Thursday, June 17, 2021

Madhyamar-மத்யமர்_என்_பார்வையில்

 #ஸண்டே_ஸ்பெஷல்

#மத்யமர்_என்_பார்வையில்


பீச்சுக்கு போகணும்னு கிளம்புவோம். அங்கே போகப் போக..ஐயோ எதுக்கு தண்ணிக்குள்ள போகணும்..

ஈரம், மண் இப்படி பல சமாதானம் சொல்லி ' நான் செருப்பு ,ஹாண்ட் பேக்கெல்லாம் பார்த்துக்கறேன்னு ' சொல்லிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பிப்போம்...


அஞ்சு நிமிஷத்தில் ..ஐயோ எதுக்கு இப்படி வெளியே இருக்கோம்..உள்ளே போய்..நாமும் அலையில் காலை வைத்து களிப்போமேனு தோன்றி..

அலை நோக்கி ஓடிவோம். 


"என்ன பெரிசா வரவே மாட்டேன்னு சொன்ன..இப்ப இப்படி ஆட்டம் போடறே..

அலை வந்துண்டே தான் இருக்கும்..நாம கிளம்பலாம் வா..போறும்..போறும்..

இப்படி..சொன்னாலும்.ப்ளீஸ் ..ப்ளீஸ் ..

இன்னும் ஒரே ஒரு அலை..நின்னுட்டு வரேனே'..

எத்தனை முறை இப்படி சொல்லி இருப்போம்..


மத்யமர் ..#ஓயாத_அலை..இதோ ஒரே பதிவு படிச்சுட்டு வேலை பார்க்கணும்னு நினைச்சு உள்ளே வந்து..

ஐயோ..இன்னும் ஒண்ணே ஒண்ணு படிச்சுடலாம்னு..மீள முடியாத....

அன்பு,அறிவு,நட்பு, நடப்பு என்று மாறி மாறி பதிவு அலைகள் வந்தபடி இருக்கும் ஒரு 

#மகாசாகரம்_நம்_மத்யமர்..


அடுத்து எங்க வீட்டில் ஒரு அங்கமான இந்த மத்யமர் என்னும் பெயர்..

அம்மாவுக்கு நாம் இல்லாட்டி என்ன..மத்யமர் இருக்கா..என்று காதில் புகை விடும் என் பெண்கள்..


பாட்டு, ஓவியம், கைவினை எல்லாம் ..நமக்கும் அதுக்கும் ஸ்நானப் ப்ராப்தி கூட இல்லனு இருந்தபோது..அட..அப்படி எப்படி சொல்லுவ..வா..இங்கே..

#என்னை_இழுத்த_ஒரு_காந்தம்..

எத்தனை திறமைகள் கண்டோம்..


ஒரே ஒரு குறை..போட்டியின் போது தலை காட்டுபவர்..பொட்டிக்குள் முடங்கி விடுவதேன்..


தலைவரின் thumbs up க்காக காத்திருக்கும் ஒரு பள்ளிக் குழந்தை  நான்😀


நீங்க எல்லாரும் கூட அப்படித்தானே😀


மத்யமர் ஒரு multi tasking..multi talented members இருக்கும் ஒரு க்ரூப். 


#ஊக்குவிக்கும்_இடம்..


அதனால் தைரியமா நம்ம #பலவீனங்களை_பலமாக_ஆக்கிக் கொள்ளலாம்.

வாங்க நட்பூக்களே..


இரண்டு வருஷத்தில் ..அபார வளர்ச்சி..

மெல்ல மெல்ல ..ஒரு அமைதிப் புரட்சி நடக்கிறது..


உறுப்பினர்கள் உதவிக் கரம் நீட்ட..தலைவர் திறம்பட திட்டம் வகுக்க..

அட்மின்களும் மாடரேட்டர்களும் அயராது உழைக்க..

வானம் தொட்டு விடும் தூரம் தான்..சந்தேகமே இல்லை..


எழுதுவதைத் தவிர..

"#நான்_என்ன_செய்தேன்_இதற்கு' கேள்வி என்றும் மனதில் உண்டு..

ஒவ்வொரு charities,social service பதிவு வரும்போதெல்லாம்..அடடே சென்னையில் இல்லாமல் போய்விட்டோமே என்று..ஆதங்கம் மேலோங்கும்..


2020 ல் மத்யமர் அட்மின் டீம் ..எங்கள் போல் வெளியூரில் இருப்பவர்களும் ..சமூக சேவையில் ஈடுபட ஒரு வாய்ப்பு தருவார்கள் என்ற ஆசையில் காத்திருக்கிறேன்..


"வெளிச்சம்" ..மீண்டும் புது பொலிவுடன் வரணும்..


ஒவ்வொரு வயதிலும்..ஒவ்வொரு அடையாளத்தோடு என் வாழ்க்கை..


"இவங்க பொண்ணு ..அகிலா.'.அது ஒரு காலம்..

" இந்தப் பொண்ணுகளோட அம்மா..இவங்க தான் ..அகிலா' ..

இப்படி ஒரு அடையாளம்..


இப்போது..

"இவங்க மத்யமர் அகிலா..'


ரொம்ப சந்தோஷமா இருக்கு..எத்தனை நட்"பூக்கள் " இந்த மத்யமர் தோட்டத்தில்..


இப்படி இங்கே எல்லாருக்கும் ஒரு தனி அடையாளம் தந்த ..தளம்..

அது..

மத்யமர் தளம்..


இன்னும் இன்னும் என்ன செய்யப் போகிறோம்..

ஆவலுடன் காத்திருக்கும்..

மத்யமராகிய நான்..

Akila ramasami

No comments: