Wednesday, April 13, 2016

போய் வா..மன்மதா..போய் வா..

போய் வா..மன்மதா..போய் வா..


மன்மத ஆண்டே..
மகிழ்ச்சி யாய்..போய் வா.
மறு முறை நீ வரும்போது..
மண்ணில் இருப்பேனோ..
மறு பிறவியில் இருப்பேனோ..

பாட்டன் பா பொய்க்கலையே..
மாரி பொழிந்தது..
மனது விரிந்தது..
மனிதம் உயர்ந்தது..
மன்மத பாடம்.. ...இது
மறக்காது எந்நாளும்.

மாற்றம் ஏதுமில்லா..
மன்மத வருடந்தான்..
மாறி மாறி வந்தது..
மந்தமும்..மகிழ்ச்சி யும்..

நேரம் வந்தது..
நீயும் செல்ல..
விடைக் கொடுக்கின்றேன்..
வெற்றிலை பாக்குடன்..

வரவேற்க விழைகிறேன்..
வாசல் வந்து காத்திருக்கும்..
வருஷமாம். ...
துன்மதியை..

போய் வா ...மன்மதா ..
போய் வா..
பிரியா விடை உனக்கு..
பிரியத்தோடு இன்று..

மீண்டும் சந்திப்போமா..
மறந்த கதை பேச..

wish you all a happy Tamil new year
அன்புடன்
அகிலா