Sunday, May 14, 2017

Happy mother's day maa

happy mother's day maa..

பிறந்தநாள் உனக்கு
பாயசம் வெச்சியா என்றால்
பழக்கமே இல்லை என்பாள்.
எப்போது பேசினாலும்
எடுத்தவுடன் கேட்பாள்
சாப்பிட்டியா நீயென்பாள்
சாம்பார் பொடி இருக்கா
ரசப் பொடி காலியாயிருக்குமே
எங்கோ இருந்தபடி
எடை போடுவாள் எல்லாம்
குரல் வைத்தே கண்டுபிடிப்பாள்
கோபமா..குதூகலமா என்றே
அப்பறம் பேசறேன் என்பேன்
எப்போவுமே நீ இப்படி என்பாள்
உற்றார் உறவினர் கதையெல்லாம்
ஒன்று விடாமல் சொல்வாள்
பேத்திகளுக்கு பிடித்ததெல்லாம்
அத்துப்படி அவளுக்கென்றும்
பார்த்து பார்த்து செய்வதில்
பரம சந்தோஷம் அடைவாள்
அன்னையர் தினமெல்லாம்..
அவளும் கொப்டாடியதில்லை..
எடுத்துச் சொன்னாலும்
எதுக்கிந்த ஆரவாரமென்பாள்..
சண்டை பல பொழுது
சலிக்காமல் நடந்தாலும்
சமாதானக் கொடி பிடித்து
சரி சரி விடென்பாள்.
என்னை விட்டு நீ சென்றாலும்
எங்கம்மா இப்படித்தான் பண்ணுவானு
என்னை நான் நிலை நாட்டிக்க
அடிக்கடி வரும் உன் நினைவு
அன்னையர் தினத்தில்
மட்டும் தானா என்ன..?

Sunday, May 7, 2017

எலியாருக்கு engagement

எலியார்க்கு engagement..

சில விடியல்கள் சுவாரசியமானவை..இன்னிக்கு என் பள்ளியெழுச்சியும் அப்படித்தான். டிகாக்‌ஷன் போட போனவளின் பார்வை மேடை ஓரத்தில் கொஞ்சம் இன்னும் பழுக்கட்டும்னு வெச்சிருந்த தக்காளி பரிதாபமா குதறப்பட்டு ஐசியு ல கிடந்தது.ஓஹோ..மஹானுபாவர் விஜயமோ இன்னிக்கினு மண்டையில் tension ஏற..அதோ அங்கே என் உயிரிலும் மேலான மஞ்சள் 'tupperware' முனகிண்டு எப்படி ஆகிட்டேன் பாருனு முகாரி பாடித்து.
(டப்பர் வேர் இருக்கே ..அத மூடறத்துக்கு ஒரு மேதாவியா இருக்கணும்..இல்ல சைடு வழியா காத்து போய்டும்). நான் இப்படி கஷ்டப்பட்டு மூடி வெச்ச பிஸ்கட் டப்பாவை..அதுவும் அதோட மூடியை கடிச்சு குதறிய எலி மட்டும் என் கையில் கிடச்சா...
ஒரு ஏழு எட்டு மாசத்துக்கு முன்னாடியும் இவா பிரச்சனை ரொம்ப ஜாஸ்தியா இருக்க..
எலியானாலும் எளிதா எக்ஸ்பர்ட் அட்வைஸ் தரும் உஷா அக்காவுக்கு( என் நாத்தனார்)ஃபோன் போட்டேன். அடடே..தன் usual தொனியில் ..நானும் இப்படித்தான் அகிலா கஷ்டப்பட்டேன்.நம்ம ராணி (வலது கரம்)சொன்னா..'அக்கா நீ அதுக்கு கல்யாணம் பண்ணி வெக்கறேனு வேண்டிக்கோ..ஓடிடுங்க்கா' என்றாளாம்.முதலில் சிரித்த நான்..சீரியஸ் ஆனேன்...'எலியே..எலியே
.ஓடிடும்மா..
மருந்தெல்லாம் வெச்சு கொல்ல விரும்பலைம்மா..(அதை விட பெரிய தண்டனை உனக்கு)கல்யாணம் பண்ணி வெக்கறேம்மா..என்ன ஆச்சரியம்..! அப்பறம் திரும்பி கூடப் பார்க்கலை எலியார் என் வீட்டை..நான் அப்பப்போ நினச்சுப்பேன்..அந்த எலி கல்யாணம் ஆகி ஹனிமூன் போய்ட்டு இப்போ summer ல fridge க்கடியிலும் ஏசியிலும் உட்கார்ந்து குடித்தனம் பண்ணிண்டு இருக்குமா..இல்லே..ஐய்யோ சாமி..கல்யாணமா..எனக்கா..
வேண்டாஞ்சாமி..உன் பக்கமே தலை வெச்சு படுக்க மாட்டேனு ஓடியிருக்குமா..ஆனாலும் ஒரு பயம்..இந்த வேண்டுதல் யாருக்கு நான் பண்ற சத்தியம்..leave it ..எலி விஜயம் இப்போதான் இல்லையேனு இறுமாந்து இருந்த வேளை..
இன்னிக்கு வந்த எலி என்னை பழி வாங்க வந்திருக்கா..இல்ல அதோட தோழர் (ழி)ஐ..இந்தம்மா..ரொம்ப ராசியான அம்மா..உனக்கு சீக்கிரம் விவாஹப் ப்ராப்திரஸ்து ஆகும்னு செண்டிமெண்டா வந்த எலியா..
ஒண்ணும் புரியல..
சக்கரை சிந்திய டேபிளை அப்பா துடைக்க..இங்கே கொஞ்சம் சரியா துடைங்கோப்பா..எறும்பு வந்துடும்னு நான் சொல்ல..ஏக எரிச்சலில் அவர்..எலியே வந்துடுத்தாம்..இந்த எறும்பு என்ன பண்ணப் போறதுனு..தூபம் போட..
இன்னிக்கு ராத்திரி வரப் போற எலியாருக்காக ஏற்கனெவே வேண்டிண்டாச்சு..கல்யாணம் பண்ணி வைக்கிறேனு..
அவள்(ர்)..வருவாளா(ரா)..

எலியார் engagement.. Day 2
தடைய ஆராய்ச்சிக்குப் பின்
தடமும் காண்டார் தந்தை
தடாவும் போட்டார்..
திறக்காதே ஜன்னலென்று..

புழுக்கை காட்டியது
புகுந்த வழியதுவே..

காத்து வேணுமா..இல்ல
குதறல் வேணுமா என்று
கத்தி முனையில் ..
கேள்வியுடன் அப்பா..

கொளுத்தும் வெய்யிலில்
கொடுமை ஏதடானு
குமுறி வேண்டினேன்...
திரும்பி வந்தாயோ..
திருமணம் திருப்பியுமென்று..

போய் வா எலியே போய் வா.

குறுக்கு விசாரணை

குறுக்கு விசாரணை

உனக்கு எத்தனை நாட்களா அவாளைத் தெரியும்?
எங்கியாவது நேராப் பார்த்திருக்கியா?
பேசியிருக்கியா?
ரோட்ல நடக்கிற..ஊர்வன.. பறப்பன எல்லாருக்கும் நீ ஃப்ரண்டு..
அதனால..எத வேணாப் பண்ணுவியா..?
சரி..அதை விடு..யாரோட ஃப்ரண்டுனு சொன்னே..(பேரை முணுமுணுக்க)..
அதுவே சரி கிடையாது..அதோட ஃப்ரண்டு எப்படி இருக்கும்?
அவாளோட நடவடிக்கை எப்படினு தெரிஞ்சிண்டியா..?
அவாளோட சகவாசம் எல்லாம் சரியா இருக்கானு  check பண்ணினியா?
நல்ல வேளை இப்பவாவது கேட்டியே..இனிமே எதுவா இருந்தாலும் என்கிட்ட வந்து சொல்லு..நீயே எதுவும் ஆராயாமல் முடிவெடுக்காதே..
கடைசியா ஒண்ணே ஒண்ணு கேக்கறேன்..? இதையே நான் பண்ணா சும்மா இருப்பியா..காச்சு மூச்சுனு கத்தி  ஒப்பாரி வெச்சு
ஊரக் கூட்டுவியே..
Friend request வந்திருக்காம்..friend request. உடனே accept பண்ணிடட்டுமானு இனிமே கேட்டியோ..நடக்கறதே வேற விஷயம்..ஆமாம் சொல்லிட்டேன்.
உலகத்தை புரிஞ்சிகோம்மா..

பேக்கு அம்மாவுக்கு..(என் போன்ற)ஃபேக் ஐடி பற்றி சொன்னாலும் புரியாத திரு திரு அம்மாக்கள்.
பாவம் குழந்தைகள்.. இந்த மாதிரி அம்மாஸுடன் ரொம்பவும் கஷ்ட்டப்படறதுகள்..