ஆயிரம் இருந்தும்..வசதிகள் இருந்தும்
'வரட்டும் ..வரட்டும்..நன்னா நாலு கேள்வி நறுக்குனு கேட்கணும்..'
Airport arrival வாசலில் விடிகாலை மூணு மணிக்கு வரும் flight க்கு முந்திரிக் கொட்டையாய் பன்னெண்டு மணிக்கே வந்து..ஓரமா ஒரு எடம் பார்த்து உக்கார்ந்தாச்சு..
டாடா 'பை' 'பை'க்கள்..குடும்பத்தோட வந்து ஒரு குட்டி பிக்னிக் பலருக்கு.
கல்யாணக் களையோடு கடைகள். spoon ,fork ஆல குத்தி சண்டை போட்டும் கொஞ்சங்கூட கிழியாம அடம் பிடிச்ச தோசையை ,யாரும் பார்க்கலைனு நினைச்சுண்டு கையால லார்ட் லபக் தாஸ் மாதிரி விண்டு வாயில் போட்டு அனுபவிச்ச அரை டிராயர் இளைஞன், எக்கச்சக்க selfie புள்ளைகள்..PNR ஐ password போட்டு எப்படி பத்திரமா வைச்சுக்கணும்னு class எடுத்த ஒரு மலபார் மாமி. Placard வெச்சுண்டு பரபரனு அலைஞ்சிண்டிருந்த டிரைவர்கள்..மோப்ப நாய் வேற ரொம்ப சுத்திண்டு இருந்தது..hijack alertனு news வந்ததன் விளைவு..
லவ் ஜோடீஸ் ...கார் வராத கடுப்பில்
காள் காள் கத்தலுடன் கோட்டுசூட்டு ஆசாமி..
இப்படி பல விஷயம் சுத்தி நடந்தாலும்..மனசு மட்டும்..வரட்டும் இரு..வெச்சுக்கறேனு கறுவிண்டு..
இங்கேர்ந்து கிளம்பும்போது பேசின பேச்சென்ன..'ரெண்டே மாசம் ஓடி வந்துடப் போறேன்..உன்னோட செல்லைக் கொடு..hang out இல்லையே இறக்கிடறேன்..
Messenger install பண்ணி இருக்கேன்.அதுல easy ஆ இருக்கும்..இருக்கவே இருக்கு.எப்படியும் நீ தான் fb லயே குடி இருப்பியே..so no problem.
watsapp video call இருக்கவே இருக்கு.
உன்னோட time ல ராத்திரி 9 மணிக்கு கூப்பிடுவேன்..நீ பாட்டுக்கு local call ல லொள்ளு சபா நடத்தாதே..அதே மாதிரி காலம்பற 10 மணிக்கு கூப்பிடறேன்..நான் தூங்க போறதுக்கு முன்னாடி..காய்கறி வாங்கப் போய்டாதே..இத்தனை இருக்கு..எதுக்கு உனக்கு கவலை'.
இப்படி சொன்னபோது ஆமாம்ல இது என்ன அந்தக் காலமா..கண்ணைக் கசக்கிண்டு நிக்க..தேத்தியாச்சு மனசை..முதல் ரெண்டு நாள்..சொன்னபடியெல்லாம் நடந்தது..
கழுதை தேஞ்சு கட்டெறும்பாச்சு..நாம அனுப்பற hi க்கு half a day கழிச்சுதான் ஒரு blue tick வரும்..சரி சரி..9 மணிக்கு call வரும்னு நினச்சா..reached officeநு ஒரு ஒத்தை வரி..இனிமே மெஸேஜ் பண்ணாதேனு indirect ஆ..ம்ம்ம்ம்..
எப்படியும் காலம்பர கால் வரும்னு காத்திருக்க...காத்துண்டே இருக்க..
இப்படியே ரெண்டு மாசம் ஓட்டியாச்சு..
இன்னிக்கு வரட்டும் உண்டு இல்லனு பண்ணிடறேன்..
மணி மூணு..தரை இறங்கியது விமானம்.. வரட்டும்..வரட்டும்..வெச்சுக்கறேன்..
அரை மணி அவஸ்தை..
அதோ..அதோ..அங்கே தெரியறது...
.yes..வந்தாச்சு..ஒத்திகைப்படி ஒழுங்கா நறுக்குனு கேட்டுடணும் முதல்லயே..
கண்ணாடி வாயில் திறக்க..கையசைத்தபடி..
Hi..maaa..wazaap என்று ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டவளை..என்னடா.இப்படி இளைச்சு போயிருக்க..சாப்பிட்டியா ..
இல்லையா..ரொம்ப miss பண்ணேண்டா..நான் சொல்ல..
'அதான் வந்துட்டேனே..
Chill maa'..அவள் பாணியில்.. அவள் தொனியில்....
தேன் வந்து காதில் பாய..
திட்டித் தீர்க்கணும், கொட்டிக் குதறனும்னு போட்ட திட்டமெல்லாம்......???