Saturday, March 30, 2019

அடுப்படி எனக்கென்ன சொந்தமா...? பழைய நினைப்பு.. படை போல் குடும்பம் பொடிசு முதல் பெரியவர்கள் பானையில் சோறு பருப்புக் குழம்பு பொரியலும்..வறுவலும்.. பொதுவாய் சமையல். பந்தியில் அமர்ந்து பாங்காய் பரிமாறல் பங்கிட்டு உணவு பழசுக்கு இடமேது.. பொசுக்கும் வெய்யிலில் பொழுதும் போகவே அப்பளமும் வடாமும் அழகாய் இடுவாளே.. அம்மியும் ஆட்டுக்கல்லும் அங்கே கைகொடுக்குமே தேய்த்தல் துவைத்தல் துடைத்தல் எல்லாமே துரிதமா நடக்குமங்கே தட்ட ஒரு மெஷினில்லாமலே.. இப்பவும் யோசனைதான் எப்படி இப்படி எல்லாம் முடிஞ்சதென்று.. பள்ளியெழுச்சி முதல் படுக்கப் போகும் வரை பம்பரமாய் வேலை எம்பிரானே ஏனென்றேன்.. காப்பி ஒருத்தருக்கு காம்ப்ளான் ஒருத்தருக்கு அருகம்புல் ஜூஸ் ஆறின கஞ்சி ஒருத்தருக்கு திரிஃபலா ஒருத்தருக்கு டீத் தண்ணி ஒருத்தருக்கு காப்பிக் கடையே.. கதவும் மூடாதே.. சுக்கா ரொட்டி சுருள வதக்கிய வெண்டை கடைஞ்ச பருப்பு கெட்டித் தயிர்.. பன்னீர் பட்டர் ஒருத்தருக்கு பத்திய சாப்பாடு ஒருத்தருக்கு பிரியாணி ஒருத்தருக்கு பாஸ்டா ஒருத்தருக்கு.. என்னதான் ஆனாலும் ஒட ஒட ரசமும் ஒரு வடு தொட்ட மோரும் ஒரு வழி வழிக்கலையோ ஒரு திருப்தி வராதே.. ஓஞ்சு போகுதே ஒரு வேளை சமைச்சதுமே.. வகைகள் இப்போ வதையும் ஆச்சே வத்தலும் வடாமும் வகையாய் நொறுக்கலும் விலைக்கு வாங்கும் நிலையும் ஆச்சே.. பகட்டே இல்லா பழைய வாழ்வு பகல் கனவாச்சே ஓடி வந்தாச்சு ஒரு பெருந்தூரம் திரும்பிப் பார்ப்போம்.. திரும்பிப் போகாவிட்டாலும்..

அடுப்படி எனக்கென்ன சொந்தமா...?

பழைய நினைப்பு..

படை போல் குடும்பம்
பொடிசு முதல் பெரியவர்கள்
பானையில் சோறு
பருப்புக் குழம்பு
பொரியலும்..வறுவலும்..
பொதுவாய் சமையல்.
பந்தியில் அமர்ந்து
பாங்காய் பரிமாறல்
பங்கிட்டு உணவு
பழசுக்கு இடமேது..

பொசுக்கும் வெய்யிலில்
பொழுதும் போகவே
அப்பளமும் வடாமும்
அழகாய் இடுவாளே..
அம்மியும் ஆட்டுக்கல்லும்
அங்கே கைகொடுக்குமே
தேய்த்தல் துவைத்தல்
துடைத்தல் எல்லாமே
துரிதமா நடக்குமங்கே
தட்ட ஒரு மெஷினில்லாமலே..

இப்பவும் யோசனைதான்
எப்படி இப்படி
எல்லாம் முடிஞ்சதென்று..

பள்ளியெழுச்சி முதல்
படுக்கப் போகும் வரை
பம்பரமாய் வேலை
எம்பிரானே ஏனென்றேன்..

காப்பி ஒருத்தருக்கு
காம்ப்ளான் ஒருத்தருக்கு
அருகம்புல் ஜூஸ்
ஆறின கஞ்சி ஒருத்தருக்கு
திரிஃபலா ஒருத்தருக்கு
டீத் தண்ணி ஒருத்தருக்கு

காப்பிக் கடையே..
கதவும் மூடாதே..

சுக்கா ரொட்டி
சுருள வதக்கிய வெண்டை
கடைஞ்ச பருப்பு
கெட்டித் தயிர்..
பன்னீர் பட்டர் ஒருத்தருக்கு
பத்திய சாப்பாடு ஒருத்தருக்கு
பிரியாணி ஒருத்தருக்கு
பாஸ்டா ஒருத்தருக்கு..

என்னதான் ஆனாலும்
ஒட ஒட ரசமும்
ஒரு வடு தொட்ட மோரும்
ஒரு வழி வழிக்கலையோ
ஒரு திருப்தி வராதே..

ஓஞ்சு போகுதே
ஒரு வேளை சமைச்சதுமே..

வகைகள் இப்போ
வதையும் ஆச்சே
வத்தலும் வடாமும்
வகையாய் நொறுக்கலும்
விலைக்கு வாங்கும்
நிலையும் ஆச்சே..
பகட்டே இல்லா
பழைய வாழ்வு
பகல் கனவாச்சே

ஓடி வந்தாச்சு
ஒரு பெருந்தூரம்
திரும்பிப் பார்ப்போம்..
திரும்பிப் போகாவிட்டாலும்..

No comments: