#ஆவிக்கும்_உண்டோ_அடைக்கும்_தாழ்
கும்மிருட்டு..அவன் அந்த பங்களாவில் நடந்து கொண்டிருந்தான்.
கிரீச் என்ற கதவின் சத்தம்..காலில் ஏதோ ஒன்று இடிக்க.
ஆ..அம்மா என்று கத்தக் கூட பயந்து போனான்.
.மொபைல் டார்ச்சை வழிகாட்டியாக வைத்து..
காலடி ஓசை அவனுக்கே கேட்காத அளவுக்கு ஒவ்வொரு அடியும் பார்த்துப் பார்த்து எடுத்து வைத்தான்.
அவன் நினைத்த காரியம் அங்கே முடிந்தது ' என்னை யார்னு நினைச்சே' என்று கர்வமாய் அவன் மை.வாய்ஸ் சொல்ல..
"இன்னும் ஒரு செகண்ட் தான் ..நீ இருக்கிற இடம் தெரியாமல் அழிவாய் ' என்ற கொக்கரிப்பில் .. 'தடயம் எதுவும் இல்லையே ' என்று ஒவ்வொரு இடமாக அவன் செக் செய்ய..
'டக் ' என்ற சத்தத்துடன் அந்த ரூமின் ட்யூப் லைட் எரிய..
' இங்கே என்ன பண்றீங்க..ராத்திரி ஒரு மணிக்கு செய்யற வேலையா இது'..
ஆவி பறக்கும் கர்நாடக ஃபில்டர் காஃபி டம்ளருடன் அவன் பேந்த்ப் பேந்த விழிக்க..
"காட்டிக் கொடுத்த ஆவியே' ..உன்னை..
என்று அவன் மனைவி ஷேர் கேட்கும் முன் கடகடவென்று குடித்து முடித்தான்.
Bala hari அவர் #YEN_பக்கத்தில் சூப்பரா ஒரு கதை போடப்போறாராம்.
நானும் என் லெவலுக்கு எழுதிட்டேன்..
" ஆவிக்கும் உண்டோ அடைக்கும் தாழ்'
No comments:
Post a Comment