Tuesday, January 19, 2016

இசைப் புயல் ரஹ்மான்



Azeem o shaan shehanshah
ரஹ்மான் வாழ்கவே..

சின்ன சின்ன ஆசைக்காட்டி
சிறை பிடித்தாய் உள்ளத்தை
உன் இசையின் ஈர்ப்பினிலே
உலகம் ஒன்றா னதிங்கே..

ஆஸ்கார் மேடையிலும்’
அமைதியே உருவாக
அடக்கத்தின் சிகரமாய்

எல்லாப் புகழும்
என் இறைவனுகென்று

தாய் மண்ணைத்
தலை நிமிரச் செய்த

தவப் புதல்வன் நீ…
 
சின்னக் குழந்தைக்கு
சிக்கு புக்கு ரயிலு…

 வெள்ளைப் பூக்கள் மலர
விசையானது உன் னிசை..

ஒரு தெய்வம் தந்த
தங்கப் பூ நீ..

முஸ்தஃபா முஸ்தஃபா
முணு முணுக்கும்

மூன்று தலைமுறையும்…
Take it easy policy

தாரக மந்திர மாச்சிங்கே…

பேட்டை rap பாடியது
மேட்டுக் குடியு மிங்கே..

ஆத்தங்கரை மரமும்
Ale ale பாடுமிங்கே..

மெட்டுப் பல போட்டு
மயிலி றகாய் வருடினாயே..

என்றென்றும் புன்னகையோடு
ஏற்றமுடன் நீ வாழ

என்றும் அவனருள் வேண்டும்
ஏராள ரசிகர் கூட்டம்..

ஆயிரத்தி லொரு வருவன் நீ
ஆண்டவன் அனுப்பிய

அல்லா ராக்கா ரஹ்மான் நீ

நீடூழி வாழ்க
நீடூழி வாழ்க..

அன்புடன் வாழ்த்தும்
அகிலா

(6-01-2016)

 

பிறந்த நாள் வாழ்த்து


 

friend request ஒன்று

forever பந்தம் ஆனது...


வலையிலே வந்த நட்பு

 வளர்ந்து நீண்டு

 வலம் வரும் நட்பு
 

முகம் கண்டு வாராத
 அக வழி வந்த

 அருமையான நட்பு.
 

என்ன சமையல்
 என்று துவங்கி

 ஏராளமாய்ப் பகிர்தல்கள்.
 
இரண்டாண்டு ஒடியது
 இறுகியது எம் நட்பு.

 
தேர்ந்தெடுத்து வார்த்தைகள்

 தேனாய்ப் பேசுவள் இவள்

 குயிலும் குறுகிப் போகும்

 தையலிவள் குரலினிமையில்

 பாங்குடன் பணி செய்வள்

 பாசத்தை அள்ளி வீசுவள்..

புன்னகைக்கு அரசியிவள்

 கன்னமிடுவள் உள்ளத்தை

 குடும்பத்தின் வேரிவள்

 வடம்பிடித்து  வழினடத்துவள்.
 

நாளும் ஒன்று வந்தது

 நானும் அவளைக் காண...

 காந்தக் கண்களும்

 சாந்த பாவமும்

 பாந்தமாய் அலங்காரமும்

 பளிச்சென்ற புன்முறுவலும்

 பரந்த மனமும் கொண்ட

 புத்தனின் பாதை செல்லும்

 பூலோக தேவதையிவளோ
 

அவள் வீட்டிலே வீசும்

 அன்பின் அரும் வாசம்

 ரீங்காரமிடும் இன்றும்

 அந்த முதல் சந்திப்பு.

 
காலங்கள் கடந்திடுனும்

 குறையாத நம் நட்பு.
 

பிடி அவல் தந்து

பீடிலிருந்து மீட்டான்

குசலனைக் கண்ணனுமே

பிடிப்பும் துடிப்பு

பிடி என்று நீதந்தாய்

புத்த நெறி வழிகாட்டி..

 
பிறந்த நாள் இன்று காணும்

 பிரிய தோழி புவனா உனக்கு

 பெரிதாய் என்ன தருவேன்...?

வரிகள் வழினடத்த

 வாழ்த்துக்கள் ஒன்றைத் தவிர..

 

உலகிலுள்ள இன்ப மெலாம்
 உன் வாசல் வந்தடைய

 உள்ளத்து வேண்டுதலிது

 உள்ளத்து வேண்டுதலிது..

 என்றென்றும் அன்புடன்

 அகிலா

 

Monday, January 4, 2016

புத்தாண்டுப் ப்ராத்தனை


இறை வணக்கம்

 தேடி யெங்கும்   அலையத் தேவையில்லை  
தெரு முனையிலும்  அழகாய் அமர்ந்தே
வரு வினைகள்  களையும் -அத்தும்பிக்கை
 நாதன்  தாள்  போற்றி.

 அண்டமது எதுவென்று அண்ணன் விளம்ப  
கொண்ட  கோபமது  தான் காட்ட
ஆண்டிக்  கோலமது  பூண்ட -பழனி
ஆண்டான் தாள் போற்றி.

 மான்  விழியாள்  மனம் நிறைக்க
மின்னும் மானைத் துரத்தி ஓடி
மாய  வலையில்  சிக்கிய  - சீதாராம
பிரான் தாள் போற்றி.

 இலக்குவன்  இன்னுயிர்  தனைக் காக்க
இலையது  எது வென்றே  தேடித்தேடி

லகுவாய்  இமயத்தை  இடம்பெயர்த்த -ராமபக்த
ஹனுமான் தாள் போற்றி.





போற்றிப் பாடினேன் புது வருடம் பிறக்கையிலே

சிறப்பொடும் சீரோடும் எம் வாழ்வு மலர்ந்திடவே

அறமும் அன்பும் அண்ட மெல்லாம் நிறைந்திடவே
அள்ளித் தாரும் உம் அருளை