Thursday, June 17, 2021

Madhyamar-மீட்போமா_மறந்த_வசந்தத்தை

 எச to Jothi Lakshmi


குழந்தைகளிடம் மனம் திறந்து பேசுவது பற்றி அருமையான பதிவிற்கு என் எச


#மீட்போமா_மறந்த_வசந்தத்தை


ஆளுக்கொரு சாவி

அவரரவர் அறையில் வாசம்.

அடுப்பங்கரை அரட்டை போய்

ஆச்சு சாப்பாடு என்றாலும் app ல் அழைப்பாச்சு.


ஊட்டி வளர்த்த காலம் போய் ...uber eat காலமாகலாமோ?

swiggy இங்கிருக்க

சமையல் எதற்கென்று விளம்பரத்தில்

சொல்லும் அம்மா..

சொல்லுங்கள் நிஜத்தில் உண்டோ?


snapdeal இங்கிருக்க shopping எதற்கென்று சோம்பேறி ஆனோமோ?

myntra வின் தந்திரம் ..மந்திரமும் ஆனதோ?

Amazon prime ..amazing ஆக இருக்க

amusement அறைக்குள்ளே..

Netflix வலையில் விழுந்து..flexibility போய்..obesity ஓவராச்சோ?


கையளவு மனதை ..கைக்குள் ளிட்டு அடக்குமோ..கைப்பேசி யெனும் காலன்?


கலந்து பேசி களித்ததெல்லாம்

கானல் நீராகிப் போகுமோ?


தொழில்நுட்ப வளர்ச்சியிங்கு

தூரமாக்கலாமோ உறவுகளை..?

பலமா பலவீனமா..

பட்டி மன்ற பேச்செதற்கு?

திருந்த வேண்டியது நாம்தானே?

தூற்ற்ல் ஏன் தொழில்நுட்பத்தை.


காலமினி கடத்தாமல்

களத்தில் இறங்கிடு்வோம்

கடந்த காலம்  மட்டுமல்ல.

காணாமல் போன கலகலப்பையும் மீட்டிடுவோம்.

அன்புடன்

Akila

No comments: