Monday, January 23, 2017

தீயினால் சுட்ட புண்...ஆறாது..

தீயினால் சுட்ட புண்...ஆறாது..
ஆறவே ஆறாது..ல

திருவரங்கம்....
திரும்பிப் பார்க்கிறேன் இந்நாளை

தாயார் பேரிலொரு
திருமண மண்டபம்..
வாசலுக்கு பேர்பெற்ற ஊரில்..
வந்தது இந்த மண்டபம்..
சிறிய வாசலும்..
குறுகிய படிக்கட்டும்..
குறையாய்ப் படவில்லை..
குதூகலத்தின் நடுவினிலே..
ஜாம் ஜாமென்று ..
ஜானவாசம் நடப்பு..
ஜொலிக்கும் அலங்காரத்துடன்
ஜனத்திரள் அங்கே..
முகூர்த்த நேரம்..
முண்டியடிக்குமோ கூட்டம்..
முதல் நடவடிக்கை..
மாடியில் பந்தல்..
பளபளக்கும் பேப்பரிலே..
புதுசாய் ஒர் அலங்காரம்
புதுப் பெண்ணும் பிள்ளையும்..
புது வாழ்வு புகும் நேரம்..
மாலை மாற்றியாச்சு..
மணமகள் தயாரங்கே..
தாலி கழுத்தில் ஏற..
புகைப்படங்கள்..
பொங்கும் இன்பத்தை..
படம் பிடிக்க..

வீடியோ பிடிக்க வந்தவனோ..
விதியை மாற்ற வந்தவனோ..
சிறு பொறி வந்ததது..
சீரழிக்க வந்தது..

அலங்கார த் தோரணங்கள்..
அவசரமாய்த் தீப்பிடிக்க..
அரை நொடியில் அங்கே..
அரக்கனாய்த் தீக்கங்குகள்

மங்கள இசைக்குப் பதிலே
மயானக் காட்சி அங்கே..

அங்கும் இங்கும் ஓடினரே..
எங்கோ ஒரு வழியுண்டா என்றே..

குழவிகளும்..குமரிகளும்..
கிழவரும் கிழவியும்..
சிக்கித் தவித்தனரே..
சிறுவழியது நெருக்க..

சிதறிய கனவுகள்..
கதறிய திருவரங்கம்..
அரங்கனும் கேட்டிருப்பான்..
அலறல்கள்..ஓலங்கள்..
.
காத்திருந்தேனா..இதற்குப் போய்
காவிரித்தாயும் ..கலங்கினளே..

ஆண்டு பதினாலு ஆச்சு..
ஆறவில்லை..காயம் இன்னும்.
ஆறுதல்கள்..
ஆற்றவில்லை காயத்தை..
ஆத்மா சாந்தியடைய..
அவனை வேண்டுகிறேன்..
தீயினால் சுட்டப் புண்..
ஆறாது..
ஆறவே ஆறாது..
.

Sunday, January 22, 2017

Happy birthday

15.01.2017
வெளியே போய் சாப்படலாமானு கேட்டேன்..
no no outside food என்றாள்..
புத்தன் ஞானமோ என்று வியந்தேன்..
புதன் கிழமை graduation day...
புசுபுசுனு மூட்டை மாதிரி தெரிவேன் என்றாள்..
சினிமா போலாமா என்றேன்..
syllabus கொட்டிக் கிடக்கு
சினத்தைக் கிளப்பாதே என்றாள்..
selfie queen ஆச்சே..
super mobile வேணுமான்னேன்..
சும்மா கிட..இப்போ வேண்டாம்னாள்
(பெரிய வேட்டுக்கு plan..)
accessories வேணுமா என்றேன்..
antique piece வாங்கிடுவே..
அப்பறம் நான் வாங்குவேன் என்றாள்..
dress என்ன வாங்கட்டும்னேன்..
door delivery myntra தரும் என்றாள்..
என்னதான் வேணும்னேன்..
அம்மா..நீ superஆ பண்ணுவியே..
jeera rice ம், Punjabi choleம்..
அதுதான் வேணுமென்றாள்..
எதைக் கேட்டாலும் வேண்டாம்கிறதேனு..
எள்ளும் கொள்ளுமாய் வெடித்த எனக்கு..
வேணும் உன் சாப்பாடென
வெண்ணையாய் அவள் வார்த்தை..
வேகமாய்ப் பறந்தேன்..
வேக வைக்க கொண்டைக்கடலை..




Saturday, January 14, 2017

நட்பு

நட்பு..
மதுரை மரிக்கொழுந்து வாசமிவள்..
தென்பாண்டித் தமிழ் இவள்..

பாடும் குயிலிவள்..
படபடப்பில்லா பதுமையிவள்

அன்பின் முகவரி இவள்..
ஆசையின் இருப்பிடம் இவள்

சமையல் என்ன இன்னிக்கு
சுவையாய் தொடங்கிய நட்பு.
அங்கே நலமா..
இங்கே நலம்..
அங்கே குளிரா..
இங்கே இப்போ தேவலாம்..
பரீட்சை பைய்யனுக்கு எப்போ..
பரிட்சயம் இப்படி ஆச்சு..
ஆர்க்குட் நட்பு..
அன்பாய் பறிமாறல்கள்

நேரில் கண்டபோது..
தேரில் (காரில்)வந்த
தேவதையாய்
மூச்சு விடாது பேச்சு..
முன்ஜன்ம பந்தமோ இது..


இப்படி ஒரு தோழி..
அடிக்கடி அளவளாவல் இல்லை..
நொடிக்கொரு குறுஞ்செய்தி இல்லை..
அவளறிவாள் என்னை..
என்னை அறிந்தேனே அவளால்..
புதுத் தெம்பு தந்தாள்..
புவனா என் தோழியே..
கவிதை நீ..
புதிதாய் என்ன கவி படைப்பேன்..
பிறந்த நாள் காணும் உனக்கு..