Wednesday, June 29, 2016

துணை

வளர்ந்(த்)த பிள்ளைகள்..
வெளிநாட்டில்..
வாழ்க்கைப் பிடிப்பு..
வாலாட்டும் இவர்களால்..

துணை

வளர்ந்(த்)த பிள்ளைகள்..
வெளிநாட்டில்..
வாழ்க்கைப் பிடிப்பு..
வாலாட்டும் இவர்களால்..

Monday, June 27, 2016

தாத்தா பூ


ஐயோ..
காலடியோசை கேட்குதே..
கழுத்தைத் திருகி..
கழுவில் எனை ஏற்ற
களியாட்டம் போட்டு..
கயவர் கூட்டம் நெருங்குதே..

புதரிலே பரவிய என்னை..
பதறச் செய்யுதே..
பதர் இவரின்..
பாவக் கரங்கள்..

தவிப்பில்..எப்போதும்
தாத்தா பூக்கள்..

தலை கொய்யும் விளையாட்டாம்
தாத்தா பூ விளையாட்டு..
தலைமுறை போனாலும்..தொடரும்
இந்த விளையாட்டு..

தந்தார் யார் அனுமதி?
தாத்தா பூ எனைக் கொல்ல..
உயிர் தந்தவன் ஏனோ..
உறங்கிக்  கிடக்கின்றானே..!!

வெட்டும் கைக்கு..
விலங்கெங்கே...??
துண்டிக்கும் கைக்கு..
தூக்கு மேடை எங்கே....??

என் மனம் அழுகிறது..

தற்காப்பு..தெரியலையே
தாத்தா பூக்கள் போல
பல..
சுவாதிப் பூக்களுக்குந்தான்...

காட்டு மல்லி

காட்டு மல்லி...
கடுகளவும் கசப்பில்லை..
கடவுள் தந்த வாழ்வுக்கு..

ஆஹா..மல்லி..
அருகே வருவார்..
ஐயே..காட்டுமல்லி..
அகன்று போவார்..

மணமணக்கும் மல்லியாய்..
மண்ணில் பிறக்கலையே..
மருகியதே இல்லை..
குண்டும்..ஜாதியும்.
கூறும் குறைகேட்டு..

மொட்டிலே கிள்ளி ..
மருந்தும் அடித்துவிட்டு..
மூட்டையாய்க் கட்டி..
மூச்சு திணற..
மோட்டரில் ஏற்றி..
மார்க்கெட் டுக்குப் போய்
கூடையிலே கொட்டி
கூறு போட்டு
கூவிக் கூவி வித்து..
பேரம் பேசி..
அய்யோ சாமி..

இன்று இதன் வாசம்..
கல்யாணத்திலா..
கருமாதியிலா..
குரங்கு கைப் பூமாலையாய்..
குமுறும் வாழ்வு..

காட்டு மல்லியே..
கடவுளால் இரட்சிக்கப்பட்டவன்..
நீ... என்றது ..
கனத்த மன(ண)த்துடன்..

Wednesday, June 22, 2016

சிறை


உன்னை அடக்கும் முயற்சியில்..




நான் தான் அடைபட்டேன்..

என் சமையலறை..

சிறையானது..



தோகை விரித்து நீ ..

ஜாலம் செய்தாலும்…என்

ஜன்னல் வழி திறவாது..



உன்னைத் தெரியாதா எனக்கு..

இடத்தைக் கொடுத்தால்..

மடத்தைப் பிடிப்பாயே..

மாடப் புறாவே..

Saturday, June 18, 2016






தங்கம் விலை..
தக்காளி.. !!

பிளாட்டினம் விலை..
பீன்ஸ்..!!

பட்டாணி..
எட்டாக் கனி..!!

'பெரிய பொடலங்கா நீ'..
பக்கம் கூட போக முடியல..

வேதாளமாய் ..
ஏறும் முருங்கை..

கொத்தமல்லி..
கருவேப்பிலை
கொஞ்சம் இஞ்சி...
கொசுறு வாங்கி நாளாச்சு..

பை நிறைய காசும்..
மணிபர்ஸில் காயும்...

அந்த நாள் ....
வெகுதூரமில்லை..

Airport

airport...

வானூர்தி நிலையம்..
வழக்கமான ...
வழி அனுப்புதலும்..
வரவேற்புகளும்..

விடை கொடுக்க மனமின்றி..
விம்மும் நெஞ்சங்கள்..
'பத்திரமா போய் வா' க்கள்..
நினைவுகளை படம்பிடித்து
miss you என்ற
status update கள்..

கண்ணில் வழியும் நீரை..
யாரும் காணாமல் துடைக்கும்..
நட்பும்..
கைகாட்டி வழி அனுப்பி..
கண் எட்டும் வரை..
எம்பி எம்பி பார்த்து
எட்டாத் தூரம் செல்லும்வரை..
விட்டுச் செல்ல மனமில்லாத
பிணைப்புகள்..

வருவோரை வரவேற்க..
வருமே ஒரு கூட்டம்..

சொர்க்க வாசல் திறப்பு போல..
அர்த்த ராவிலும்..
அசராது காத்திருக்கும்..
அன்புள்ளங்கள்..

தள்ள முடியா trolley யுடன்..
தன் சொந்தங்களைத் தேடும் கண்கள்..
ஆனந்த கண்ணீரோடு..
அள்ளிக் கொண்டாட
ஆசையாய் ஓடிச் செல்லும்
அம்மா ..அப்பாக்கள்..

பத்து வயது குறைந்திடும்..
பேரக் குழந்தைகளைப் கண்டதும்..
துள்ளியோடிய தாத்தா பாட்டிகள்..
பிஞ்சுக் கை பிடித்து...அது
கொஞ்சும் மொழி கேட்டு..
தனை மறக்குந் தருணங்கள்..

பன்மொழியில்..
பாச வரிகள்..
வீசிய..பாச வலைகள்..

கணிணிப் பையுடன்.
காலை மாலை மறந்து..
களைப்புக் கண்ணோடு..
கார் டிரைவரைத் தேடும்..
கடமைக் கண்ணாயிரங்கள்...

அடைப்பே பாராத கடைகள்
காபி டீ முதல்..
continental வரை..
காசு மட்டுமே பேசுமிடம். .

சிரத்தையாய் கூட்டிப் பெருக்கி..
மீண்டும் தூக்கத்தை தொடரும்..
துப்புரவுப் பணியாளர்கள்..
அவர்களின் வேலைப் பளுவைக் குறைத்த..
swachh bharath abhiyan..

 மிடுக்காய் உடையணிந்து..
மலர்ந்த முகத்தோடு..
இரவையும் பகலாக்கும்..
புன்னகை குத்தகையெடுத்த
புதுயுக சுறுசுறு இளைஞர்கள்..

மகள் வரவுக்காக..
காத்திருந்த மூன்று மணி நேரம்..
பாலு மகேந்திரா இயக்கத்தில்..
ராஜாவின் பின்னனியில்..
மனிதர்கள்..
மனங்கள்..எல்லாம் கலந்த..
airport..ஒரு
art film போல..
எண்ணத்தை விட்டகல மறுக்கிறது..


முன்ன மாதிரி இப்போ..
யாரும் இல்லனு..
புலம்புவர்களுக்கு...
இந்த விமான நிலையக் காட்சி..
ஒரு எதிர் தரப்பு சாட்சி...


Wednesday, June 15, 2016

விலை

தங்கம் விலை..
தக்காளி.. !!

பிளாட்டினம் விலை..
பீன்ஸ்..!!

பட்டாணி..
எட்டாக் கனி..!!

'பெரிய பொடலங்கா நீ'..
பக்கம் கூட போக முடியல..

வேதாளமாய் ..
ஏறும் முருங்கை..

கொத்தமல்லி..
கருவேப்பிலை
கொஞ்சம் இஞ்சி...
கொசுறு வாங்கி நாளாச்சு..

பை நிறைய காசும்..
மணிபர்ஸில் காயும்...

அந்த நாள் ....
வெகுதூரமில்லை..

விடியல்

மேகப் போர்வைக்குள்ளே..
முடங்கி கிடக்கும் மார்த்தாண்டனே..
மணி ஒன்பதாச்சு..
இன்னுமா தூக்கம்..
சூரியனுக்கும்..
சுப்ரபாதம்..பாடும்..
super..அம்மாக்கள்..

Saturday, June 4, 2016

கடமை..

கிழவி காத்திண்டிருப்பா..
கைத்தடியும்..
காய்கறிப் பையோடும்..
கடமை...

மனசே ரெடியா..

மனசே ரெடியா..

வளரும் பிள்ளைகள்..
தளரும்..நம் கைப்பிடி..
விலகும்..நம்மைவிட்டு..
விரும்பியே ஏற்கணுமிதை..

புடவை தலைப்பில் ஒளிந்தது போய்..
புது உலகம் காணப் புறப்படும்..

கடைகடையாய்  சுற்றியது போய்..
கார்டுடன் தனியாய்ப் போகும்..

அரவணைப்பில் அயர்ந்தது போய்
அடுத்த அறை தள்ளிப் போகும்..

