Sunday, August 21, 2016

தேடல்

எல்லாம் வாங்கியாச்சா..
எத்தனை பேர் சாப்பாடு..
காலைல எழுந்ததும்..
காத்துல பறந்துடும் நேரம்..
காய் கறி நறுக்கி..
கோலத்துக்கு அரைச்சு..
சாமி உள் சுத்தம் பண்ணு
வெல்லம் பொடிச்சுடு..
விடு விடுனு வேலை ஆகும்..
கரெண்ட் போறதுக்குள்ள..
grinder ,mixie வேலையாகட்டும்.
சமையல் மேடை ..
சகதியா இருக்கப்படாது..
பளிச்சுனு இருக்கணும்...
கீழ மேல சிந்தாமல்..
பாந்தமாய் வேலை செய்யனும்..


மாமி வந்தாச்சு பாரு..
நலங்கிட்டு..நமஸ்காரம் பண்ணு..
நன்னா..சாப்பிடுங்கோனு..
நாலும் கேட்டு பறிமாறு..
இந்த புடவை எடுப்பா அமைஞ்சிருக்கு..
நன்னா..select பண்ணியிருக்கே..

சாயந்திரம் சஹஸ்ரநாமம் பாராயணத்துக்கு..
சுண்டலும்..கேசரியும் பண்ணு..
பையில வெத்தல பாக்கோட
பழமும் தேங்காயும்...
pack பண்ணி வெச்சுடு...
பாராயணம் முடிஞ்சு..
எல்லாரும் போயாச்சு..
காலம்பறலேர்ந்து..பம்பரமா சுத்திட்டே..
நாளைக்கு லீவு நாள் தானே..
நிம்மதியா கொஞ்சம் தூங்கு..
நல்லபடியா எல்லாம் ஆச்சு..

எப்போதும் போல் என் அம்மா..
என்னை....ஆட்டுவிக்க..
எனக்குள்ளே ஒரு கேள்வி..!!!

இத்தனை பேரில்..
யாராய் நீ வந்தேமா.
எப்போ வந்தே..
எனக்கு அடையாளம் தெரியலயே..
நான் கவலையாய் கேட்க..
புன்னகை ஒன்றே பதிலாய்..
photo வில் நீ..

No comments: