Thursday, February 27, 2020

கணவன் அமைவதெல்லாம்...

கணவன் அமைவதெல்லாம்...

நிச்சயமாகும் திருமணங்கள்
நடக்கும் எல்லாம் சுபமேயாம்.

நல்ல இடமாய் அமைஞ்சதில் தொடங்கி..
ஆசைப்போல அமைஞ்சார் மாப்பிள்ளை..
அன்பாய் இருக்க அமைஞ்ச குடும்பம்..
அரவணைத்து  வழிகாட்ட அமைஞ்ச மாமியார்..
நானிருக்கேன் அக்காவென அமைஞ்ச நாத்தனார்..
விரதம் முதல் மறுவீடு வரை அமைஞ்சது  அம்சமாய் எல்லாமே.
புது ஊரு புதுசாய்க் குடித்தனம்
பழக நல்ல மனிதர்களோடு
பாங்காய் அமைஞ்சது எல்லாமே.

போட்டதை சாப்பிடும் கணவர் ஒருநாள்..
போட்டாரே ஒரு போடுந்தான்..
'அமைஞ்சிடுத்து இன்னிக்கு என்னமோ..எல்லாமே..
அகத்துக்காரி உன் சமையலில் தான்'
அய்யோ பாவம் அப்பாவி மனுஷா
அப்பவே நீரும் சொல்லப் படாதோ
ஆக்கி வைத்ததில் குறைஞ்சது என்னனு...
அழுத்தக் கார சாமினு நினச்சேனே
அமைதிச் சாமியா இருந்தீரோ..

அன்று புரிந்தது உண்மையொன்று..
அமைஞ்சது என்ற பெரிய பட்டியலில்
ஆளுமை இல்லா இவரும் அமைஞ்சது
அமைஞ்சதில் எல்லாம் ஒருபடி
மேலோ..

Sunday, February 23, 2020

வரம் தந்த சாமிக்கு

வரம் தந்த சாமிக்கு..

'நர்ஸ்..நர்ஸ்..மணி என்னாச்சு இப்போ..இன்னிக்கு திங்கட்கிழமை.. ராகுகாலம் ஏழரைக்கு ஆரம்புச்சுடும் அதுக்குள்ள எனக்கு டெலிவரி ஆகணும்..ப்ளீஸ்..ப்ளீஸ்..'
வலி தந்த ஈனச் சுவரத்தில் செவிலியிடம் முறையிட்டபடி அந்த அம்மா ..
ஆங்கிலோ இந்தியனான எமிலியா என்ற நர்ஸ் ..what.. raagu..இன்னா சொல்றே man..ஒண்ணு ம் புரில..அவள் விரட்ட..
தாயைப் பிரிய மனம் வராது அந்த சிசு நழுவி ஓட..நான் இங்கேயே இருக்கேனே..எதுக்கு வெளியே போகணும்னு திமிற..
ஒரு வயதான பாட்டியின் குரல்..' அம்மானு கத்தாதேடி..அப்பறம் குழந்தை உனக்கு மட்டும் உன் அம்மா வேணும்..நான் மட்டும் உன்னை வுட்டு வெளியே வரணுமானு உள்ளயே இருக்கும்..சுவாமியை நினச்சுக்கோ'
அந்த சிசுவின் ஜனனம் நெருங்க ..கடவுள் வந்து அதன் காதில் கிசுகிசுத்தார்..' புது உலகு காணப் புறப்படு குழந்தாய்..உனக்கு எல்லாம் ரெடியா காத்திருக்கு..உயிராய் உனை காக்க அம்மா அப்பா, ஊட்டி வளர்க்க தாத்தா பாட்டி, தங்கத் தட்டில் தாங்க உடன்பிறப்புகள், பாதி சொர்க்கமாய்ப் புகுந்த வீடு, சுற்றம் நட்பு....எல்லாம் எல்லாம் ..

சந்தோஷங்களோடு சவால்கள் பலவும் சரமாரியாகக் காத்திருக்கு. சிந்தையில் எனைக் கொண்டு  சிறப்பாய் எதிர் கொள்வாய். அன்பு எனும் அட்சயப் பாத்திரம் உனது. அகிலத்துக்கும் வழங்கு . அன்பால் உலகை ஆள் நீயும்.
கடைசியாய் ஒன்று.. அள்ளித் தருபவன் நான். அதைத் தா..இதைத்தா எனக் கேட்டு அளவுகோல் இடாதே..நேரம் வந்தாச்சு. வெளியே போ..தள்ளப்பட்ட சிசு வெளியே..வீறிட்டு அழுதபடி.
அரை மயக்கத்திலும் அம்மா..' ராகு காலம் இன்னும் வரலையே ..என்ன குழந்தை எனக்கு பிறந்திருக்கு என்று கேட்க...ஆஸ்பத்திரி வராண்டாவில் ஆரவாரத்துடன் குழந்தையின் தாய் மாமன், சந்தோஷச் செய்தி பரப்பிக் கொண்டிருந்தான்..'அக்காக்கு ரோஜாப்பு மாதிரி ஒரு பொண்ணு பிறந்திருக்கு'.

deep from my heart i am thanking each and everyone who all made my day so special and memorable. Thanks  a ton my dear friends

ஆன்மீகம்

#ஆன்மீகம்
(மிக தாமதமாக பதிகிறேன். ஆனால் மனதில் உள்ளதை மத்யமர் நண்பர்களிடம் சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?)

பூஜையெல்லாம் உண்டா உன் வீட்ல? நீ Buddhism க்கு மாறிவிட்டயாமே? இப்படி ஒரு சிலர்.Buddhism follow பண்றேன்னு சொல்ற..எங்கே வீட்டில் ஒரு புத்தர் படமும் காணோமே?.

இளக்காரத்தின் உச்சத்தில் பலர்..
இருக்காதா பின்னே? கேட்டவருக்கு சொல்கிறேன்..என்னிடமும் இருக்கு..உன்னிடமும் இருக்கு அந்த்க Buddha nature. அதைத்தான் நான் காண்கிறேன் என்பேன்.

பிள்ளையாரோடு பேச்சு வார்த்தை நடத்தி காரியம் சாதிக்கும் அம்மா..
அருகம்புல் வைத்து அனுதினமும் பூஜை செய்வாள்.
அம்பாளின் பூரண அனுக்கிரஹம் பெற்றவள்..
அப்படிப்பட்டவளின் பெண்ணாகிய நான்..ஜப்பானிய மொழியில் ஒரு மந்திரம் chant செய்ய ஆரம்பித்தபோது அதிர்ந்தாள்.

இது என்ன நம்ம குடும்பத்தில் இல்லாத ஒரு நம்பிக்கை திடீர்னு உனக்கு எப்படி? தெய்வ குத்தம் ஆகிடும்..எனக்கு பயமா இருக்கு என்று புலம்ப ஆரம்பித்தாள்.
நீங்களும் என்னடாநு யோசிக்கறது புரிகிறது.

 நம்ம மதத்தில் இல்லாத எதைத் தேடி ..ஏன் அங்கே போகணும் ..இப்படி பல கேள்விகள் எழலாம்.
என்னைப் பொறுத்தவரை..என்றுமே வந்த வழி, வழிபட்ட தெய்வங்கள் என்றுமே என் துணை..
இந்த Buddhism என்பது எனக்கு philosophy of life புரிய வைத்தது. அதுவும் நான் வணங்கும் எல்லாத் தெய்வங்களின் செயல்தான் என்னை இந்த புத்த மதம் இழுத்ததற்கும் காரணமோ என்று நினைப்பேன்.

எந்த ஒரு பூஜையும் புனஸ்காரமும் நிறுத்தவில்லை. என்னைச் சுற்றி எப்போதும் ஒரு பாதுகாப்பு வளையம் உணர்கிறேன்.

ஒவ்வொரு நாளும் ஒரு புத்துணர்ச்சி யுடன் தொடக்கம்.

what is the purpose of life? வேறென்ன..மகிழ்ச்சியான வாழ்க்கை..
அது எப்போது கிடைக்கும்?

inner transformation is the key to human revolution என்று ஒவ்வொரு நாளும் என் சொல்,செயல்,எண்ணம் fine tune செய்கிறேன்.
கெஞ்சி கூத்தாடி இதைத் தா அதைத் தா என்று கேட்டது போக..win or lose ,i determine to fight till the my last breathe என்ற மன உறுதி தருகிறது இந்த philosophy.

why me ? என்ற எண்ணம் போய்  try me என்ற எனர்ஜி.

குழப்பம்,கோபம் எல்லாம் இருந்தாலும் உடனே வெளியே வரச் செய்யும் என்னுடைய இந்த Nichiren Daishonin Buddhism practice.

lotus sutra வின் சாராம்சங்கள் படிக்க படிக்க மனம் லேசாக..
இப்போது முன்னை விட எல்லாவாற்றிலும் சிரத்தையாக ..பக்தியும் பூஜையும் அதிகமாக ..
வாழ்க்கை ஒட்டம்.

உலகம் பூராவும் ஒரு extended family எனக்கு.

என் பூஜை ஷெல்ஃப்

#ஸண்டே_ஸ்பெஷல்
#எங்கள்_பூஜைஷெல்ஃப்.

விடிகாலைப் பொழுது.
எங்கள் வீட்டு சாமி ஷெல்ஃபின் கண்ணாடியை லேசாக தட்டுவேன்.
 "Good morning gods" என்று மனசுக்குள் மெதுவாக  சொல்லியபடி..சத்தம் வராமல் அந்தக் கதவைத் திறப்பேன். ( அவர்கள் ஆழ்ந்த் நித்திரையை டம் டும்னு சத்தப்படுத்தி கலைக்கக் கூடாது என்று வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசத்தில் கேட்டேன்)

 இன்றைய பொழுது எல்லார்க்கும் நல்ல பொழுதாக விடியணும்னு என்று குட்டிப் பிரார்த்தனையுடன் விளக்கேற்றி என் நாள் துவங்கும்.

தினம் வாரியாக ஸ்லோகம்..அதுவும்.தமிழில் சொல்லும் ஸ்லோகங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். சமஸ்கிருத ஸ்லோகங்கள் என்றால் பக்கத்திலேயே அதன் அர்த்தமும் எழுதி வைத்துக் கொள்வேன்.

ரெகுலரா பூஜைகள் உண்டு என்றாலும்..
என் சந்தோஷம், துக்கம் ,என் கோபம், என் ஆற்றாமை என் மூட் எல்லாம் என் ஷெல்ஃபில் இருக்கும் சுவாமிகளுக்கு அத்துப்படி.

எதுவென்றாலும் உடனே போய் நின்னு ஷேர் பண்ணிடுவேன்.
இப்படி நீ செய்யலாமா?  நாட்டாமை தீர்ப்பை மாற்றி எழுதுனு.வம்புக்கு நிற்பேன்.

" நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்ல...' அடிக்கடி reminder கள் கொடுப்பேன்.
அம்மா..எனக்கு கொடுக்கிற reminder போதாதா..சாமியையாவது கொஞ்சம் ஃப்ரீயா விடும்மா என்று என் பெண் செய்யும் நக்கலுக்கு..அசர மாட்டேன்.

அதே மாதிரி..thank you dears நு correct ஆ வந்து நன்றி  சொல்லிடுவேன்.

நைவேத்யம் தினமும் உண்டு.
இன்னிக்கு இதுதான் மெனு ..ஓகேவா என்று ஃபர்ஸ்ட் அப்ரூவல் அங்கே வாங்கிப்பேன்.
இதைத் தா அதைத் தானு கேட்கும் ஒரு சாதாரண பக்தை தான். திடீர்னு ஒரு ஒளி வட்டம் வந்து..' உனக்கு எது சரினு படறதோ அதைச் செய் ஆனா..எதுவானாலும் அதை தாங்கும் சக்தி கொடுனு..' வேண்டிப்பேன்.

மொத்தத்தில் என் பூஜை ஷெல்ஃப் எனக்கு ஒரு vent out.
யார் கிட்டயும் சொல்ல முடியாதையும் நான் பகிர்ந்து கொள்ள.. எனக்காவே..என் பேச்சை கேட்க காத்திருக்கும் என் வீட்டு தெய்வங்கள் குரு அவதாரங்கள்..

நான் போகுமிடமெல்லாம்
அவர்களை நான் இடம் மாற்றி வைத்தாலும்..
இருக்கோம்  நாங்க உனக்கு என்று என் கூடவே வந்து என்னை காப்பவர்கள்.

இன்றைய பொழுதுக்கு நன்றி சொல்லி
குட் நைட் சொல்லி அவங்களுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கொடுப்பேன்.

பாவம் இல்ல..அவங்களும்

இதுதாங்க என் சிம்ப்பிள் பூஜையறை

Friday, February 14, 2020

Valentine day

Dedicated to the caring_கணவன்மார்கள்

நாம மட்டும் அவங்களைப் பத்தி போடாட்டி தெய்வக் குத்தம் ஆகிடுமில்ல.

*சாப்பிட்டியா நீ என்று கேட்கும்போது காத்லை விட கரிசனம் இருக்கும்.

*பசங்க ஸ்கூல்லேர்ந்து இன்னும் வரலையானு கேட்கும்போது கண்டிப்போட  கவலை இருக்கும்.

