Saturday, November 30, 2019

முடக்கத்தான்

#morning_with_முடக்கத்தான்
காலிங் பெல் சத்தம். காலங்கார்த்தால யார் என்று கதவை திறக்க..கையில் கவருடன் காய்கறிக்காரம்மா..

"என்ன aunty நு கேட்பதற்குள்.." இந்தா புடி..கால் வலி..கால் வலினு சொல்லுவியே கிராமத்திலேர்ந்து நேத்து கொண்டாந்தேன் இந்த முடக்கத்தான் கீரை.
கொஞ்சம் நீ லேட்டாக்கினா கூட அல்லாம் வித்து பூடும்.. அதான் வந்து கொடுத்துடலாம்நு'.

அம்பாள் பெயர் கொண்ட அன்பு இவளோ?
அவர்களுக்கு என்ன அவசியம் எனக்கு வந்து கொடுக்கணும்னு?

அன்பு..நம்ம சுற்றம் நட்புகள் அள்ளி வழங்கினாலும்..இது எனக்கு பெரிய bonus booster அன்(ம்)பு.

எவ்வளவு அள்ளிக் கொடுத்தாலும் குறையாத ஒன்று இந்த அன்பே.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..
 அதை லாக்கரில் பூட்டி வைத்து ..அழகு பார்க்காமல்..அள்ளி வீசுங்க..

 அப்புறம் பாருங்க.. .மனசு எப்போதுமே துள்ளி குதிச்சு விளையாட weight less ஆ இருக்கும்.

'ரா..ஜி..பாட்..டீ.. என்று கூவியபடி எங்க அபார்ட்மெண்ட் குழந்தை அவளைத் தேடி ஓடும் அர்த்தம்..எனக்குப் புரிந்தது. உங்களுக்கு?

மத்தாப்பு புன்னகையுடன் முடக்கத்தான் நோக்கி நான்..
முடக்கத்தான் ..அன்பையும் முடங்காமல் இருக்கச் செய்யட்டும்.
அன்புடன்
அகிலானந்தமயி😝

No comments: