#ஸண்டே_ஸ்பெஷல்
#செம்மை_மாதர்
ஒவ்வொரு முகமாய் என் கண்ணில் வந்து போகிறது. செம்மை மாதர்..
பொறுமையின் சிகரமாக இருந்த
பாட்டியா..
அன்போடு அனைத்தும் கற்றுத் தந்த அம்மாவா..
வளர்த்த சித்தியா..
மனங்களை படிக்க கற்றுக் கொடுத்த மாமியாரா..
நானிருக்கேன் என்று கரம் எப்போதும் நீட்டும் நாத்தனாரா..
துணை நானெனும் தோழிகளா..
மண்டலேஷ்வர் கிராமத்தில் வயல் வரப்புகளிலும் கல்லிலும் முள்ளிலும் சர்ப்பங்கள் எங்கே இருந்து சிரம் நீட்டும் என்று தெரியாவிட்டாலும் ,விட்டு ஓடிப் போன கணவனை நினைத்து ஒப்பாரி வைக்காமல் தன் பெண்ணை வளர்க்க போராடிய மன்னு பாயா..
விரட்டும் கணவன் முன் வீம்பாய் இருக்காமல் அன்பால் கட்டிப் போடும் சகுந்தலா மாமியா?
என் பெண்களுக்கு பாடங்களோடு வாழ்க்கை யும் சொல்லித் தந்த ரூபா டீச்சரா..
அக்கா..ஒரு வாரமா பூ வாங்க வரலையேனு அனுசரனையோடு விசாரிக்கும் பூக்கார நாகு வா?
மஸூரியில் கைவிடப்பட்ட பெண்கள் குழந்தைகளின் மறு வாழ்வுக்கு வழி வகுத்த purkal youth development அமைத்த சின்னி மேம் ஆ..
பாட்டும் பரதமும் தெரியாவிட்டால் என்ன..வாலண்டியர் வேலை செய் ..ஃபோட்டோ எடு, வீடியோ பதிவு செய் என்று என்னை உசுப்பிய SPIC MACAY chairperson Rupi Mahindroo ஆ..
உனக்குள்ளே இருக்கும் புத்தனை ஏன் தாலாட்டி தூங்க வைக்கிறாய்..வெளியே கொண்டு வா.. உன் எதிரில் இருப்பவரிடமும் தேடு என்று சொல்லிக் கொடுத்த புவனாவா?
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
என் வாழ்க்கையில் இவர்களுக்கு நன்றி கூறாவிட்டால் நரகம் தான் .
ஆனால் ..எந்த அளவு ஒருவரின் பாஸிடிவ் சிந்தனை என்னை தூக்கியதோ..
அந்த அளவு சிலரின் நெகடிவ் சிந்தனை என்னை தாக்கியது.
இப்படி என் வாழ்க்கையில் எந்நாளும்.இருக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொள்ளவும் உதவியவர்களும் என்னைப் பொறுத்தவரை செம்மை மாதர்கள் தான்.
No comments:
Post a Comment