Happy birthday paa...
இன்னிக்கு காலையிலிருந்து என் வீட்டில் விடாது "அமுதே ..தமிழே" பாட்டு ring tone அடித்த வண்ணமிருக்க, அன்பு மழையில் நனைந்தபடி ஆசிகளை அள்ளி வழங்கியபடி..'அப்பு தாத்தா', 'அப்பு மாமா', 'அப்பு சித்தப்பா', 'அப்பு அண்ணா' , அப்பு அத்திம்பேர், பெரியப்பா என எல்லாருக்கும் செல்லமாம் ..என் அப்பா..எங்க வீட்டு புதுக்கோட்டை ராஜகோபாலனுக்கு 81வது பிறந்தநாள்.
அம்மா மட்டும் இருந்திருந்தால் நிலத்தில் கால் பதியாமல் குதித்து ஓடி ஓடி வேலை செய்திருப்பேன் அவர்கள் சதாபிஷேகம் கொண்டாடி.. as usual அம்மா படத்தோடு ஒரு குட்டி சண்டை போட்டேன்..எனக்கு இந்த chance தராமல் போய்ட்டியேனு.
WiFi துணையுடன் அப்பா இப்போ.
கீ-போர்டும,் கர்னாடிக் இசையும் , கிரிக்கெட் மாட்ச்சும் ..கேள்விக்கென்ன பதிலும் காலத்தை நகர்த்த..
குட்டி குட்டி மராமத்து வேலையெல்லாம் கடகடனு செஞ்சுடுவார். போனவாரம் கூட நாங்க கும்மியடிக்கும் சோஃபாவின்
ஷூ கழண்டோட..5 நிமிஷத்தில் சோஃபாவை படுக்க வெச்சு லாடம் அடிச்சு மாட்டியாச்சு.. கடிகாரத்தில் பாட்டரி, பார்த்து பார்த்து லைட்டை அணைப்பது, பேப்பரெல்லாம் ஒழுங்கா அடுக்குவது, துணியெல்லாம் நீவி நீவி மடிப்பது ..வேலையெல்லாம் அவரோடது. ( நீ என்ன அப்ப செய்வனு நீங்க கேட்கறது காதில விழாமலில்லை)
வீட்டில் இருக்கும் பெரியவர்களை ' அதைச் செய்யாதே..இது உன்னால் முடியாதுனு நெகடிவ்வா சொல்றதை வுட்டு , சில வேலைகள் , responsibilities கொடுத்தால் சந்தோஷமா செய்யும் அழகே தனி.
வெளியே கிளம்புவேன் நான். கிடுகிடுனு ஜன்னல் கிட்ட போய் நின்னு..' வெய்யிலா இருக்கே இப்போ போணுமா' என்பார் ஒரு தரம். ' வானம் இருட்டறது.. இப்போ போகணுமா' என்பார் இன்னொரு தரம். நான் வெளியில் போய்ட்டு வந்து விட்டெறியும் சாவி, பையெல்லாம் சரியான எடத்துக்கு மீண்டும் தூக்கில் தொங்க வைக்கறது அவர் வேலை.
கன்னத்தில கை வெக்காதே, தலையில பூ வெச்சுக்கோ, நேத்திலேர்ந்தே இந்தப் பழம் வெளிய இருக்கே..இப்படி அப்பப்போ அட்வைஸ்..
பேத்திகள் இவரின் கண்கள்.
பெங்களூர் வந்து மூணு வருஷமானாலும் இன்னும் மனசெல்லாம் சென்னைதான் . தன் காலனியில் பாலாறு தண்ணீர் வந்ததா, குப்பை சரியா அள்றானா என் கவலைப் படுவர். எங்க வீட்டுக்கெதிரே இருந்த so called play ground ஐ super park ஆக மாற்றி அதில் senior முதல் junior வரை காலாற நடக்கவும்..களிப்பாய் ஊஞ்சல் ஆடவும், கலர் கலராய் பூக்கள் நட்டு , நிதி பெற்று, திரட்டி அந்தக் காலனியின் அடையாளத்தையே மாற்றியவர் .
touch phone வாங்கித் தந்த்போது அதைத் தொடவே பயந்து நடுங்கியவர்..இன்று தன் சுற்றம் நட்புனு எல்லாத் தலைமுறையினரிடம் இப்போ semma touch ல் இருப்பது இவரே இவரே.. அந்த technology தந்த சந்தோஷம்..காலையிலிருந்து 'calls' அட்டெண்ட் செய்தபடி ..செம்ம பிஸியாய் அப்பா..
கொட்டித் தீர்க்கும் ஆசை, அன்பு, ஆதங்கம் ..கொஞ்சம் tension, கொஞ்சம் mood out..
என் அப்பா..எங்க வீட்டு மூத்த பாப்பா..
ஈங்கிவரை நான் பெறவே..
happy birthday paa..

No comments:
Post a Comment