Sorry for posting late.
#கல்யாண_வைபோகமே..
இந்த ஜாதகம் ரொம்ப சூப்பரா பொருந்தி இருக்கு.
பையனுக்கு டெல்லில வேலை ..என்ன proceed பண்ணலாமானு அப்பா..
அந்த ஜாதகத்தில் கோடு கட்டம் தாண்டி அவள் கண்ல பட்ட..அந்த வாசகம் ..' boy loves music'.
பாட்டு என்றாலே பத்தடி பாய்ந்து ஓடுபவளாச்சே..
" ஒரு பையனோட வாழ்க்கையோட விளையாடதப்பானு சொல்றதை கண்டுக்கவே கண்டுக்காத அப்பா
பொண்ணு பார்க்க informal ஆ ஆஃபிஸில் வந்து பார்த்த பையன் வீட்டார் ' முல்லை மருதம் நெய்தல் பாலை' னு போஸ்டிங் எங்க வேணா இருக்கும்னு சொன்ன போது ' place is not the constraint .i can live anywhere னு பந்தா விட்ட பொண்ணு..
அதுக்கும் ஒரு படி மேல ..' பையனோட சிஸ்டருக்கு இப்பொ வர முடியாதாம்..so பொண்ணே வந்து பையனை பார்க்கட்டுமேனு ஏகபோக முடிவுக்கு ஓகே பண்ணி ஜம்முனு போய் இறங்கி பையனோட சிஸ்டர் சமைச்சதை சாப்பிட்டு ஓகே ஓகே கல்யாணத்தை எப்ப வெச்சிக்கலாம்னு பையனைக் கேட்டு முடிவு பண்ணிடுனு பச்சைக் கொடி காட்டின பொண்ணு..
நாந்தேன்..நானே தான்.
கல்யாண நாள் நெருங்க நெருங்க ..peer pressure .
பார்லர் போய் ப்ளீச்சும் மெஹந்தியும் போட்டுக்கோனு
தயங்கித் தயங்கி அம்மாகிட்ட கேட்க..' பளிச்சுனு இருக்கற மூஞ்சிக்கு ப்ளீச் எதுக்கு..
மருதாணி இலை இருக்க..மெஹந்தி கோனெதுக்குனு வீரமா வசனம் பேச...
என்னை பார்த்து பரிதாபப்பட்ட சித்தப்பா..
cost effective ஆ தீக்குச்சியால என் கையில் கோலம் போட்டு அதுதான் மெஹந்தினு சத்தியம் அடிச்சுட்டார்..ம்ம்ம்ம்..
அத்தை பின்னல் போட..சித்தி புடவையும் நகையும் போட்டு அலங்காரம் பண்ண..குட்டியூண்டு ரோஸ் பவுடர் டப்பாவை கல்யாணத்துக்கு வந்த எல்லாரும் ஷேர் பண்ண..சிக்கன சிகாமணிகள்.
எல்லா வீட்டு கல்யாணத்திலயும் ஸ்டோர் ரூம் இன் சார்ஜா இருந்த அப்பா , காண்ட்ராக்ட் ல விட்டுடுனு..யாருக்கு தெம்பு இருக்குனு அத்தைகள் சொல்ல..சங்கரன் மாமா புண்ணியத்தில் சாப்பாடு.
'உன் கல்யாணத்தில மசால் தோசை சூப்பரா இருந்ததுனு இன்னும்.சப்புக் கொட்டி சொல்வார் பலர்.
எங்கே..நாம தான் கொலைப்பட்டினி யாச்சே முகூர்த்தம் முடியற வரைக்கும்.
டேஸ்டே பார்க்கலை..
ஆனால் வேஸ்ட்டே எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார் சங்கரன் மாமா.
ஒத்தையா பிறந்த எனக்கு..ஜெம்மா ஒரு மாமியார்,ஜம் ஜம்முனு ஒரு நாத்தனார்,மன்னி மன்னி என்று வாய் நிறைய கூப்பிடும் மச்சினர்..
அமைதியின் உருவான அகத்துக்காரர்..
இவர்களையெல்லாம் தாண்டி..நான் ஏங்கிக் கொண்டிருந்த "அண்ணா" என்ற உறவு என் நாத்தனார் கணவர் Sankar Viswanathan வடிவில்.
பாசமலர் அண்ணாவெல்லாம் என்ன கூடப் பிறந்தால் தான் கிடைக்குமா என்ன?
ஆச்சு 25 வருஷம். எனக்கு எல்லா நேரத்திலும் எங்கே இருந்தாலும்..' நான் இருக்கேன்மா..எல்லாம் செஞ்சுடலாம் என்று என் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் shankar Anna..
என் கல்யாண வைபோகத்தில் கிடைத்த காலத்தால் அழியா உறவென்னும் பரிசு my Anna.