அம்மா..இன்னும் எத்தனை சுத்து பாக்கி இருக்கு?
கையைக் கூப்பியபடி
சாய்ஞ்சு சாய்ஞ்சு
நவக்கிரகம் சுத்தும
நண்டு சிண்டுகள்..
வரப்போகும் ரிஸல்ட் வயிற்றைக் கலக்க..
வரேன் நானும் கோயிலுக்கென்று
விபூதிப் பட்டையுடன்
பட்டைய கிளப்பும் பசங்க..
பூவும் பொட்டுமாய் புதுசா அலங்காரம்..
பவ்யமாய் விளக்கேற்றி
பாஸாக்கிடு பாஸ் என்று பக்தியில் பெண்குட்டிகள்..
'கண்ணை மூடி உம்மாச்சியை வேண்டிக்கோ'
பாட்டி சொல்லைத் தட்டாத பேத்தி..அவள்
பார்க்காத போது.. ஓரக் கண்ணால் என்னைப் பார்த்த அழகு..
கோயில்கள்..கோடை விடுமுறையில்
குழந்தைகள் வரவால்..
சொர்க்கமாய்த் தெரிகிறது..
'மாமா..ப்ரசாதம்' ..இரண்டு கையிலும் தொன்னையில் ரொப்பிண்டு
இவர்கள் அங்கே மரத்தடியில் சாப்பிடும் அழகே தனி..
ஆனால் என்ன..
எனக்கும் ,என்னோடு சுத்தும் இந்த பூனையார்க்கும் ப்ரசாதம் கோட்டா கட் ஆகி விட்டது.
'ம்ம்ம்ம்ம்..வரும் வரும் ஜீன் வரும்..ஜூட் விட்டு விடுவார்கள் இவர்கள் எல்லாம்.
அப்புறம் நம்ம ராஜ்ஜியம் தான்' என்று நான் சொல்ல..
புரிந்தது போல போஸ் கொடுத்த பூனை..
No comments:
Post a Comment