Sunday, February 27, 2022

எலி கவிதை

 விருந்தாளி..

( சத்தியமா இது கவிதையில்லை

கையாலாகாத கவலைக் கதை)


வாரம் ஒண்ணாச்சு..

விருந்தாளியாய் நீ வந்து


மசால் வடையில் மையலாமே

மணக்க மணக்க படையல்


பக்கோடாவுக்கு பரம விசிறியாமே

படைத்தேனே தட்டு நிறைய..


ஆனியன் பஜ்ஜிக்கும் அடிமையாமே

ஆசையாய் அடுக்கினேனே


வெளிச் சாப்பாடும் பிரியமாமே..

வெஜிடபிள் பஃப்பும் ் தந்தேனே


உளுந்து வடை உயிராமே.

சுளுவாய் சுட்டு வைத்தேனே


சப்பாத்தியும் உருளையும் 

சப்புக் கொட்டித் தின்றாயே..


அடடா..ஆச்சரியம் எனக்கு

அதிதி உனக்கும் கூட..

அகிலா என் கைப்பக்குவம்

அருமையாய் ருசித்ததோ..?


ஆனாலும் ஓர் கவலை..


ஒரு வாரம் ஓடிப் போச்சே

ஒட்டாமல் நீ ஓடுவதேன்?


'எலிப்பேடும்' ஏளனமோ...?

ஏமாற்றும் எலியாரே..


ஓடி வருகையிலே

ஒட்டியும் விடுவாய் என்ற

திட்டமும்் தோற்றத்திங்கே

ஓட்டம் நீ பிடித்தாயே..


என்ன செய்து பிடிப்பேனோ

என் நிம்மதியும் போயேபோச்சே..


வக்கணையாகிப் போன

வாய் உனதை கட்டிப்போட

வழி ஒன்று கண்டேன்..

விருந்தெல்லாம் போதுமிப்போ

மருந்தொன்னு வைக்குமுன்

மறைந்து விடு

மாய எலியே..

No comments: