Wednesday, December 1, 2021

Train..train

 சும்மா..ஒக்கார முடியல..


காபி டீ போண்டா கூவல் ஒருபுறம் .

காள்  காள் கத்தும் சத்தம் மறுபுறம்


சிணுங்கும் செல்ஃபோன்  காதோடு ஒருபுறம்

சின்ன குழந்தை செல்லம் மறுபுறம்


சீனியர் சிட்டிசன் சீற்றம் ஒருபுறம்.

சீறிப்பாயும் சிறுபிள்ளத்தனம் மறுபுறம்..


குறட்டை விட்ட் கூட்டம் ஒருபுறம்.

கூவி வித்ததை கொறித்தது மறுபுறம்..


ஊர்க்கதை பேசிய உறவுகள் ஒருபுறம்..

உப்பு பெறாததை ஊதியது மறுபுறம்..


வயதான அம்மா..வாஞ்சை ஒருபுறம்..

வாயத் திறவென மிரட்டல் மறுபுறம்..


ஆபீஸ் வேலையில் ஆழ்ந்தோர் ஒருபுறம்..

அனந்த பத்மனாப சயனம் மறுபுறம்..


விடாது ஒலித்த ஒம் பூர்புவஸ்வ ஒருபுறம்..

விட்டதை பேசியே வீணான காசு மறுபுறம்..


வருமான வரி விவரித்தல் ஒருபுறம்

வரிசையில் நிக்கணுமே கவலை மறுபுறம்


அடைபட்ட இருக்கையில் நெளிந்தது ஒருபுறம்..

கொட்டுதா மழை யங்கே..கேள்வி மறுபுறம்..


சென்ட்ரல் வந்ததும்

சிதறும் இக்கூட்டம்..

சுவாரசியம் என்றும்..இந்த

சிக்கு புக்கு ரயில் பயணம்

டப்பாக்கள் சொல்லும் கதை

 கன்னம் கிள்ளும் மாமி..

காதைத் திருகும் மாமா..

............,.........

போனவுடன் கடிதம் போடு

புதினாவும் கீரையும் சேரு..


ஜோதிகா  பூவெல்லாம் உன் வாசம் 

பட த்தில ஆடிக் கொண்டிருக்க..


ஆஹா..

என் மனமும் கொஞ்சம் சிறகடித்து reverse ல் பறந்தது..

கட்டுச்சாதைக் கூடை மணமணக்க ரெடி..

கண்ணீரும் கம்பலையுமா நான் அழ..அப்பா அம்மா அழ..

யார் டெல்ல்லிக்கு வந்தாலும் டப்பா டப்பாவா சாமான் ..தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் கொஞ்சம் தடம் புரண்டு போனாலும் என் பேர் அதில் மாட்டிக்கும்..பொடிகள், அப்பளம், நொறுக்குத் தீனி, அரிசி மாவு...அதைவிட..காய்ச்சிய நெய்..அஞ்சாறு சம்ப்டத்தை திறக்க அரைக் கிலோ நெய்..கவர் கட்டி, துணியால் கட்டி மாவடு, ஆவக்காய்.காப்பிப் பொடிக்கு ஒரு தனி பாக்கிங்...

.இப்படி ஒரு லிஸ்ட்..


டெல்லில எல்லாம் புடவை விலை ஜாஸ்தினு பண்டிகைக்கு புடவைகள்.மாட்ச்சிங் ப்ளவுஸ்..

ஃபோன் அடிக்கடி பேச முடியாது..ஒரு நிமிஷம் பேசினாலே 300 ரூபாய் சொளையா எடுத்து வெக்கணும்..ஒரு புடவைக்குள் பத்திரமா இருக்கிற மாதிரி அம்மா அப்பாவின் லெட்டர்ஸ்.. முதல்ல வேகமா படிச்சு முடிச்சுட்டு..திரும்பத் திரும்ப ஞாபகம் வரும்போதெல்லாம் எடுத்து படித்து..

இதே காலப் போக்கில் ஊர்கள் பழக..இதெல்லாம் அங்கெயே கிடைக்கிறதம்மா..ரெசிபி சொல்லு நானே ட்ரை பண்றேனு..கை காலை சுட்டபடி..கற்றுக் கொள்ள ஆரம்பித்து..பின் ஒவ்வொரு முறை பிறந்தகம் வரும்போதும் புதுசா கற்றுக் கொண்டதை டப்பாவில் கொண்டு வந்து கொடுத்து..வீடே மணக்க நான் சமைக்கிறேன் என்று அம்மாவை ஒரங்கட்டி..( சாமான் யத்தில கிச்சன் தர மாட்டா அம்மா..)

எத்தனை instant , ready to eat வந்தாலும்..இந்தப் பழக்கம் இன்னும் நம்மிடையே ஒட்டிக் கொண்டுதான் இருக்கு. இப்போ எல்லாம் அம்மா.. மாமியார் எல்லாரும் expert ..domestic ,international pack செய்து அனுப்புவதில்..

காலி டப்பாக்கள் கதை பல சொல்லும்..

வருஷம் போனாலென்ன..வயசும் ஆனாலென்ன..

இந்த tradition இன்னும் தொடர்கிறதுதானே

Saturday, November 27, 2021

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?

 எதிலும் இங்கு  இருப்பான் அவன் யாரோ?


Baby corn க்குள்ளும் தெரியும் பகவான்..


ஒவ்வொரு layer ஆ பிரிக்கப் பிரிக்க..

மண் வாசனையோடு..

பட்டு வஸ்த்திரத்தில் ..

சுத்தி வைத்த குழந்தை போல..

அழகா..ஒய்யாரமா ..படுத்துண்டு..

இந்த baby corn.


இந்த சின்ன சோளத்துக்கே ..இப்படி பாதுகாப்பு வளையம் தருபவன்..

நம்மையும் காப்பான்..காப்பான்..🙏🙏


God tussi great ho🙏🙏


Friday, November 26, 2021

எனக்கொரு மிஷின் வேண்டு..மடா..

 எனக்கொரு மிஷின் வேண்டு..மடா..



நெல்லு பொரியா..அவல் பொரியா..

எந்த பொரியானால் என்ன..?


எலி கூட சிக்கும் பொறியில்..ஆனால் இந்த சின்னப் பொரி இருக்கே சிக்காது என்னோட சின்ன கையில்..


பாகு பதம் பல இருக்காம். கம்பிப் பதம், தக்காளிப் பதம்..டங் பதம்

கம்பியில நடக்கற மாதிரி தான். balance கொஞ்சம் போக ..கம்பி ..கயிறு மாதிரி ஆகும்..கம்மர்கட் கண்டிப்பா கிடைக்கும்.

பொரி உருண்டை ...


பொல பொலனு கொட்டும் சில சமயம்..

'பா'ல் மாதிரி போட்டு விளையாடலாம் சில சமயம்.

பிடிக்க வந்தா உருண்டை...இல்லாட்டி தூள்தும்பட்டை.

இதுதான் நம்ம பொரி பாலிஸி.


ஒட்டுகிறதே பாகு என்று பொரியோடு கலக்க..

மாலில் கிடைக்கும் caramalised popcorn மாதிரி தனித்தனியா முழித்து நிற்கும்..


கூட்டணி முறிந்து தனி சீட்டு கேட்டு பொரி(றி) பறக்கும்.

நாலு உருண்டை பிடிப்பதற்குள் நாக்கு தள்ளிடும்.

சுடறதேனு சும்மா இருக்க முடியாது...உஸ் உஸ்னு கைக்குள் அமுக்கினாலும் உனக்கும் 'பெ'ப்பேனு ஓடிப் பிடிச்சு விளையாடும்.


உதிர்ந்து போனாலோ..

உருவாகும்  பல பலகாரம்.

அதுக்கு Meena Anand Bhavani Santhanam mam எல்லாரும் நம்மை enlighten பண்ணுவார்கள்.


விக்ரம் வேதாள் மாதிரி..

விடாது முயற்சி..

வருஷா வருஷம்.


எதற்கெல்லாமோ மெஷின் இருக்க..

இதுக்கு ஒரு மெஷின் வேண்டுமடானு..

கேட்கறது யாராவது காதில் விழட்டும்.

வெல்லமும் பொரியும் கலந்து போட்டதும்..

வெளியே வரணும் வட்டமாய் ஒரு பொரி உருண்டை..


நம்ம புலம்பல் எல்லாம் முடிந்து..இப்பொழுது ப்ராத்தனையும் செய்யலாம்.


அப்பமோ அடையோ..

அலண்டு போன

அவல் பொரி உருண்டையோ..

ஆசையாய் படைக்க..

அங்கே வருவான்..

அருணாச்சலன் அவன்தான்..

அருளும் தருவான்..

இருளும் அகற்றுவான்.


பொறுமையா படிச்சவங்களுக்கு பொரி உருண்டை கொடுக்கத்த்தான் ஆசை.

(அடடா..இது என்ன சோதனை நு உங்க மை.வா. கேட்கிறது)

அடுத்த வருஷம் பார்ப்போம்..

மெஷின் வருதா இல்லை..

முன்னேறுகிறேனா நான் என்றே..


மிக இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

Thursday, November 25, 2021

மனிதற்கு மொழியே..தேவைதான்..

 மனிதற்கு மொழியே..தேவைதான்..


ஆட்டோல போகணும்் ..app வேணும்.

அரிசி வாங்க போகணும் ..app வேணும்..

எலக்ட்ரீஷுயன் வந்தா app வேணும்..

ஏதாவது கேட்கணுமா..app வேணும்..

வேற என்ன ..learn Kannada app தான்..


