Thursday, February 27, 2020

கணவன் அமைவதெல்லாம்...

கணவன் அமைவதெல்லாம்...

நிச்சயமாகும் திருமணங்கள்
நடக்கும் எல்லாம் சுபமேயாம்.

நல்ல இடமாய் அமைஞ்சதில் தொடங்கி..
ஆசைப்போல அமைஞ்சார் மாப்பிள்ளை..
அன்பாய் இருக்க அமைஞ்ச குடும்பம்..
அரவணைத்து  வழிகாட்ட அமைஞ்ச மாமியார்..
நானிருக்கேன் அக்காவென அமைஞ்ச நாத்தனார்..
விரதம் முதல் மறுவீடு வரை அமைஞ்சது  அம்சமாய் எல்லாமே.
புது ஊரு புதுசாய்க் குடித்தனம்
பழக நல்ல மனிதர்களோடு
பாங்காய் அமைஞ்சது எல்லாமே.

போட்டதை சாப்பிடும் கணவர் ஒருநாள்..
போட்டாரே ஒரு போடுந்தான்..
'அமைஞ்சிடுத்து இன்னிக்கு என்னமோ..எல்லாமே..
அகத்துக்காரி உன் சமையலில் தான்'
அய்யோ பாவம் அப்பாவி மனுஷா
அப்பவே நீரும் சொல்லப் படாதோ
ஆக்கி வைத்ததில் குறைஞ்சது என்னனு...
அழுத்தக் கார சாமினு நினச்சேனே
அமைதிச் சாமியா இருந்தீரோ..

அன்று புரிந்தது உண்மையொன்று..
அமைஞ்சது என்ற பெரிய பட்டியலில்
ஆளுமை இல்லா இவரும் அமைஞ்சது
அமைஞ்சதில் எல்லாம் ஒருபடி
மேலோ..

No comments: