Sunday, February 27, 2022

தர்பூஸ்

 Juice பண்ணலாமா..இல்லை 

Jaws க்கு வேலை கொடுக்கலாமானு 

யோசித்தபடி..

Just ஒரு ஃபோட்டோ எடுத்துவிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.


Tanda tanda cool cool..


அவர் அப்படித்தான்

 கணவன் அமைவதெல்லாம்...


நிச்சயமாகும் திருமணங்கள்

நடக்கும் எல்லாம் சுபமேயாம்.

 

நல்ல இடமாய் அமைஞ்சதில் தொடங்கி..

ஆசைப்போல அமைஞ்சார் மாப்பிள்ளை..

அன்பாய் இருக்க அமைஞ்ச குடும்பம்..

அரவணைத்து  வழிகாட்ட அமைஞ்ச மாமியார்..

நானிருக்கேன் அக்காவென அமைஞ்ச நாத்தனார்..

விரதம் முதல் மறுவீடு வரை அமைஞ்சது  அம்சமாய் எல்லாமே.

புது ஊரு புதுசாய்க் குடித்தனம் 

பழக நல்ல மனிதர்களோடு

பாங்காய் அமைஞ்சது எல்லாமே.


போட்டதை சாப்பிடும் கணவர் ஒருநாள்..

போட்டாரே ஒரு போடுந்தான்..

'அமைஞ்சிடுத்து இன்னிக்கு என்னமோ..எல்லாமே..

அகத்துக்காரி உன் சமையலில் தான்'

அய்யோ பாவம் அப்பாவி மனுஷா

அப்பவே நீரும் சொல்லப் படாதோ

ஆக்கி வைத்ததில் குறைஞ்சது என்னனு...

அழுத்தக் கார சாமினு நினச்சேனே

அமைதிச் சாமியா இருந்தீரோ..


அன்று புரிந்தது உண்மையொன்று..

அமைஞ்சது என்ற பெரிய பட்டியலில் 

ஆளுமை இல்லா இவரும் அமைஞ்சது

அமைஞ்சதில் எல்லாம் ஒருபடி

மேலோ..

எலி கவிதை

 விருந்தாளி..

( சத்தியமா இது கவிதையில்லை

கையாலாகாத கவலைக் கதை)


வாரம் ஒண்ணாச்சு..

விருந்தாளியாய் நீ வந்து


மசால் வடையில் மையலாமே

மணக்க மணக்க படையல்


பக்கோடாவுக்கு பரம விசிறியாமே

படைத்தேனே தட்டு நிறைய..


ஆனியன் பஜ்ஜிக்கும் அடிமையாமே

ஆசையாய் அடுக்கினேனே


வெளிச் சாப்பாடும் பிரியமாமே..

வெஜிடபிள் பஃப்பும் ் தந்தேனே


உளுந்து வடை உயிராமே.

சுளுவாய் சுட்டு வைத்தேனே


சப்பாத்தியும் உருளையும் 

சப்புக் கொட்டித் தின்றாயே..


அடடா..ஆச்சரியம் எனக்கு

அதிதி உனக்கும் கூட..

அகிலா என் கைப்பக்குவம்

அருமையாய் ருசித்ததோ..?


ஆனாலும் ஓர் கவலை..


ஒரு வாரம் ஓடிப் போச்சே

ஒட்டாமல் நீ ஓடுவதேன்?


'எலிப்பேடும்' ஏளனமோ...?

ஏமாற்றும் எலியாரே..


ஓடி வருகையிலே

ஒட்டியும் விடுவாய் என்ற

திட்டமும்் தோற்றத்திங்கே

ஓட்டம் நீ பிடித்தாயே..


என்ன செய்து பிடிப்பேனோ

என் நிம்மதியும் போயேபோச்சே..


வக்கணையாகிப் போன

வாய் உனதை கட்டிப்போட

வழி ஒன்று கண்டேன்..

விருந்தெல்லாம் போதுமிப்போ

மருந்தொன்னு வைக்குமுன்

மறைந்து விடு

மாய எலியே..

Sunday, February 20, 2022

cover photo கதை

 cover photo கதை



பஸ் பயணம்.

 முன் சீட்டில் இடம்.

ஹாரன் அடித்து, ஹேர் பின் பெண்டுல போற நினைப்புல ஸ்டியரங்கை வளைத்து, நடு நடுவில் செல் ஃபோனில் பேசிக் கொண்டு, கொஞ்சம்.கூட சகிப்புத்தன்மை இல்லாமல்.தனக்கு மட்டும் வழி வேணும் என்று ஒரு அகங்காரத்துடன் ..வாயில் நல்ல வார்த்தையே வரலை..அது வேற விஷயம்.


அதற்கு நடுவில் ஒரே பாட்டு சத்தம்.

காது வலி ..வலி என்று அலற..


சட்டென்று ஜன்னல் வழியே பார்த்தால் அந்திச் சூரியன் "நேரமாகி விட்டது..duty over ' நு கிளம்ப ஆரம்பிக்க..நம்ம ஃபோனை கையிலடுத்து சர மாரியா க்ளிக்க..பக்கத்திலிருந்த காலேஜ் பொண்ணு என்னை ஏற இறங்க பார்த்தாள்.

' பெரிய P.C sriram நு நினைப்புனு அவள் மை.வா அவள் முகத்தில் தெரிந்தது.


ஒன்றரை மணி நேரம் எந்த சத்தமும் என் காதில் விழவில்லை.

கண்ணும் மனமும் காட்சிகளை படம் பிடித்தபடி..


எப்பவும் கஷ்ட்டத்தையே கண்ணு கிட்ட வைத்து பார்த்துக் கொண்டே இல்லாமல்..சுற்றி இருக்கும் இன்பங்களை அறிந்து அனுபவிக்க ஆரம்பிக்க மனசும் லேசாகும் ..துன்பத்திற்கும் விடை கிடைக்கலாமோ?

யோசிங்க

அன்புடன்

.......

Thursday, February 17, 2022

தாவணிப்_பெண்ணே

 அழகான படம் பார்த்ததும்..எதோ எழுதணும்னு தோணித்து..😄😄


#தாவணிப்_பெண்ணே


..


உன் விரலின் அழகு கண்டு..

விறகடுப்பும் நாணுமோ..?


உன் பட்டாடை பளபளப்பில்..

பளிச்சென்ற கலயமும் தலை குனியுமோ..?


உன் கூந்தல் பூச்சர மணம்..

கரியடுப்பின் வாசத்தை குறைக்குமோ?


உன் கையில் உரசும் வளையல்கள்..

ஜ்வாலையாக மாறுமோ?..


அடுக்களைக்குள் ..இந்த அழகி வர..

ஆண்டாண்டு காலம் காத்திருந்தேன்..


அவள் கை பட்டதில்..என்

ஜென்ம சாபல்யம் இன்று..


எனக்கிங்கு இடமில்லாமல் போனாலும்.

என் மனதில் நீயும்..

உன் மனதில் நானும்..

என்றும் இருப்போம்..

அழியா நினைவுகளோடு..😊😊