வாய் ஓயாத பேச்செல்லாம்..
வரலாறாய் ஓர் நாள் ஆகும்..

இஷ்ட்டமேனு செய்த தெல்லாம்..
இப்ப வேணாம் அப்பற மாகும்..

ஆசையாய் சேர்த்த தெல்லாம்..
அய்யோ... old fashion ஆகும்

குழந்தடா..நீ என்றால்..
குமுறிக் கொந்தளிக்கும்..

வளர்ந்தும் இப்படியா என்றால்..
வளைந்து கழுத்து கட்டிக் கொஞ்சும்..

தோழியாட்டம்  சமத்தா இருன்னா..
அவள் அம்மா போல் நீ மாறு என்கும்..

அடுக்கிய அலமாரி அலங்கோலமாகும் ..
அழகிப்போட்டி நடை நடக்கும் ..அறைக்குள்ளே..

செக்கிழுத் தெண்ணை செழிப்பாகிய கூந்தல்..
சிக்கெடுக்கா..செம்பட்டை யாகும்.

எங்கே போறே ங்கற கேள்வி..
எதிரியாய் நமை எடுத்துக் காட்டும்..

யாரோடு போறே நு கேட்டாலோ..
ஆறாத சீன மாகும்..

பத்திரமா போ என்றால்..
பாப்பாவா நான் ..பதிலடிக்கும்..

ஏட்டிக்குப் போட்டி..
எப்போதும் வாதங்கள்..

வீட்டிலே..சிங்கம்..
வெளியிலே தங்கம்...

எதிர் வீட்டு மாமி
ஏகமாய்ப் புகழ்வாள்..
என்ன ஒரு சமத்துக் குழந்த..
என்னமா வளர்த்திருக்கே..
எனக்கும் சொல்லிக் கொடேன்னு..

அற்ப சந்தோஷங்கள்..
அரை நொடியில் பறக்கும்..
அனல் தெறிக்கும்...argument..
அடச்சீ..போ..விலகல்கள்..

அந்த நாளும் வரும்..
....
'என்ன இருந்தாலும்..
என் அம்மா போல வருமா.'.!!!
இன்று நான் சொல்வதை..
இவர்களும் சொல்லும் ..
இனிய காலம் வரும்..!!!

Thursday, June 2, 2016

Happy birthday..Ilayaraja sir..



உனக்கு ரொம்ப பிடிச்ச ராஜாவின் பாட்டு எது?..
உடனே பதில் சொல்ல முடியுமா ...யாராவது..?
இது இல்ல..அது..
ஐயோ.. அந்த பாட்டு இதை விட பிடிக்கும்.
இப்படியே..அடுக்கிண்டே போவோம்..
ஏனா..நாம எந்த mood ல இருக்குமோ..அந்த situation க்கு ஒரு பாட்டு உண்டு..ஒரு BGM உண்டு..

இப்படி யாதுமாகி நம் வாழ்வில்..ஒரு இசைப் பிணைப்பு..

ஒரு ஜீவன் நீ அழைத்தாய்...
உன் இசையால்..
ஓராயிரம் உள்ளம் இணைந்தோம்..

அகத்துள் நுழைந்து..
ஆவியுடன் கலந்தது..் உன்னிசை..
வரிக்காக பாடல் கேட்டது போய்..

வாத்தியங்கள்...வருடும் மாயம்..
விந்தையாய்..உணர்வு..
பின்னனி இசையோ..
பேசி மாளாது..

வருடங்கள் போனாலும்
வருடல் உன் பாடல்..
 நம்முடனே..நடை போடும்..ராஜ நடை..அது ராஜாவின் இசை..நம்முள் கலந்த இசை.

உன் இசையில் தொடங்கும்..
எம்
புத்தம் புது காலை..
நித்தமும் புதுசாய்த் தெரியும்
பொன்மாலைப் பொழுதுகள்..

ராக தேவனே..
உன் நாள் இன்று..
சங்கீத மேகம் தேன் சிந்தட்டும்..
ஆகாயம் பூக்கள் தூவட்டும்..
என்னாளும் பொன்னாளாய்..
உன்..
பொழுதுகள் விடியட்டும்..
வாழ்த்த வயதில்லை..
வணங்குகிறேன்..
Happy birthday raja sir

உறவுகள்

ஒட்டினா..
ஓரம்போ ங்கும்..
ஒதுங்கினா..
ஓர் குறை சொல்லும்..

உறவுகள்.....இதன்
உள்ளர்த்தமென்ன...????
உதிரலும்..
உதறலும்..
உள்வாங்கும்..
உபாய மென்ன...???