Sunday, October 28, 2018

புல்லு..மண்ணு..கீரைக்கட்டு

புல்லு..மண்ணு..கீரைக்கட்டு

கீரை ...பச்சை பசேல்னு பார்த்ததும் நாக்கில் ஜலம் ஊறும். கொஞ்சம் பருப்பும் தேங்காயும் போட்டு கடைந்து உண்டால் தேவலோக சுகம்..
'அக்கா ..ரெண்டு கட்டு எடுத்துக்கோ' என்றாள் என் ஆஸ்தான காய்க்காரம்மா.
கட்டைப் பிரிக்கும் முன் தேடி எடுத்தேந் என் க்ளவுஸ்..அத்தனை மண்ணு.. குடலைப் பெரட்டி எடுக்க..
வாட்ஸப்பில் வந்த வயிற்றை கலக்கும் வீடியோவும் நினைவுக்கு வர ..சர்ப்பம் எதுவும் சயனத்தில் இருக்குமோங்கற பயத்தில் .பக்தியோட கட்டைப் பிரிச்சேன்..அப்பாடா..அப்படி எதுவும் இல்ல..
 மண்ணும் புல்லும் ஃபுல்லா இருக்க..
ஆராய்ச்சி பண்ணி ஆய்ந்து வெச்சாச்சு..
இப்போ அடுத்தது அலம்பி எடுக்ணும்..
அள்ள..அள்ள குறையா..மண்ணு..
அரை டாங்க் தண்ணி  காலி. நெத்தி வேர்வை நிலத்தில் விழ..சுத்தம் பண்ணியாச்சு..
ரெண்டு கட்டு கீரை..ரெண்டு கரண்டியாச்சு வெந்ததும்...
அப்போதான்..மனசு இறக்கை கட்டி சீரங்கத்தை நோக்கி பறந்தது..
சித்திரை வீதியில் வித்தாலும..்வீட்டு வாசலில் வந்து வித்தாலும்..
கீரை கடையும் மணம்..கிறங்க வெக்குமே எப்பொதும்..
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..
அதெல்லாம் திரும்பியே வராதா..நல்ல் சுத்தமான  காயெல்லாம் சமைக்க..சாப்பிட காலம் மறுபடியும் வராதா..ஏக்கத்துடன் அகிலா..
சரி..சரி..ஓவரா செண்டி போடாத..மைண்ட் வாய்ஸ் சொல்லி..போன வருஷம் போட்ட பாட்டை மார்க்கு ஞாபகப் படுத்த..
விரைகிறேன்..ஒரு வெட்டு வெட்ட

கீரை ஆய்தல்

கடைந்த பாற்கடலில்..
கிளம்பி வெளியேறியது...
ஆலகால விஷமென்றால்..
கடையும்..
கீரை எம்மாத்திரம்..
பழுதும்..பழுப்பும்..
படியும் அழுக்கும்..
பாங்காய் விலக்கி..
பருப்போடு கடைந்து..
A விட்டமின் சத்தோடு
அன்புமும் கூட சேர்த்து..
மசித்த கீரை..
மயக்க வைக்காதெனினும்
மறுபடி கேட்க வைக்குமே.

Saturday, October 20, 2018

தீபாவளி

Count down..
Celebration.. Mood..
Sweets and snacks..
Shopping and greetings..
Trials and errors..

Its diwali time...

சட்டியிலேயே  ஒட்டிய..
அல்வாவும்..
பல்லை உடைக்கும்.
பர்ஃபிக்களும்...
கோணிப் போன
முறுக்குகளும்..
கல்லாய்ப் போன..
மைசூர் பாக்களும்..
பாதி வெந்த
பாதுஷாக்களும்..
பிறவிப் பயனை அடையா
(லட்டு)பூந்திகளும்..
கோல்ட் நிறம் மாறிய..
globe(gulab)..ஜாமுன்களும்..
உருட்டுக் கட்டைகளாய்..
ரவா..பயத்தம் உருண்டகளும்
வெந்த புண்ணில் வேல் போல..
நெட்டில் கண்ட ரெசிப்பிக்களும்
நிஜத்தில்..நோகடிக்க
போன வருஷம்..
பட்டது போதும்..
ஃபோனைப் போடு..
'மாமி...மிக்ஸரும்..மைசூர்ப்பாவும்..
முதல் நாளே அனுப்பிடுங்கோ..
இனிமே...நிம்மதியா.
போத்தீஸ்..நல்லி..குமரன்..
ஷாப்பிங்...ஷாப்பிங்..ஷாப்பிங்..

( Geetha Chandra mam...உப்புமால ஆரம்பிச்சது..அடுத்த வாரம்..twist and turns உடன்..பல பதிவுகள் முக நூலில் வலம் வரும்..திடமா இருங்க..)

Friday, October 12, 2018

கெளரி கல்யாணம் வைபோகமே..

கெளரி கல்யாணம் வைபோகமே..

'சுகன்யா..ரெடியா..நாழியாச்சும்மா..
ப்ளான் பண்ணபடி எல்லாம் எடுத்து வெச்சியா? வாட்சப் க்ரூப்பில எதுக்கும் செக் பண்ணிடு..அப்பறம் அது இல்ல இது இல்லனு சொன்னா கூட அங்கே எதுவும் கிடைக்காது..நாணா அடுக்கிக் கொண்டே போனான். ராதுக் குட்டி தன் பையுடன் ரெடி..அப்பா..அப்பா.. அண்ணா..அக்கா எல்லாரும் வராளாப்பா..ஜாலியா இருக்குப்பா..என்றாள்..
நாணா ஃபோனும் கையுமா..டேய் சுந்து கிளம்பிட்டியா ..map அனுப்பி இருக்கேன் பார் க்ரூப்பில..
அதுக்குள்..மூர்த்தி கிட்டேர்ந்து ஃபோன் வரதுடா..நாம நேரா பேசலாம்..
லலிதா அக்காவையும் அத்திம்பேர் குழந்தைகளை நீ பிக் அப் பண்ணிடுடா..
ராமு  குடும்பம் சுகந்தி கார்ல வந்துடுவா.. பாட்டி, தாத்தா, பெரிம்மாவுக்கு நான் வண்டி அனுப்பிச்சுட்டேன'்..ரெடியான
சுகன்யா கிளம்பலாமானு முறைக்க..ஒரு வழியா கேட் பூட்டி கிளம்பியாச்சு..
வழியெல்லாம் ராஜா ரஹ்மான் துள்ளல் இசையில் பயணம்..
ஹையா..அப்பா resort வந்தாச்சு..ராது குட்டி குதிக்க..அங்கே ஏற்கனெவே சுந்து வந்தாச்சு. ஒவ்வொருவரா வர..பொண்டுகள் எல்லாம் பளபளனு ..புடவை,நகை,சீரியல்..
பேச்சுக்கா பஞ்சம்..
குழந்தைகள்..ஒரு சூப்பர் மழலைப் பட்டாளம்..இங்கேயும் அங்கேயும் ஓடி ஒடி ஆட்டம்..தாத்தாக்கள் ஒரு க்ரூப்..சித்தி,பெரிம்மா அத்தை எல்லாம்
இன்னொரு க்ரூப்..கும்மாளம் தான்..
சிரிப்புதான். குழந்தைகளா எல்லாரும் காலம்பற மூணு மணிக்கு எழுந்துக்கணும் ..போய்த் தூங்குங்கோ..பெருசெல்லாம் மிரட்டிட்டு சீட்டு கச்சேரியில் மூழ்க
அலாரம் அடிக்கும் முன்னாடியே கண்ணைக் கசக்கிண்டு ஒவ்வொருத்தரா முழிக்க..பாட்டி சூடாக் காய்ச்சின எண்ணெயும் கையுமா..மணையில் உக்கார வெச்சு..வெத்தலை குடுத்து கெளரிக் கல்யாணம் பாடி எண்ணை வெக்க..சீனு சித்தப்பா பட படனு ஒரு 1000 வாலா கொளுத்த..குளிச்சுட்டு வந்தவாளுக்கு ரெடியா மருந்து..குட்டீஸ் எல்லாம் புதுத் துணி போட்டுண்டு மத்தாப்பு கொளுத்த..டிபன் சாப்பாடு, ஃபோட்டோ என ....சந்தோஷம் பொங்கும் வேளையில் நாணாவுக்கு நாலு வருஷம் முன்னாடி அவன் வீட்டு தீபாவளி க்கு வந்த அத்தை கண் முன்னே வந்தாள்.
'நாணா..பண்டி்கைக்கு தான் எல்லாம் ரெடிமேட் ஆ வாங்கி வெச்சுருக்கே..எனக்கு ஒரே ஒரு ஆசை..
இங்கே இருக்கிற ராமு, சுந்து, மூர்த்தி லலிதா எல்லாரையும் தீபாவளிக்கு கூப்பிடேன் என்றதுதான்.. முதலில் தயங்கி சாக்கு போக்கு சொன்னவர்கள் , அத்தையின் ஆசை என்றதும் ஆமோதித்தார்கள். அன்று ஆரம்பித்தது தான் இந்த family reunion. ஒவ்வொரு வருஷமும் ஒரு ஒரு cousin வீட்டில்..குழந்தைகளுடன்..
அவள் செய்த பெரிய புரட்சி.. எல்லா உறவுகளையும் ஒன்று சேர்த்ததுதான்.. இந்த வருஷம் ஒரு மாறுதலா..
ஏன் resort ல கல்யாணம் தான் பண்ண்னுமா..கங்கா ஸ்நானமும் பண்ணி தீபாவளியும் கொண்டாடலாமே..அதான் இன்னிக்கு ஒண்ணா இங்கே எல்லாரும்..அத்தை நம்மள பார்த்து இப்போ சந்தோஷப்படுவா டா..மூர்த்தி கலங்கினான்...டேய்..FB ல நம்ம ஃபோட்டோ எல்லாம் பாத்துட்டு கலிஃபோர்னியா லேர்ந்து கண்ணன் புலம்பித் தள்றாண்டா..தானும் அடுத்த வருஷம் வருவானாம்..
சந்தோஷத்தில் மிதந்தபடி ..கார்கள் கிளம்பத் தொடங்கின..அவரவர் வீடு நோக்கி.. நெஞ்சு நிறைய ஆனந்தத்துடன்..
பண்டிகை அப்படி கொண்டாடினோம் இப்படிக் கொண்டாடினோம்..இப்போ ஒண்ணுமே இல்ல என்று ஒரு பக்கம் இருக்க..
இப்படி பாலமாய் ஒரு அத்தையோ சித்தியோ..எத்தனை சுகம்
அப்ப்டி யாருமே இல்லாவிட்டால்..நாமே ஏன் செய்யக்கூடாது..
பணம்..பொருள் விட்டுப் போகும் வேகத்தில் உறவுப் பாலம் அமைக்க மறக்கலாமோ..நமக்கு பின் நம் குழந்தைகளும் நாம் பெற்ற இன்பம் பெறட்டுமே..
time and place are not constraints if we have the will..

Wednesday, October 10, 2018

சக்தி

ஏதாவது ஒரு விஷயம் நிச்சயம் அம்மாவை ஞாபகப்படுத்தி விடும்.
இன்றும் அதேபோல.. போன வருடம் எழுதிய பதிவு..
நினைவலைகள் தொடரும்..

அரசுப் பணி வேலை..என்
அம்மா ஞாபகம் வரவைத்தது..
SSLC தேர்வில் ..
மாவட்ட முதலவள்..
தலைமை ஆசியிரியை.
தாராளமாக சொன்னார்..
மருத்துவ படிப்புக்கு..
மானியம் நான் தரேன்னு..
குடும்ப நிலமை..
கூறாமல் புரிய..
அரசு வேலை..
அவள் பருவம் பதினாறில்
குட்டிப் பெண்ணவளுக்கு.
எட்டா மேசை..
உயரமாய் நாற்காலி..
சிறிய வேலையில் சேர்ந்து
பெரிய பதவி வரை.
அம்மா..ஒரு all rounder
உள்ளத்தில் உறுதியோடு..
ஊறுகள் வந்த போதும்..
உறுதியாய் நின்று..
உடன் பிறந்தோருக்கு
புது உலகம் அமைத்தவள்..
என்னைப் பொறுத்தவரை..
இவளும் ...
 சக்தியின் வடிவந்தான்..
இவள் போல்..
பல சக்திகள் இங்குண்டு
வெளியே வராத..
வெளிச்சம் போட்டு காட்டப்படா..
எத்தனையோ..
சாதனையாளிகள்..