*புடவை கடைக்கு கூட்டிப் போய் ' உனக்கு பிடிச்ச பத்து முதல்ல செலக்ட் பண்ணு..அதிலிருந்து ஒன்று எடுத்துக்கோ என்று வாய் சொல்லிவிட்டு பக்கத்து கவுண்டரில் தனக்கு பிடித்த கலரை நாலு தடவை உற்று பார்த்துவிட்டு..' இதை எடுத்துக்கோயேன்' என்று வாய் விட்டு சொல்லாத வாத்ஸல்யம்.
( பத்து வருஷத்துக்கு அப்பறம் தான் இந்த expression புரிஞ்சது)

*சாப்பாடு வாயில் போடும் முன்னே சூப்பரா இருக்கு என்று சொல்லும் சொக்கத் தங்கம்.
( பின்ன..அடுத்த வேளை half boiled தட்டுல விழுமே)

*நீ போய்ட்டு வா.நான் இருக்கேன் இங்கனு சைக்கிள் கேப்பிலும் சுதந்திரம் தேடும் ஜீவன்.

*மெயில் அடிச்சாலும் சரி ,மெசேஜ் செஞ்சாலும் தன் மனைவி கண்டிப்பாக பார்க்க மாட்டாள்னு தெரிஞ்சும் விடா முயற்சி விக்கிரமாதித்தர்கள்
( எத்தனை group ல இருக்கோம்..எத்தனை போஸ்ட் போடணும் நமக்கு)

*valentine day க்கு gift என்னன்னு கேட்டால் ..என் "wallet "மட்டுமல்ல என் " வாழ்க்கையும்' உன் கையில் தானே இருக்குனு கவி பாடும் கணவர்கள்.

*ஊர் வம்பு சொல்லும்போது தலையை தலையை ஆட்டி கேட்டுபுட்டு நாம கேள்வி கேக்கும்போது 'இப்ப யாரைப் பத்தி சொன்னே' என்று பல்பு கொடுக்கும் (life) partner கள்..

உஸ் ..அப்பா...என்னால் முடிஞ்சதை சொல்லிட்டேன்.

மீதி நீங்க எல்லாரும் சொல்லிடுங்கப்பா.
valentine day..வற்றாத அன்பு வாரி வழங்கும்
நாளாக இருக்கட்டும்

Saturday, February 8, 2020

காலம் மாறுமா..நம் வாழ்வு மாறுமா..

காலம் மாறுமா..நம் வாழ்வு மாறுமா..

வேலைக்குப் போன அம்மாக்கள்
விவரம் தெரியாத பிள்ளைகள்
விளையாடிக் கழிக்குமே அடுத்தவீட்டில்
வினையேதும் ஆனதில்லை அப்போது..
தலைகீழ் எல்லாமாச்சு இப்போது..

முகமூடித் திருடர் போல்
மூடர்கள் வெறிக்கு பயந்து
முகத்தை துணியால் மறைத்தும்
மறைத்தே வீசும் அமிலத்தால்
மங்கிய வாழ்விங்கு ஏராளம்.

ஊருக்கு கிளம்புகிறாள் பெண்ணென்றால்
உள்ளூர பயமும் தொற்றிடுதே
உதறல் எடுத்தே உயிர் போய் வருதே
பேருந்து பயணம் இரவிலென்றால்
அருந்துவதில்லையே தண்ணீரும் இங்கே
அரை வயிற்று உண்வோடு
அடக்கியே செல்லணுமே வீடுவரையில்.

ஊருக்குள் இருக்கையிலே
காருக்குள் போகையிலே
பேசத் துவங்கிடுவாள் அம்மா
பிடுங்கிப் பேசிடுவார் அப்பா
வழித்துணையாய் உரையாடல்
வீடு வந்து இறங்கி்யதும்
விடுவாரே நிம்மதிப் பெருமூச்சு

வயிற்றில் ஓர் நெருப்பு
வயதுப் பெண்...
்வீட்டிலிருந்தால்.
வெளியே சென்றால்..

வருமா ஒரு காலம்..
வெறிச்சென்ற தெருவிலும்
வெளிச்ச மில்லா வீதியிலும்
அச்சமின்றி இவள் நடக்க..

Tuesday, February 4, 2020

2047

#ஸண்டே_ஸ்பெஷல்
#போவோமா_2047

' ஹாய்..பாட்டி..wazzup? ' பேரன் கேட்டதுமே பரவசமடையும் அகிலா பாட்டி.
மூட் அவுட்டில் இன்று.

 உர்ருனு உள்ளங்கையில் attach ஆகி இருக்கும் சோலார் எனர்ஜி ஆபரேடட் மொபைலை முறைத்தபடி இருந்தாள்.

பிள்ளையை திட்டியபடி உள்ளிருந்து வந்தாள் அகிலாவின் பெரிய பெண் மது.

