Thursday, August 25, 2016

Janmashtami

வெல்ல சீடை..
உப்பு சீடை..
தட்டை..
தேன்குழல்..
அவல் பாயசம்..
வடை..
பால்..பழம்...
தயிர் ..வெண்ணை..
எல்லாம் வெச்சாச்சு..
வாசலில்லேர்ந்து..
உள் வரை..
உன் காலும் போட்டாச்சு..
விளக்கும் ஏற்றி..
ஆயர் பாடி மாளிகையில்..
cassette பூரா பாடியாச்சு..
எப்பவும்..வந்துடுவியே..
இன்னிக்கு எங்கே காணோம் இன்னும்..
பக்கத்து வீட்டில் ஏதோ சத்தம் கேட்க..
என்னனு போய் எட்டிப் பார்த்தேன்..
என்னத்த சொல்ல..
நீயுமா..கண்ணா..இப்படி..
கையில் pizza piece ம்..
வாயில் maggi யும் ரொப்பிண்டு..
ரொம்ப நன்னா இருக்கு..
பேஷ் பேஷ் னு..
இனிமே மெனுவை மாத்துங்கோ..
I need a change ..
சொல்றது நீதானா..
fast food க்கு..
flat ஆகிட்டயா நீயும்..

சந்தோஷத்தில்...
வரும் சந்ததிகள்..
கண்ணா..so sweet..

Sunday, August 21, 2016

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம்

ஆண்டுதோறும் வரும்..
ஆவணி அவிட்டம்..
அசைபோடும் மனது..
அந்த நாள் நினைவுகளில்..

திருநெல்வேலி...
திருவனந்தபுரம்..
திருச்சி..
தாரமங்கலம்..
கோவில்பட்டி..
வேலூர்..
எல்லா ஊரும் என்
சின்னஞ்சிறு..
டெல்லி வீட்டில்..
நண்பர்கள் வடிவில்..

கை நிறைய காசு..
பையில் கொஞ்சம்..
காய் பழம்..
வாழை இலை..
வானை எட்டும் விலையில்..
காய்கறி வியாபாரி..
கோடீஸ்வர ராய்த் தெரிவார்..
(இலையை அலம்பி எடுத்து recycle பண்ணலாமானு idea கொடுக்கும் மாண்புமிகு மச்சினர் dhileepan)

பாண்ட் சர்ட் போட்டவரெல்லாம்..
பட்டு வேட்டி சர சரக்க..
பட்டைப் பட்டையாய்..
வீபூதியோடு..
ஒரு சிலர் சிரத்தையாய் ..
ஒரு சிலர்..
செஞ்ச பாவத்துக்கு ஒரு ஓம்..
செய்யும் பாவத்துக்கு ஒரு ஓம்..
செய்யப்போறதுக்கு ஒரு ஓம் ..சொல்லி
புதுப் பூணல் போட்டு..
புதுப் பொலிவோடு..
ஆரத்தி எடுத்து..
அட்சதை போட்டுண்டு
மாமி ..சமையல் ரெடியானு..(நான்தான் மாமி எல்லாருக்கும்)
மடமனு இலை போட்டு..
வட்டமாய் உட்கார்ந்து..
வடையும் பாயசமும்..
கூட்டும் குழம்பும்..
கண்ணிமைக்கும் பொழுதில்
காணாமல் போகும்..
கவலை எட்டிப்பார்க்கும்..
இன்னொரு round கேட்டு..
இல்லனு சொல்லாம..
நிறைவா இருக்கனுமேனு

(என் சமையலையும்..சிலாகித்து... என்னை
ஊக்குவித்த என் கணவரின் அன்பு நட்பு வட்டம்)

வயிறு நிரம்பியதும்..
செவிக்குணவு ஆரம்பம்..
ராஜாவும் ரஹ்மானும்..
இந்த பாட்டு..
அந்த ராகம்..
analysis..
அனல் பறக்க..
பின்..
ஒரு குட்டித் தூக்கம்..
filter coffee..
விடை பெறுதல்..
( தொட்டி்யில ்ரொம்பிய பாத்திரம்..தாயம்மா வந்ததும் பளபளக்கும்..
இத்தன பேரை ஏம்மா கூப்பிடறே..என்பாள்..)..
கால ஓட்டம்...அவரவர் திசையில்..வேலை ..குடும்பம்..
இப்போ..மிச்சம் இருப்பது இந்த இனிய நினைவுகள் ...
திரும்பி வராத
தித்திப்பான தருணங்கள்...

தேடல்

எல்லாம் வாங்கியாச்சா..
எத்தனை பேர் சாப்பாடு..
காலைல எழுந்ததும்..
காத்துல பறந்துடும் நேரம்..
காய் கறி நறுக்கி..
கோலத்துக்கு அரைச்சு..
சாமி உள் சுத்தம் பண்ணு
வெல்லம் பொடிச்சுடு..
விடு விடுனு வேலை ஆகும்..
கரெண்ட் போறதுக்குள்ள..
grinder ,mixie வேலையாகட்டும்.
சமையல் மேடை ..
சகதியா இருக்கப்படாது..
பளிச்சுனு இருக்கணும்...
கீழ மேல சிந்தாமல்..
பாந்தமாய் வேலை செய்யனும்..


மாமி வந்தாச்சு பாரு..
நலங்கிட்டு..நமஸ்காரம் பண்ணு..
நன்னா..சாப்பிடுங்கோனு..
நாலும் கேட்டு பறிமாறு..
இந்த புடவை எடுப்பா அமைஞ்சிருக்கு..
நன்னா..select பண்ணியிருக்கே..

சாயந்திரம் சஹஸ்ரநாமம் பாராயணத்துக்கு..
சுண்டலும்..கேசரியும் பண்ணு..
பையில வெத்தல பாக்கோட
பழமும் தேங்காயும்...
pack பண்ணி வெச்சுடு...
பாராயணம் முடிஞ்சு..
எல்லாரும் போயாச்சு..
காலம்பறலேர்ந்து..பம்பரமா சுத்திட்டே..
நாளைக்கு லீவு நாள் தானே..
நிம்மதியா கொஞ்சம் தூங்கு..
நல்லபடியா எல்லாம் ஆச்சு..

எப்போதும் போல் என் அம்மா..
என்னை....ஆட்டுவிக்க..
எனக்குள்ளே ஒரு கேள்வி..!!!

இத்தனை பேரில்..
யாராய் நீ வந்தேமா.
எப்போ வந்தே..
எனக்கு அடையாளம் தெரியலயே..
நான் கவலையாய் கேட்க..
புன்னகை ஒன்றே பதிலாய்..
photo வில் நீ..

Thursday, August 11, 2016

Exam

எத்தனை முறை படித்தாலும்
ஏமாற்றுமே புதுப்புது கேள்விகள்.
தோல்வியால் துவளமாட்டேன்..
அடிபட்டாலும்..
எழுவேன் நிதமும்..
இந்த வாழ்க்கைப் பாடத்தில்..
என்றாவது  ஒருநாள்..
வெற்றி கிட்டுமென்று..

Good morning

my pallette of life...
blended with..
shades of sober and bright..
oh my lord..
bestow thy blessings..
fill my heart..
flowing with one and only..
color....
that's the purest..
white..white..white...

Tuesday, August 9, 2016

சந்திப்பு

விடிந்ததிலிருந்தே..
வேளை இன்னிக்கு ..
ஒழுங்கா போனுமே..
தொண்டை க் குழியில்..
இனம் புரியா..இடைஞ்சல்..

சூட்டிகைனு சொல்லுவாளா..
சுறுசுறுப்பு..சபாஷ் கிட்டுமா..
மகிழ்ச்சியா இருக்காம்பாளா..
மந்த்ம் சரியான என்பாளா..
பொறுப்பு ..என்பாளா..
பொறுமையே..யில்லைம்பாளா.
அரட்டை என்பாளா..
அசமஞ்சம் எப்போதும்பாளா..
மரியாதையே இல்லம்பாளா..
மதிச்சு நடக்கறாம்பாளா..
'கலகல' என்பாளா..
கடுகு போட்டா வெடிக்குதென்பாளா..
லாயக்கே இல்லைம்பாளா..
லட்சத்ததில் ஒருத்திம்பாளா..
முன்னேற்றம் என்பாளா..
முடியாது இவளோடன்பாளா..
மனசிலே கலக்கத்துடன்..
'may i come in madam'..என்றேன்..
parent teacher meeting இன்று..