Thursday, May 16, 2019

எழுதுகிறேன் ஒரு கடிதம் சீசன் 3 கடிதம் 1

எழுதுகிறேன் ஒரு கடிதம் சீசன் 3
கடிதம் 1

அன்புள்ள பவித்ரா அக்காவுக்கு

ஷேமம்.ஷேமத்திற்கு பதில்.
அம்மா என் பக்கத்திலே உட்கார்ந்து சொல்ல சொல்ல எழுதறேன்.
அங்கு உன்னோட ஆபீஸ் வேலையெல்லாம் எப்படி இருக்கு? நீ கிளம்பினதும் வீடே வெறிச்சுனு போச்சு. குழந்தை ராத்திரி பூரா அழுதா..உன்னைத் தேடிண்டே இருந்தா.

 இப்பொ நாலு நாளா அழுகை கொஞ்சம் குறைஞ்சுருக்கு. அம்மாவோடயும் என்னோடயும்  பழகிட்டா. பவுடர் பால் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறா. உன்னை பத்தி தான் நினைப்பு அம்மாக்கு எப்போதும்.

உடம்பை ஒழுங்கா பார்த்துக்கோ. பளுவான வேலையெல்லாம் செய்யாம இருக்கச் சொன்னா..இன்னும் நீ பச்சை உடம்புக்காரிதான். இப்போ சரியா கவனிச்சுக்கலைனா பின்னாடி ரொம்பா வீக்காகிடுவேனு அம்மாக்கு கவலை.
அப்பா வார்த்தை க்கு வார்த்தை உன்னையே சொல்லிண்டு இருக்கா.
 குழந்தையப் பத்தி கவலைப் படாதே..இப்போ கூட இங்கேதான் என் மடியில் படுத்துண்டு தூங்கறா. உன் உடம்பைப் பார்த்துக்கோ.அத்திம்பேரைக் கேட்டதா சொல்லு.அடுத்த லீவு உனக்கு எப்போ?

அம்மா இப்போ எழுந்து போயாச்சு.
அக்கா..உனக்கு கண்டிப்பா ஞாபகம் இருக்கும்.அடுத்த வாரம் புதன்கிழமை க்குள்ள ஃபீஸ் கட்டணும்.இல்லனா பரீட்சை எழுத விடமாட்டா. இந்த லெட்டரை தந்தி போல பாவித்து மணியார்டர் அனுப்பிடுக்கா..போன வருஷத்துக்கு முந்தின வருஷம் வாங்கின இங்க் பேனா.ரொம்ப இங்க் கொட்டறது. அதுக்கும் சேர்த்து ஒரு அஞ்சு ரூபா அனுப்ப முடியுமாக்கா..
இங்கே எல்லாரும் செளக்கியம். குழந்தை சமத்தா இருக்கா. கவலைப்படாதே.
இப்படிக்கு
அன்புத் தங்கை
சுசீ

Sunday, May 12, 2019

ராஜ ராகம்

ராஜ ராகம்..
Raaja sir music..a part and parcel of life)

 வழிந்தோடிய நதியாய்
வயலினும் விணையும்
வசப்படுத்த
செல்லோவும் சித்தாரும்
செல்லமாய் வருட
கிட்டாரின் தந்திகள்
கிறங்கத்தா னடிக்க
பியானோக்கள்..
புத்தம் புது மெட்டிசைக்க
தபேலாக்காளின் தாளங்கள்
தலையாட்டச் செய்ய
கோரஸின் குரல்களோடு
கூட்டத்தில் நாம்கலக்க
நாதஸ்வரங்கள்..
நாத வெள்ளத்தில் மூழ்கடிக்க
தாரையும் தப்பட்டையும்
தனை மறந்தாடச்செய்ய
புல்லாங்குழல்கள்
புதுராகம் பாட..
பேரறியாக் கருவிகளும்
மோட்சமடைந்ததுவே
மாஸ்ட்ரோ உன்னாலே..
சுகமொ சோகமோ
சுற்றி வரும்
மெட்டுனதே..
இசைஞானி உன்னாலே
இசையும் இயல்பானதிங்கே
தாலாட்டும் கரங்கள்
நம்மை விட்டுச் சென்றாலும்
தனிமைக்கு ஓர் துணை
தெவிட்டாத உன்னிசை தானே

Saturday, May 4, 2019

Soka mother- may 3rd 2019

soka mother
i am a soka mother.
I have no fear

welcoming each day with cheer
worries vanish and disappear.
my mission becoming clear
i never stop to persevere

gratitude filling my heart
I've learnt the living art.
every dawn is a fresh start
with power packed kick start.

hopping the hurdles with hope
stopping not till i win.

 I am a soka mother..and
i am very special.
thank u

finding the mission of life
triumphing