" டேய்..டேய்..எல்லாத்துக்கும் காரணம் நீதாண்டா..இந்த hi tech மொபைல எதுக்குடா வாங்கி குடுத்த பாட்டிக்கு?'

அம்மா..பாட்டி always wants to get connected '
எப்பப்பாரு மொபைலும் கையுமா சுத்தறானு நீ கத்திண்டே இருந்தியா..i got an idea. அதான் பாட்டி palm ல் permanent ஆ அட்டாச் ஆகி இருக்கற மாதிரி வாங்கிக் கொடுத்தேன்.
 இதை பாட்டியோட palm size க்கு key board பண்றதுக்குள்ளே பட்ட பாடு எனக்கில தெரியும்?'

'அது சரி..அதுல ஒரு feature add பண்ணியிருக்கேனு சொன்னியா பாட்டிக்கு?
கடுப்பில் மது.

" yes. பாட்டிக்கு தெரியுமே.careful ஆ யூஸ் பண்ணுனு சொல்லிக் கொடுத்திருக்கேனே.  what's the problem now? '

'அதையேன் கேக்கற .
இன்னிக்கு பாட்டியோட மத்யமர் க்ரூப்ல யாரோ பால் காய்ச்சறது எப்படினு போஸ்ட் போட்டாளாம். 'இது ஒரு போஸ்ட் ..அதுக்கு ஒரு லைக்கு..அந்தக் காலத்துல நாங்கள்ளாம் ..பாட்டியோட மைண்ட் வாய்ஸை அது டைப் அடிச்சுடுத்தாம்'

"அப்புறம் என்னாச்சு?'

" எல்லாரும் பாட்டியை unfriend பண்ணிடப் போறாளோனு பயத்துல இருக்கா. கமெண்ட் டிலீட் பண்ணலாம்னா ..இங்கே இருக்கிற ஸ்னோஃபாலில்  சோலார்  மொபைலும் சார்ஜ் ஆகல..'

"தாத்தா..தாத்தா..why can't you help her. you know her life line is madhyamar'

இளையராஜா சிம்ஃபொனி கேட்டுக்கொண்டே தாத்தா ..ஒண்ணும் பண்ண முடிலனு ..ஒன்றரை மணி DD news கணக்கில் சைகை காட்டிட்டு..தலையாட்டலை continue பண்ண ஆரம்பிச்சுட்டார்.

'  கை வலிக்க ஒரு காலத்தில டைப் அடிச்சசேன்..அப்புறம் கரடியா கூகிள் வாய்ஸ்ல கத்தி கத்தி டைப் அடிச்ச்சேனு அன்னிக்கு கதை கதையா சொன்னா. அதான் செளகரியமா இருக்கட்டுமேனு மைண்ட்ல நினைக்கறதை அப்படியே டைப் ஆகும் புது டெக்னாலஜி இருக்கிறதை வாங்கிக் கொடுத்தேன் . இது இப்படி பிரச்சனை யில் கொண்டு போய் விட்டுடுத்தா?
"ok..I will take care '
என்று சொன்னபடி..
' பாட்டி உன்னோட ப்ராப்ளம் இப்போ சால்வ் பண்ணித் தரேன்..நீ போய்..உன் கையால..சுடச் சுட..

கூல் டவுன் ஆன பாட்டி..கிச்சனுக்குள் போக..

" அனிருத் வந்து சரி பண்ணித் தரேன்னுட்டாண்டி..இனிமே அம்மா நார்மல் ஆகிடுவா'..மது அவள் தங்கைக்கு status update செய்து கொண்டிருக்க..

காலிங் பெல் சத்தம்..

"அம்மா..யார் வந்திருக்கா பாரு..'

ஓடி வந்தவள் ..ஆச்சரியத்தில் திக்கு முக்காடிப் போனாள்..

அங்கே..அவள் மத்யமர் ஃப்ரண்ட்ஸ்..

" are you OK? ரெண்டு நாளா க்ரூப் பக்கமே நீ காணலை..அதான் கிளம்பி வந்துட்டோம்ப்பா உன்னைப் பார்க்க..'

அவர்கள் பேசப் பேச..ஆனந்தக் கண்ணீரில் அகிலா..

' இந்தாங்கோ..உங்க எல்லாரோட favourite .'

#உப்புமா தட்டை நீட்டியபடி அம்மாவின் உற்சாகத்தை ரசித்தபடி ..மகனுக்கு கண் ஜாடையில் நன்றி சொன்னாள் மது.

வருஷம் ஓடினாலும் மாறாதது..
#மணம்_மிகுந்த_மத்யமர்_நட்பும்..
#உப்புமாவும்.தான்..

'