Wednesday, October 30, 2019

Match fixing

Nandhu Sundhu sir..இப்படி flashback போக வெச்சிட்டீங்களே
matching fixing.
இரண்டு காலமாப் பிரிக்கலாம்..வெ.வா.கா(வெட்டி வாங்கிய காலம்) ஒ.வ.கா (ஒட்டி வந்த காலம்).
என் அம்மா இந்த ரெண்டு காலத்திலும் கலக்கியும் இருக்கா..கலங்கியும் போயிருக்கா. நல்லி,குமரனில் புடவை வேட்டை முடிந்தபின்..படையெடுப்பு ப்ளவுஸ் செக்‌ஷன் நோக்கி.. ஒரு மஞ்ச புடவை காண்பிச்சு மாட்ச்சிங் கொடு என்பாள்..அடுக்கி இருக்கும் வரிசையில் வெச்சு வெச்சு பார்ப்பார் சேல்ஸ்மேன். நாலஞ்சு எடுத்து போடுவார்..' இது கோவிந்தா மாதிரி இருக்கே..இது மஸ்ட்டர்ட் கொஞ்சம் தூக்கலா இருக்கு..அந்த மஞ்ச லைட்டை கொஞ்சம் ஆஃப் பண்ணுங்கோ..கலர் சரியா தெரியல..ட்யூப் லைட் வெளிச்சம் எதுக்கு இந்த கவுண்டருக்கு..நற நறனு சேல்ஸ்மேன் பல்லைக் கடித்தபடி பல்லைக் காட்டுவார்..பழைய கஸ்(ஷ்)டமராச்சே..கடைசில முதல்ல காண்பிச்சதே சரியான மாட்ச்சோ என்று மனசு சொல்லும். எனக்கு கொஞ்சம் வெளிச்சத்துல காண்பிங்கோ என்பாள். அந்த floor கடைசியில் ஒரு குட்டி ஜன்னல் இருக்கும்..இந்த மாதிரி பாடாபடுத்துபவருக்கென்றே..முழு bundle ம் ஒருத்தர் சுமந்து வர..Z security level ல் ரெண்டு பேர் escort வேற..இத்துணூண்டு இடுக்குல வெயில்ல வெச்சு பார்த்து ஒரு 75 cm வாங்க முடிவாகும்.. (கடைக்காரரின் சொட்டைக்கு இவங்க எல்லாந்தான் காரணமோ)..
இதுக்கு அடுத்தது..ஒட்டி வந்த காலம்..அதான் attached blouse..introduce ஆனபோது இந்திர லோக சந்தோஷம்..இனிமே நோ blouse piece tension..ஆனா அதை டைலர்கள் எல்லாம் குழாய் மாதிரி தைக்க..அம்மா தையா தக்கானு குதிச்சு..சித்திகளின் அறிவுரையில attached blouse எல்லாம்் என் பெண்களுக்கு cute பாவாடை ஆனது..
மீண்டும் கஜினி படையெடுப்பு..கட் பீஸ் தேடி..
இப்போது என் காலம்..கலம்காரி காலம்..சம்பந்தமே இல்லாமல்..மாட்ச்சிங்..பூ போட்ட புடவைக்கு..புத்தர் டிசைன் ப்ளவுஸ்..
கோடுகட்ட புடவைக்கு பூப் போட்ட மாட்ச்சிங்..சத்தியமா..புடவைக்கு மாட்ச்சே இருக்கக்கூடாது இப்போ trend.
never ending ..this matching fixing..
இது எப்படி இருக்கு என் அனுபவம்  Nandhu Sundhu sir

Tuesday, October 29, 2019

சிறகுகள் முளைத்தே

சிறகுகள் முளைத்தே..

அப்பா தட்டிலிருக்கும் நெய் மணக்கும் ரசம் சாதமும்.
அம்மா வார்க்கும் ஒட்டவழித்த மாவின் கடைசி தோசையும்
இதமே..என்றும்
இறக்கை முளைக்குமுன்..

#treasures_preserved
Drawing by Aishwarya Ramasami -2010

Monday, October 28, 2019

கீரை

எச to Saraswathi Gayathri..

கீரை ஆய்தல்

கடைந்த பாற்கடலில்..
கிளம்பி வெளியேறியது...
ஆலகால விஷமென்றால்..
கடையும்..
கீரை எம்மாத்திரம்..
பழுதும்..பழுப்பும்..
படியும் அழுக்கும்..
பாங்காய் விலக்கி..
பருப்போடு கடைந்து..
A விட்டமின் சத்தோடு
அன்புமும் கூட சேர்த்து..
மசித்த கீரை..
மயக்க வைக்காதெனினும்
மறுபடி கேட்க வைக்குமே..
Saraswathi Gayathri

Monday, October 21, 2019

Trichy

அருமையான பதிவு... என்னையும் எங்கூர எட்டி பார்க்க வைச்சது. Shiv K Kumar sir

திருச்சி வாசம்..
TST bus..
TMS பாட்டு..
ஓர சீட்டில் ..
ஊரை வேடிக்கை..

மலைக்கோட்டை வரும்..
மாங்கு..மாங்குனு..
தெப்பகுளம் வழியா..
தாயுமானவருக்கு..
தோப்புக்கரணம் போட்டு..
சாரதாஸிலும்..கீதாஸிலும்..
கிடீஸ் கார்னரிலும்..
துணி வாங்கி..
பசியாற..போவோம்..
வசந்த் பவனுக்கு..
குடும்பம்..ரொம்ப ஒத்துமையா..
எல்லாரும்..ஒரே அயிட்டம்..
மசாலா தோசை ஆர்டர் பண்ணி..
முடிக்க முடியாம ..முழுங்கி..
தின்ன தோசை..
சீரணமாக..
பொடி நடையா நடந்து ..
வீடு வந்து சேர்வோம்..
வாங்கி வந்த துணியை
தினமும் எடுத்து பார்த்து..
புது வாசம் முகர்ந்து பார்த்து..
எப்போ தீபாவளி வரும்..
முதல் ஆளா..ரெடி ஆகி..
புதுத் துணி போட்டு
பட்டாசு வெடிச்சு..
ஊரை எழுப்பிய கதையெல்லாம்..
இப்போ சொன்னா..
So cheap ங்கறாங்க..
திரும்பிப் பார்த்தேன்..
திரும்பி வரா நாட்களை..
உங்கள் பதிவின் மூலம்..
Thanks Shiv K Kumar

Friday, October 11, 2019

Bye bye dolls

Bye bye dolls..
See you next year..

(My friend radha's golu)

கொண்டாட்டம் முடிவு
கொலு பொம்மைகள்...
பரணி வாசத்துக்கு..
பழையபடி போகும்..
மூச்சு முட்ட..
மூக்கு உடையாதிருக்க..
பழைய புடவையிலும்..
பேப்பர் சுருள்களிலும்..
தஞ்சம் புகுமே....
நம்மையே பார்த்த வண்ணம்..
நாளை ஓட்டிய இவை(வர்)கள்..

'என்னையே பார்க்கிறாப்போல
இருக்கு.'..கொலுவிருக்கும்
அவதாரங்களும்..
ஆன்மீக ஆசான்களுமென்று..
அடங்கி ஒடுங்கி..
அமைதி காத்த நமக்கு..
படுக்க வைத்த பொம்மைகள்..
படு சுதந்திரம் தருமோ..
கெடுபிடி ஏதுமில்லை..இனி
அப்பாடா..
அடுத்த நவராத்திரி வரை....

அவன் ஒரு தொடர்கதை

அவன் ஒரு தொடர்கதை..எச to Shiv K Kumar sir post

தலைச்சனாய்ப் பிறந்தது
தலைவவிதி இல்லையென்று
தலை நிமிர வைப்பான்..
தலைமுறைகள் புகழ்ந்திடவே..

பெட்டி போல அறையிலே
படுப்பர் நால்வர் அங்கே
பொட்டலச் சாப்பாடு வரும்
புளித்த தயிர் சாதத்துடன்.

உணவகம் பல உண்டு
ஊர் சுற்ற இடமுண்டு
முடங்கிக் கிடப்பா நினவனே
கிடங்கு அறை தனிலே

விடுப்புக்கு வரும் ஆசையிலே
விடிய விடிய உழைப்பான்
வளையலும்்  செயினு மாகும்
வங்கியில் சேர்த்த பணம்

சிக்கனம் நீயப்பா என
சுற்றம் கேலி செய்தாலும்
சிரித்தே மழுப்பிடுவான்..
சிந்தையில் ஆழ்ந்திடுவான்.

கடமைகள் முடிக்க..
கல்யாணம் நடக்கும்.
குழந்தைகள் வர
கதையும் தொடரும்.

வெளியூர் மாற்றலாகும்.
விட முடியா பள்ளிச்சீட்டு
வாட்ஸப்பும் வீடியோவிலும்
வாழ்க்கை நடத்திடலாம்
வந்த சந்தர்ப்பமிது
விட்டு விடாதே என்பாள்.

விடை கொடுத்தனுப்புவாள்
விலைவாசியும் கைகாட்டி..

பொட்டி அறை வாழ்க்கை
பொட்டலச் சாப்பாடு..
"செல்"லிலே வாழ்க்கை..( செல்- சிறிய அறை. ,ஃபோன்)
சேர்க்கணுமே இப்போது
செல்லங்கள் கண்மணிகள்
செழிப்பாய் வாழ்ந்திடவே..

அவன்..
ஒரு தொடர்கதைதான்