரரை கிண்டல் ப்ண்ணி போஸ்ட் போட்டுட்டு ,அவருக்கே அதை படிச்சு காண்பிக்க தைரியம் கொடுத்த தளம்😁


POTW ,GEM லிஸ்ட் வரும்போதெல்லாம் நம்ம பேரு இருக்கானு ஒரு ஜொள்ளு எப்போதும் உண்டு.


என்னோட POTW certificate ஐ cover photo வாகப் போட்டபோது ,இது என்ன பெரிய ப்ரஸிடெண்ட் கிட்டேர்ந்து வாங்கின மெடலா என்று கேலி செய்து என் நட்பை துண்டித்த ஒருவர்..

போனால் போகட்டும் போடா..இந்த பூமியில் மத்யமர் போல் வாழ்வது யாரடானு அதுக்கும் மை.வா. பாட்டு ஓடியது.( ஆதி அந்தம் கிளற வேண்டாமே🙏)


*எழுத்துப் பாசறை உருவாகி விட்டது.

இன்னும் அட்மின் டீம் கொண்டு வர நினைக்கும் நலப் பணிகளுக்கும் அணிலாய் இருந்து உதவ இந்த அகிலா ஆவலாய் உள்ளேன்.


"காலம் மாறலாம்..நம் காதல் மாறுமா?'

இதே பாட்டு மத்யமருக்கும் பொருந்தும்.


ஓடாய் உழைக்கும் அட்மின் டீமுக்கும் மாடரேட்டர்களுக்கும் என் வந்தனம்🙏🙏


https://m.facebook.com/groups/788208064700343?view=permalink&id=849181088603040

No comments: