Sunday, February 23, 2020

என் பூஜை ஷெல்ஃப்

#ஸண்டே_ஸ்பெஷல்
#எங்கள்_பூஜைஷெல்ஃப்.

விடிகாலைப் பொழுது.
எங்கள் வீட்டு சாமி ஷெல்ஃபின் கண்ணாடியை லேசாக தட்டுவேன்.
 "Good morning gods" என்று மனசுக்குள் மெதுவாக  சொல்லியபடி..சத்தம் வராமல் அந்தக் கதவைத் திறப்பேன். ( அவர்கள் ஆழ்ந்த் நித்திரையை டம் டும்னு சத்தப்படுத்தி கலைக்கக் கூடாது என்று வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசத்தில் கேட்டேன்)

 இன்றைய பொழுது எல்லார்க்கும் நல்ல பொழுதாக விடியணும்னு என்று குட்டிப் பிரார்த்தனையுடன் விளக்கேற்றி என் நாள் துவங்கும்.

தினம் வாரியாக ஸ்லோகம்..அதுவும்.தமிழில் சொல்லும் ஸ்லோகங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். சமஸ்கிருத ஸ்லோகங்கள் என்றால் பக்கத்திலேயே அதன் அர்த்தமும் எழுதி வைத்துக் கொள்வேன்.

ரெகுலரா பூஜைகள் உண்டு என்றாலும்..
என் சந்தோஷம், துக்கம் ,என் கோபம், என் ஆற்றாமை என் மூட் எல்லாம் என் ஷெல்ஃபில் இருக்கும் சுவாமிகளுக்கு அத்துப்படி.

எதுவென்றாலும் உடனே போய் நின்னு ஷேர் பண்ணிடுவேன்.
இப்படி நீ செய்யலாமா?  நாட்டாமை தீர்ப்பை மாற்றி எழுதுனு.வம்புக்கு நிற்பேன்.

" நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்ல...' அடிக்கடி reminder கள் கொடுப்பேன்.
அம்மா..எனக்கு கொடுக்கிற reminder போதாதா..சாமியையாவது கொஞ்சம் ஃப்ரீயா விடும்மா என்று என் பெண் செய்யும் நக்கலுக்கு..அசர மாட்டேன்.

அதே மாதிரி..thank you dears நு correct ஆ வந்து நன்றி  சொல்லிடுவேன்.

நைவேத்யம் தினமும் உண்டு.
இன்னிக்கு இதுதான் மெனு ..ஓகேவா என்று ஃபர்ஸ்ட் அப்ரூவல் அங்கே வாங்கிப்பேன்.
இதைத் தா அதைத் தானு கேட்கும் ஒரு சாதாரண பக்தை தான். திடீர்னு ஒரு ஒளி வட்டம் வந்து..' உனக்கு எது சரினு படறதோ அதைச் செய் ஆனா..எதுவானாலும் அதை தாங்கும் சக்தி கொடுனு..' வேண்டிப்பேன்.

மொத்தத்தில் என் பூஜை ஷெல்ஃப் எனக்கு ஒரு vent out.
யார் கிட்டயும் சொல்ல முடியாதையும் நான் பகிர்ந்து கொள்ள.. எனக்காவே..என் பேச்சை கேட்க காத்திருக்கும் என் வீட்டு தெய்வங்கள் குரு அவதாரங்கள்..

நான் போகுமிடமெல்லாம்
அவர்களை நான் இடம் மாற்றி வைத்தாலும்..
இருக்கோம்  நாங்க உனக்கு என்று என் கூடவே வந்து என்னை காப்பவர்கள்.

இன்றைய பொழுதுக்கு நன்றி சொல்லி
குட் நைட் சொல்லி அவங்களுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கொடுப்பேன்.

பாவம் இல்ல..அவங்களும்

இதுதாங்க என் சிம்ப்பிள் பூஜையறை

No comments: