#வீடு
#குட்டிக்கதை
"பகவானே..இந்த மாசம் லம்ப்பா ஒரு அமெளண்ட் வர மாதிரி ஒரு கிராக்கியும் இன்னும் கிடைக்கலையே..கொஞ்சம் கருணை காட்டுப்பா..:
சுவாமி ரூமிலிருந்து கவலையுடன் வெளியே வந்தவரை...
"என்னங்க..இந்த மாசம் இன்னும் வீட்டு வாடகை, மளிகை, ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் கட்ட்ணுமே ..எப்படிங்க ச்மாளிக்கப் போறோம் ..?
மனைவி சங்கீதாவின் குரல் சோக கீதத்தில் ..வீட்டு ப்ரோக்கர் ரமணனனை இன்னும் பயமுறுத்தியது..
' நானும் நாள் பூரா அலையறேன்..வீடு காண்பிக்கிறேன்.. ஃபோன் பண்றேன்னு சொல்றாங்க..அப்புறம் வீட்டு ஓனரும் வீடு பார்க்கறவரும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்து..வீடு காண்பிச்ச என்னை கழட்டி விட்டுடறாங்களே..நான் என்ன செய்வேன்?..
மனசுக்குள் கவலையில் அவர் தன் ரியல் எஸ்டேட் ஆபீஸ் திறந்து உட்கார்ந்தார்.
போன் அடிக்கவும்.. அவரோட பழைய நண்பர்.. குசலம் விசாரித்து விட்டு..
' நான் இன்னிக்கு ஒரு பார்ட்டியை அனுப்பறேன். இந்த ஏரியாவிலேயே இருக்கும் சூப்பர் வீடுகள், அபார்ட்மென்ட் எல்லாம் காண்பி..எப்படியும் இந்த டீல் முடிக்க முயற்சி பண்ணு ' என்று பாலை வார்த்தார்.
இரண்டு நாளாக..அந்தத் தம்பதியுடன் சுற்றி ..அந்த ஏரியாவில் இருக்கும் அத்தனை அபார்ட்மெண்ட் களையும்.காண்பித்தார்.
ஒவ்வொரு அபார்ட்மெண்ட்ட்டும் ஒன்றை மிஞ்சும் வசதிகளுடன்..
ஒரு வீடும் அவர்களுக்கு மனசுக்கு பிடிக்கவில்லை.
"வேற இருக்கா..இன்னும் கொஞ்சம் வீடு பார்க்கலாமே.."
இருக்கற எல்லா வீட்டையும் காண்பிச்சாச்சு..
சார்..அவங்களுக்கு எந்த வீடுமே பிடிக்கலை சார்'
இன்னும் ஒண்ணே ஒண்ணு பாக்கி இருக்கு...
ஆனால்..
அது ..ஒரு பழைய காலத்து தனி வீடு.
நடுவில வீடு..சுத்தி அழகா வித விதமா மரங்கள்..பூச்செடிகள்.பின்னாடி ஒரு சின்ன கிணறு.
இருந்து என்ன?
இப்போ எல்லாம் யாருக்குமே தனி வீடு பிடிக்கறதில்லையே..
பாதுகாப்பு கருதி யாரும் வாடகைக்கும் வரதில்லையே..
இவங்களும் இதை பார்த்துட்டு
எப்படியும் வேண்டாம்னு சொல்லப் போறாங்க..'
நம்பிக்கை துளி கூட இல்லாமல்..
ரமணன் அந்த வீட்டின் வாசலில் நிற்க..
"ஆஹா...வெளிப்புறமே..இத்தனை ஆர்டிஸ்டிக்கா இருக்கே..'
அவர் சொல்லவும் ..ரமணனுக்கு ஒரே ஆச்சரியம்.
நல்ல காற்றோட்டம், வெளிச்சம், சுத்தி மரங்கள்..
இம்மி இம்மியாக அவர்கள் அந்த வீட்டை ரசிக்க..
அங்கிருக்கும் கிண்ற்றையும், தோய்க்கும் கல்லையும், மரங்களையும் ஆசையாய் சுற்றி வந்தபடி..
"எங்களுக்கு வீடு ரொம்ப பிடிச்சுப் போச்சு..அட்வான்ஸைப் பிடிங்க..
மீதி பேப்பர் வேலையெல்லாம் நாளைக்கு செய்யலாம். '..அவர் பேசிக் கொண்டே போக..
"எப்படி சார்..? உங்க டேஸ்ட் புரியாமல் ..நான் இரண்டு நாளா உங்களை அலைக்கழித்து விட்டேனே..மன்னிச்சுக்குங்க'
ரமணன் சொல்ல..
"அது உங்க தப்பில்லை..இப்போ இருக்கிற ட்ரெண்ட் , மக்களின் ரசனை....ஆனால் எங்களுக்கு நெடுநாளாக ஆசை..
எங்களுக்கு நவீன வசதிகளோட இருக்கும் வீடுகளில் இருந்து அலுத்துப் போச்சு..
அதனால் தான்..
இந்தியாவில் இப்படி ஒரு வீட்டில் வந்து வாழணும்' என்று..
சரளமான ஆங்கிலத்தில்
பேசியபடி..அந்த வெளிநாட்டுத் தம்பதி..
No comments:
Post a Comment