அனுபவம் பழமை..
தீபாவளி ..குளித்து புதுத்துணி உடுத்தி, பட்டாசை ஒரு ரவுண்ட் வெடித்ததும் காத்திருக்கும் முக்கிய வேலை நகர்வலம்.
"பட்சணத்தை கொடுத்துட்டு தட்டை ஞாபகமா வாங்கிண்டு வந்துடுனு" அம்
மா instructions. ( paper plate ம், zip lock ம் இல்லாத காலமாச்சே).
நீட்டும்போதே .'மாமி..தட்டை அம்மா வாங்கிண்டு வரச் சொன்னா' வெக்கமில்லாமல் சொன்ன காலம். அடுக்களைக்குள் புகுந்த மாமிகள் அடுத்த வேலை பார்க்க..அவஸ்தையில் நாம்் நெளிய..நம்ம வீட்டு நெய் வாசனை தூக்கின தூக்கில் இட்லி சாப்பிட்டு தூங்கிண்டிருந்த மாமா எழுந்து வருவார்..ஐயோ பாவமாய் நாம் நிற்க.."ஏண்டி மங்களம்..குழந்த எதுக்கு இங்கே பாவம் நிக்கறா..நம்மாத்து அந்த மைசூர்பாக்கை கொஞ்சம் கொடேன் அவளுக்கு '..குரல் கொடுப்பார்..
தியானத்திலேர்ந்து கலைந்தாற் போல மாமி..'ஐயோ..மறந்தே போய்ட்டேன் அவாத்து தட்டை கொடுக்கனும்'..தான் எக்ஸ்பரிமெண்ட் செய்த புது பட்சணம் ரொப்பிக் கொடுப்பார்..
இப்படி வந்து குவிந்த பட்சணம் டப்பாவில் ரொம்பும்..அதுதான் சீக்கிரம் காலியும் ஆகும்..என்ன இருந்தாலும் பக்கத்தாத்து மாமிகள் பண்ற மாதிரி வருமானு மொக்கித் தள்ளுவோம்..
2. பக்கத்து வீடு,எதிர்த்த வீடுநு எல்லா வீட்டு பெரியவர்களைத் தேடிப் போய் ' அம்மா..நமஸ்காரம் பண்ணிட்டு வரச் சொன்னானு சொல்லில் நமஸ்காரம் பண்ணும்போது ஓரக்கண்ணால் பார்ப்போம்..பர்ஸிலிருந்து காசு எடுக்கறாளா இல்லையானு..பத்து ரூபாய் கொடுத்தா அவாளுக்கு 'பெஸ்ட் பெரியவா 'பட்டமும் உண்டு..
3. நூறு ரூபாய்க்கு ரெண்டு பெரிய அட்டை டப்பாவில் பட்டாசு இருக்க.."நமஸ்கார கலெக்ஷனும் அம்மா காசை இப்படி கரியாக்கறேனு" அலற அலற யானை வெடியாய் மாறும்..
4. ஒரு கம்பி டப்பா, இரண்டு சரம், நாலு புஸ்வாணம் கார்த்திகைக்கு ஒதுக்கப்படும்..
picture abhi baaki hai..
5. diwali release சினிமா பார்த்துவிட்டு ஊரெல்லாம் உறங்கப் போக..அப்போது தான் பல்பு எரியும் மண்டையில ஐயோ..home work'..
time table check பண்ணுவோம்...தலை தீபாவளிக்கு போயிருக்கற கணக்கு டீச்சர்..கண்டிப்பா திட்ட மாட்டா..சயன்ஸ டீச்சர் ரெண்டு நாள் லீவ்..வீட்டில பட்சணம் experiment பண்றதுக்கோ என்னமோ..தமிழ்..நினைப்பு வந்ததும்..'அம்மா'..என் போன வருஷ கட்டுரை நோட் எங்கே காணும்..அதுலதான் நான் 'தீபாவளி' பத்தி எழுதின கட்டுரைக்கு ஆசிரியை/(அப்படித்தான் கூப்பிடணும்னு ஆணை)
'மிக்க நன்று'னு போட்டிருந்தாளே..அதை எங்கம்மா ஷெல்ஃப் க்ளீன் பண்றேனு தூக்கிப் போட்ட என்று கத்த..கொர் கொர்னு குறட்டை விட ஆரம்பிச்சிருப்பா அம்மா..
வேற வழி..திருப்பியும் மூளையைக் கசக்கி எழுதியே ஆகணும்..
சாப்பிட்ட பட்சணம் எல்லாம் என்னமோ வயத்தை பண்றதுனு அப்பா அங்குமிங்கும் லெஃப்ட் ரைட் போட..ஜெலூஸில் டைஜின் எதுவுமே இல்லாமல்..வீட்டுப்பாட பயம் ஜீரணம் லேகியமாய் மாற..
தீவளிக்கு தீவளி எண்ணெய் தானே தேச்சு குளிக்க்ணும்..இப்படி கட்டுரை எழுதி முடிக்கணும்னு வழக்கம் வெச்ச மஹானுபாவர் யாரோ..
நன்ன்னா இருக்கட்டும்.
#Diwalidelights
No comments:
Post a Comment