இன்னுமா இந்த வீட்டு வழக்கம் கத்துக்கலனு ..கல்யாணமான பொண்களை கலாய்க்கற மாதிரி..இன்னுமா..நீ..கன்னடம் கத்துக்கலை.. கரெக்ட்தானே..

 வந்து வருஷம் நாலாச்சு..வாழும் இடத்தின் மொழி கற்பது மிக அவசியமாச்சே..

ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு அழகு..

relate பண்ணி படிக்க ஆரம்பிக்க இந்திய மொழிகளும் ஒன்றுக்கொன்று பிணைந்து கிடக்கும் அற்புதம் புரிகிறது.

 ஹிந்தியுடன் உயிர் வாழலாம்..ஆனால்..சில உணர்வுகள் புரிய ..learning local language is a must)

எங்க ஊர் செய்தித்தாளும்..நானும் இருக்க பயமேன்னு சொல்ல..

வார்த்தைகள்.. சின்ன sentence கத்துண்டாச்சு..

but எதிர்ல் யாராவது பிரவாகமா..பேசினால்..வாயிலிருந்து தெரிந்த..கற்ற வார்த்தை கூட..வர மாட்டேங்குறது..

ஜுனூன் பார்த்து கற்ற இந்தியுடன் வாழ்க்கை தொடங்க..குழந்தைகளோடு நானும் கற்றேன் பேச ..எழுத..

இப்பொழுது மீண்டும்..பாடம் துவக்கம்..

I loved this quote too..

"If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language, that goes to his heart.❞

‒Nelson Mandela..


இந்த today's word..நானும் சொல்ல வாழ்த்துங்களேன் friends..


Happy Sunday

உன்னை நினைச்சேன்.

 உன்னை நினைச்சேன்.


.

பஜ்ஜி பண்ணினேன்..தங்கமே..ஞானத் தங்கமே..


சென்னையில..தான்..

புயலும் ..மழையும் ..சரி..

பெங்களூர்ல..

எதுக்கு பஜ்ஜி..?


அங்க அடிக்கற காத்து effecttu..

இங்கேயும் சில்லுனு இருக்குல்ல..😄😄


நிவர்...

சென்னையில் இப்போ..எங்கும் river..

உன்னைப் பார்த்தாலே இப்போ..shiver.

பயத்தில வருது fever...


காட்டாதே உன் பவர்..

ஏற்கனவே போயாச்சு power..


எடுத்து சுத்தாதீங்க..

உங்க கார்..டூவீலர்..


வீட்டுக்குள்ளே இருந்து..

பார்த்துக் கொண்டே இருங்க..

Facebook சுவர்..

அது ஒண்ணுதான்..இப்போ

Entertainer.


செய்வோம் prayer..

அது ஒன்றே நம் saviour


நிவர்க்கு நிவாரணம்..கடலை மாவு

கவர்க்குள் இருக்கும் வாழைக்காய் ..வெங்காயம்..😄😄

Purkal youth development dehradun

 Blessed to be with the children of Purkal Youth Development Society. An opportunity to meet the wonderful person Mr.Swami for making a revolution and difference in  enhancing the stree sakthi. I owe to   SPIC MACAY Doon  for showing me the another face of life.. Thanks Rupi Mahindroo and Vidya Srinivasan


Sharon lowen

 The SPIC MACAY volunteers with Sharon Lowen


Kumaresh violin

 Its time for unlimited magical music..

Kumaresh ji the Fiddling Monk was in action for a SPICMACAY program...mesmerizing all through.. 

Generally doctors check your pulse...but this Fiddling monk caught hold of the pulses budding doctors...his master plan lies there..

Transformed the auditorium to a magical world...thestudents of Bangalore medical college taking a break from their mundane routines...clapped,questioned and interacted with this maestro.

 Shri manjunath ji in mridangam and Trichy krishnaswamy in ghatam...casually conversing with their instruments..

The joy is unbound..


செம்மை_மாதர்

 #ஸண்டே_ஸ்பெஷல்

#செம்மை_மாதர்

ஒவ்வொரு முகமாய் என் கண்ணில் வந்து போகிறது. செம்மை மாதர்..

பொறுமையின் சிகரமாக இருந்த 

 பாட்டியா..

அன்போடு அனைத்தும் கற்றுத் தந்த அம்மாவா..

வளர்த்த சித்தியா..

மனங்களை படிக்க கற்றுக் கொடுத்த மாமியாரா..

நானிருக்கேன் என்று கரம் எப்போதும் நீட்டும் நாத்தனாரா..


துணை நானெனும் தோழிகளா..


மண்டலேஷ்வர் கிராமத்தில் வயல் வரப்புகளிலும் கல்லிலும் முள்ளிலும் சர்ப்பங்கள் எங்கே இருந்து சிரம் நீட்டும் என்று தெரியாவிட்டாலும் ,விட்டு ஓடிப் போன கணவனை நினைத்து ஒப்பாரி வைக்காமல் தன் பெண்ணை வளர்க்க போராடிய மன்னு பாயா..


விரட்டும் கணவன் முன் வீம்பாய் இருக்காமல் அன்பால் கட்டிப் போடும் சகுந்தலா மாமியா?


 என் பெண்களுக்கு பாடங்களோடு வாழ்க்கை யும் சொல்லித் தந்த ரூபா டீச்சரா..


அக்கா..ஒரு வாரமா பூ வாங்க வரலையேனு அனுசரனையோடு விசாரிக்கும் பூக்கார நாகு வா?


மஸூரியில் கைவிடப்பட்ட பெண்கள் குழந்தைகளின் மறு வாழ்வுக்கு வழி வகுத்த purkal youth  development அமைத்த சின்னி மேம் ஆ..


பாட்டும் பரதமும் தெரியாவிட்டால் என்ன..வாலண்டியர் வேலை செய் ..ஃபோட்டோ எடு, வீடியோ பதிவு செய் என்று என்னை உசுப்பிய SPIC MACAY chairperson Rupi Mahindroo ஆ..


உனக்குள்ளே இருக்கும் புத்தனை ஏன் தாலாட்டி தூங்க வைக்கிறாய்..வெளியே கொண்டு வா.. உன் எதிரில் இருப்பவரிடமும் தேடு என்று சொல்லிக் கொடுத்த புவனாவா?


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

என் வாழ்க்கையில் இவர்களுக்கு நன்றி கூறாவிட்டால் நரகம் தான் .


ஆனால் ..எந்த அளவு ஒருவரின் பாஸிடிவ் சிந்தனை என்னை தூக்கியதோ..

அந்த அளவு சிலரின் நெகடிவ் சிந்தனை என்னை தாக்கியது.

இப்படி என் வாழ்க்கையில் எந்நாளும்.இருக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொள்ளவும் உதவியவர்களும் என்னைப் பொறுத்தவரை செம்மை மாதர்கள் தான்.

Saturday, November 20, 2021

Happy birthday Usha Venkat

 Happy birthday Usha Venkat



Happy birthday usha..


உஷா என்றால் உதயம்..நட்பில் 

இருப்பாள் பலரின் இதயம்.


English ல சொன்ன்னால்..dawn (னு)

கவிதை எழுதவே இவள் born (னு)


இவளிடம் உறைகிறாள் சரஸ்வதி..

இவள் எண்ணமெல்லாம் பாயும் நதி..

கதையோ கவிதையோ..எழுதித் தள்ளுவாள் ஊதி..

இவள் வலிமை..இவளின் அமைதி

இவளிடம் கற்கணும் இந்த உத்தி..


சபையிலே பேசுபவள்..

சங்கீத நுணுக்கம் அறிந்தவள்..

சங்கிலிக் கவிதைகள் எழுதுபவள்..

சகதோழி எனக்கென்று ..

சந்தோஷம் என்றும் உண்டு..


நினைத்துப் பார்க்கிறேன்..

நெஞ்சில் ஏன் நின்றாள் இவளென்றே...!!


என்னைக் கவர்ந்தது..


இவளின் வெண்பாவா?

கலிப்பாவா?.


அதையும் விட மேல்..

இவள் காட்டும்..

அன்பு எனும் அம்போ?


மேடைகள் பல நீங்கள் கண்டு..

வரணும் பெரிய ரவுண்டு..


தந்தேன் ஒரு மலர்ச் செண்டு💐💐💐

வாழ்க.. நீ..பல்லாண்டு🙏🙏

Happy birthday thenmozhi rajendran

 மிக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

 Thenmozhi Rajendran mam.


தேன்மொழி ஆச்சி..

நீங்க செய்யறீங்க எங்க மனசுல ஆட்சி..


மதுரை மகளிர் அணியில் ஒரு அங்கம்..

மனசோ சொக்கத் தங்கம்..


இவள் போடும் கஞ்சியும் கற்கண்டே..

இவள் பிடிக்கும் மாவுருண்டை வாயில்  கரையுமே..


மூலிகை விவரம் முற்றும் அறிந்தவள்..

முக்கண்ணனை மும்முறை தொழுபவள்..


ஓதுவாள் திருவாசகம் உலக நன்மைக்கு..

ஒரு ஊர் விடாமல் சுற்றிக் களிப்பாள்.


குருவிக்கும் கூடு கட்ட இடமளிப்பாள்..அதன்

கும்மாளத்தை அழகாய் ரசிப்பாள்..


Smile please என்று YouTube channel ..

சொல்லித் தருவாள் சூப்பும் 😋 சமையல் சூட்சமும்..


ஆண்டுகள் போனாலும்..

ஆச்சி..எப்போதும் யங் தான்.💪


பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன்..

 சிரிப்போடும் சிறப்போடும் வாழணும் நீங்க..🙏🙏💐


limitless_list

 #limitless_list..

எங்கிட்ட இருக்கு..

உங்க கிட்ட இருக்கா?


வீராப்பு நிறைய பேசினாலும் சில விஷயங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடிவதில்லை..


இது இல்லாமல் என்னால இருக்கவே முடியாது....இதோ..


கண் முழிச்சதும் காபி டீ தண்ணீ கண்டிப்பா வேணும்..

ஃப்ரிஜ்ல எப்பவும் 2 நாளுக்கு சமைக்க ்வேண்டிய காய் இருக்கணும்.. (சமைச்சு வெச்சு expiry date ஒட்டினது தவிர..)


தலைகாணிக்கு அடியில் விக்ஸ் அமிர்தாஞ்சன் இருந்தே ஆகணும்.


படிக்கிறேனோ படிக்கலையோ புஸ்தகம், highlighter இருக்கணும்..


மழையோ குளிரோ..fan சுத்தணும்..


உதைச்சாலும், ஓட்டித் தள்ளினாலும் ஒப்புரவா இருக்கும் என் செல்ல scooty வேணும்.


பசங்களுக்கு பிரசங்கம் பண்ணினானும் வாட்ஸப்பும் ஃபேஸ்புக்கும் வேணும்.


செல்லுமிடமெல்லாம்..செல்லுல சார்ஜ் வேணும்..

என்கூட என் காமெராவும் இருக்கணும்..


வரும் விருந்தாளிக்கு தர ஜூஸும் காப்பியும் இருக்கோ இல்லையோ WiFi password தந்து பரம்பரை கெளரவம் காக்கணும்..


முகநூல் நட்பூஸ்களின் பதிவுகளைப் படிக்கணும்..


லிஸ்ட் வளர்ந்தபடி..இருக்கு..


உங்களுக்கும் உண்டா இப்படி ஒரு limitless list?

Thursday, November 11, 2021

தேங்குழல்த்துவம்

 #தேங்குழல்த்துவம்



என்னடா இது ..இப்படி snacks ஆ போட்டு கொல்றேனேனு..நினைக்கறீங்களா?


ஒவ்வொரு தேன்குழலும்..

சொல்லிடுமே..

ஒப்பிலா...தத்துவம்..


என்னனு கேக்கறீங்களா?


நாம எல்லாரும் எத்தனை பரீட்சை எழுத போயிருக்கோம்..

நம்ம அம்மாவோ..டீச்சரோ..

என்ன சொல்லி அனுப்புவார்கள்.?


முதல்ல ஈஸியா இருக்கற கேள்வியை எழுது..

அப்பத்தான்..கஷ்டமான கேள்வியை எழுத ஒரு confidence and courage கிடைக்கும்..


அது போலத்தான்..

எது ஈஸியோ..அதுலேர்ந்து துவங்கினேன்..😀😀😀


ஆனால்..

இதே concept ஐ..வாழ்க்கையில் apply பண்ண முடியுமா?😄


முடியாதே?😃😁


ஏன்னா..நமக்கு கேள்வியே தெரியாதே?


எந்த கேள்வி ..எப்போ வரும்..

Preparation செய்து கொண்டு யாரும் வாழ்க்கைப் பரீட்சை எழுதவே முடியாது😄


அதனால்...


அன்புடன்😄

Tuesday, November 9, 2021

Conveyor_beltத்துவம்

 #Conveyor_beltத்துவம்..


இந்த conveyor belt இருக்கே..

ஒரு நிமிஷம் கண் அசந்தால்..

நம்ம லக்கேஜ் இன்னொரு சுத்துக்கு ஓடிடும்..


இங்கே fb post அப்படித்தான்..

பார்த்து படித்து ஒரு நிமிஷம் நம் திசை திரும்ப போஸ்ட் ,திரும்பி ஒரு ரவுண்டடிக்க போய்டுது..😀


நம்ம வாழ்க்கையும் அப்படித்தான்..

அந்த தருணத்தை விட்டோம்னா..திரும்பி ஒரு சுத்து சுத்திட்டு தான் வர வேண்டியிருக்கு..


அதனால....


அன்புடன்😀

Monday, November 1, 2021

கோயிலில் கண்ட காட்சி..

 கோயிலில் கண்ட காட்சி..


காத்து கருப்பு பட்டதோ

கருத்தோடு கட்டினாள் 

கையில் தாயத்து..

காதல் நோயது ..தன்வீட்டு

காளைக்கு வந்ததறியா

கவலையில் தாய்.


மந்திரத் தாயத்து

மாற்றணுமே மகனிவனை

மருமக வரணுமே..எல்லார்

மனசையும் கவரும்படி..


வேடிக்கை மனிதரென

வேங்கடனும் நினைப்பானோ..

வேடிக்கை விட்டு..என்

வேண்டுதலை தொடர்ந்தேனே

மழைக்காலம் மேகம் ஒன்று..

 மழைக்காலம் மேகம் ஒன்று..


'பொத்துக் கிட்டு ஊத்துமடி வானம்...

சொட்டு கூட புலம்பலில்லா காலம்.'


அப்போ எல்லாம்  வீட்டு ரமணன்கள் அப்பாக்கள் தான்.. பேப்பரை மேஞ்சு மேஞ்சு படிப்பு.. அதில் weather forecast வரும். map ல கூப்பிட்டு காண்பிப்பார்கள்..கிழக்கிலிருந்து மேகம் தெற்கு நோக்கி வரது பாரு.  ஒரு சுழல் மாதிரி தெரியறதா..அது அப்படியே நகரும்னு கிளாஸ் எடுக்கப்படும்.  நம்ம வீட்டு வாசலில் நாளை மழை பெய்யும் கண்டிப்பா அடித்து சொல்வர். google map, google earth எல்லாம் குடும்பத் ்தலைவர்களே..

கண் விழிச்சதும் வாசலில் வந்து கை நீட்டிப் பார்க்கப்படும்..

அடுத்த நடவடிக்கை. raincoat..

 தங்கத்தில குடை ஜிமிக்கி போட்டு அனுப்புவா ஸ்கூலுக்கு...சத்தியமா குடை மட்டும் தரமாட்டார்கள்.

தொலைச்சுட்டு வந்து நிப்பேனு வசவு விழும். கலர் குடை கொண்டு வரும் ஃப்ரண்டை பார்த்தா ஒரு காண்டாகும்.

பீரோலேர்ந்து பாண்ட்ஸ் பவுடர் போட்டுண்ட பஞ்சு மிட்டாய் ரெயின் கோட் எடுத்து தரப்படும்..கவரோட பத்திரமா கொண்டுவானு கட்டளையுடன்.லேசா தூறல் போட ரெயின் கோட்டின் பவுடரும் கரைந்து ஒடும்.. ஹவாய் செருப்பு கரும்புள்ளி செம்புள்ளி அடிக்கும். அந்த பிளாஸ்டிக் ஒரு 'க'ப்படிக்க..மழையின் ஜில் காற்றை அனுபவிக்க முடியாதபடி் புழுங்கித் தள்ளும். தெரு முனை தாண்டியதும்...ரெயின்கோட் பைக்குள் போகும்..ஆனந்த கூத்தாட்டம் கொட்டும் மழையிலே..

அடுத்த குஷி..மாநிலச் செய்தியில் லீவ் சொல்லிடுவார் செல்வராஜ். லேசா தூற ஆரம்பிச்சதும் கரண்ட் கட் ஆகிடும். inverter இல்லாத இன்பமான காலம்..no படிப்பு.no home work..எல்லார் வீட்டு வாசலிலும் குட்டி குட்டி மாநாடு நடக்கும்..குட்டீஸ்களுக்கு கொண்டாட்டம்..ராம ராம ராம சொல்லுங்கோ கரண்ட் வரும்னு வயசான பாட்டி சொல்ல..வரக்கூடாது லைட்டுனு வேண்டியபடி ராம மந்திரம் தெருவில் ஒலிக்கும்..

பளபளனு துடைச்சு வெச்ச லாந்தர் விளக்குகள் மின்மினிப் பூச்சி மாதிரி அழகா எரியும்.அம்மாக்கள் சூடா சாதம் வெச்சு, காலையில் செய்த ரசத்தில் மிளகும் பெருங்காயமும்,

கருவேப்பிலையும் போட்டு கொதிக்கவிடும் வாசம் ஊரைத் தூக்கும்.பசியைக் கிளறும்..மெழுகு வர்த்தியும் அங்கங்கு எரிய.. ஆவி பறக்கும் சாப்பாடு அரை நொடியில் காலியாகும்.சாப்பிட்டு முடித்து இருட்டில் இன்னோரு ரவுண்டு anthakshari  நடக்கும். 

புயல் பற்றி பெரியவர்கள் பேச..பொழுது நாளைக்கு எப்படி கழிக்கலாம்னு வாண்டூஸ் ப்ளான் நடக்கும்.

ஒருவழியாக அவரவர் வீட்டுக்குள் தஞ்சம் அடைய..

நானும் அப்பாவும் காற்றில் ஆடும் மரத்தையும், கருமை கட்டிய வானத்தையும் பார்த்தபடி உட்கார்ந்திருக்க...சரக் சரக் என்று சிலரின்  செருப்பு சத்தம் மட்டும் கேட்க..

மழை நாட்கள்..மனசுக்கு பிடித்த நாட்களாய் இருந்ததை..இன்னும் மனசு நினைத்து ஏங்குவது ஏனோ?

Monday, October 25, 2021

ஆசை

 கடையில் இருக்கறதெல்லாம் தலைகீழா கொட்டி தேடி முடிச்சப்பறம்..

அந்த பொம்மை போட்டு இருக்கிற டிசைன் தான் ...


😁😁👌

Prelude to diwali..

 Prelude to diwali..

ஒரு மாசம் முன்பே..

அட்டை டப்பாவில்..

புஸ்வாணமும்..சக்கரமும்..

லக்‌ஷ்மியும்..குருவியும்..

மத்தாப்பும்....ராக்கெட்டும்.

அட்டத்தை அடையும்..


வெயில் இருக்கானு பார்த்து..

வடாம் மாறி பரப்பி...

வரிசையா அடுக்கி வெச்சு..

தம்பியுடன் பாகம் பிரிச்சு..

தப்பக் கூடாது வாக்குனு..

தலையிலடிச்சு..சத்தியம் வாங்கி..

திருட்டுத் தனமா..

திருடு போகலயேனு..

திடம் பண்ணிண்டு..

தீபாவளி சூடுபிடிக்கும்..


முதல் நாள் சாயந்திரமே..

மூக்கை பிடிக்க..

மெனுக்கள் துவங்கும்..

போட்டது போட்டபடி..

கோப்புகளை விட்டுவிட்டு..

அம்மா ஓடி வருவாள்..

ஆபீஸ் வேலை விட்டு..


புகுந்த வீடு பெருமை காக்க

புதுக்கோட்டை வழக்கம்..

பஜ்ஜியும்..பக்கோடாவும்..

பறிமாறியே ஆகனும்..

இரவுச் சாப்பாடு..

இருக்குமே ஒரு லிஸ்ட்.

சேமியா பாயசமும்..

சின்ன வெங்காய சாம்பாரும்..

உருளைக்  கறியோடு..

அப்பளம் பொரியலோடு..

ஆடைத் தயிரோடும்..

கண்ணை சொருகும் தூக்கம்..


மூணு மணி அலாரம்..

முணுமுணுக்க தொடங்கும்...

பல் விளக்கி வருமுன்..

பலகையில் போட்ட கோலம்..

பாத்திர த்தில் நல்லெண்ணெய்..

பாங்காய் மடித்த ..

பாக்கு வெத்தலையுடன்..

கெளரி கல்யாணம் பாடி..

சொட்ட சொட்ட எண்ணெய்..

சீயக்காய் போட்டு நீராடி..

குங்கும மிட்ட துணியுடுத்தி..

பட்டாசு வெடிக்க..

சிட்டாய் பறக்கும் வேளை..

சின்ன கிண்ணியில்..

சுருளக் கிளறிய

மருந்து உருண்டை.

விடாது கருப்பாய் தொடர..

விட்டேன் ஜூட்டென்று..

வாசலுக்கு ஒடிப் போய்..

வெடிக்க துவக்கம்..

தம்பி..தைர்யசாலி..

நீள ஊதுவத்தி..

ஊதி ஊதி..

ஓடிப் போய் வைப்பான்..

சரமும்..யானையும்..

அட்டகாச atom bomb ம்..


அடுத்த வேலை..

பக்கத்து வீட்டுக்கெல்லாம்

பக்‌ஷண பரிமாறல்..

அங்கொரு பாட்டி உண்டு..

பத்து ரூவாய் தருவாள்..

பக்கத்து கடைக்குப் போய்..

கேப்பு வாங்கி வந்து.

சுத்தியலை வெச்சு..

ஒவ்வொண்ணா..அடிச்சு..

மிஞ்சிய ஒத்தையும் .

ஊசி வெடியும் 

மனசு வராமல்..

காலி பண்ணி. 

கடைசியில்..

சுருளும் பாம்புடன்..

குப்பையயும் சேர்த்து கொளுத்தி..

குட்பை...சொல்லி விட்டு..

குட்டித் தூக்கம் போட்டு..

புதுப்படம் ஒன்னு பார்த்து..

புதுத் துணிகள் கதை பேசி..

வந்திருந்த சித்தி சித்தப்பா..

தம்பியுடன் கிளம்பியதும்..

வெறிச்சோடிப் போகுமே..

வீடும் மனமும்..

ஆண்டுகள் போனாலும்..

அசை போடும் எண்ணங்கள்..

என்றென்றும்..சுகமே..சுகமே..

Saturday, October 23, 2021

Collegerocks

 Aishu: அம்மா..என்னோட earphone காணாப் போயிடுத்து..

நான்: ஏண்டா காலேஜ்லேர்ந்து வரும்போது டெஸ்கெல்லாம் செக் பண்ணிட்டு வர மாட்டியோ?

அவள்: அதை ஏன்மா கேக்கற..

அன்னிக்கு desk மேல வச்சுட்டு வந்த cost accounts note அடுத்தநாள் போனா அதே எடத்தில இருந்தது..ஆனா..நேத்திக்கு விட்டுட்டு வந்த earphone எங்க போச்சுனே தெரியல..!!

#collegerocks

உளவியல் பதிவு

 இது உணவுப் பதிவல்ல..

உளவியல் பதிவு


.. டிஸ்கி கொடுத்துட்டா நல்லது தானே😀😀


ஒரு டம்ளர் சேமியா எடுத்துக்கோ..

நல்லா வறுத்தியா..

வெங்காயம் நன்னா பளபளனு வேகணும்..

தக்காளி 🍅 பொடியா கட் பண்ணிக்கணும்..

பச்சை மிளகாய்..உன் இஷ்டம்

உப்பு ..namak shamak nu dance ஆடிண்டே போடாதே..

தண்ணீ..பார்த்து ஊற்று..கொழ கொழனு செஞ்சுடாதே..


இப்படி எந்த instruction ம் கொடுக்காமல்

தேமேனு அடுத்த ரூமில் ' லொக்கு  லொக்கு லொக்கு அரே  பாபா லொக்குனு ' நாம படுத்துக் கொண்டிருந்தாலே போதும்..


லுக்..லுக்..லுக்..அரே அம்மா லுக்..நு பாட்டு பாடிண்டே ப்ளேட்டில் வரும் ..

பாசக்கார பொண்ணு செய்த சேமியா உப்புமா..

'சேமி..yaa .இதை உன் உள்ளப் பெட்டகத்தில்னு..போட்டோ பிடிக்க..


#Keep_distance..

வாகனத்துக்கு மட்டுமல்ல..

வாரிசுகள்..வரிந்து கட்டி வேலை செய்யும்போதும்..


வைர(ல்) சிந்தனைகள்😀

சரிதானே..

அன்புடன்...

Monday, October 18, 2021

Youtubeத்துவம்

 #Youtubeத்துவம்


..


காலையில் எழுந்ததுமே..YouTube ல் ஸ்லோகம் , பாட்டு ஆரம்பிச்சுடும் என் கிச்சனில்..என் forever company அதுதான்..


Auto play on ல் இருப்பதால் ..அடுத்தடுத்த பாட்டு ஓடிக் கொண்டே இருக்கும்..


சில சமயம் ரொம்ப பிடிச்ச பாட்டு, சில சமயம் கேட்டே இருக்காத பாட்டு, சோகமா ஒரு பாட்டு, வீரமா ஒரு பேச்சு, கலகலனு காமெடி..


சில நாளுக்கு அதோட ரூட்டை மாத்தி எனக்கு புடிச்சதை மட்டும் கேட்கத் தோணும்..


சில நாள்..அது என்ன பாடறதோ அதே கேட்கலாமுனு தோணும்...


அதனால்..


நம்ம வாழ்க்கையும் ஒரு auto play on ஆகி இருக்கும் விஷயம் தான்..

அது போகிற போக்கில் போகும்போது சந்தோஷம்,சோகம், surprise எல்லாம் நிரம்பி இருக்கும்..


ஜாலியா வாழ்வோம்..


அன்புடன்..😀

Saturday, October 16, 2021

வாங்க போகலாம் shopping

 Shopping அலப்பறை இல்லாத தீபாவளி உண்டா?


வாங்க போகலாம் shopping 


 #kaun_banega_crorepati..ஸ்டைல்ல😀


Sony TV ல அமிதாப் பச்சனோடவா?


Ha..ha..haa..

எல்லாம் நம்ம தீபாவளி ஷாப்பிங்கல தான்.


வாங்க... ஆரம்பிக்கலாம்..நம்ம KBC.


முதல்ல #hotseat..க்கு போகணும் தானே


So #fastestfinger விளையாடணும்..

Options only 4 இல்ல..4000 கடைகள் இருக்கே.


ஆதி காலத்து ஆவி வந்த குமரன் ,நல்லி, சுந்தரி, ரங்காச்சாரி , போத்தீஸ், rmkv, nalli 100, Chennai silks, prasidhi , prashanthi..

அப்பறம் பக்கத்தில் இருக்கும் boutiques, apartment புடவை வியாபாரிகள்..

ரவுண்டு ரவுண்டா deletion பண்ணி.கடைசி கடைசியாக..

எங்கம்மாவும் அதே கடையில் வாங்குவா..பாட்டி கூட அங்கேதான் வாங்குவான்னு....  ஆவி வந்த கடை..as usual select ஆச்சு.

ஒரு பார்வையில் ஓராயிரம்..புடவகள் பார்த்தேன்..கவுண்ட்டரில் நானேனு..பாட்டு பாடிண்டே உள்ளே நுழைஞ்சாச்சு..


சரி..இங்கும் அங்கும் ஓடினாள் ஓடினாள் ஒரு புடவை எடுக்கனு டயலாக் மனசில் ஓட..

இப்போ ..முதல் #lifeline..

அதாங்க..#audiencepoll..


நம்ம எடுத்த புடவையை  கண்ணாடி கிட்ட போட்டு பார்க்கும்போது..

இது எந்த கவுண்ட்டரில் இருக்கு?..

நீங்க செலக்ட் பண்ணலைனா சொல்லுங்கனு ஒரு சில பேர் சொன்னாலொ..தூரத்திலேர்ந்து ஏக்கமா பார்த்தாலோ.


" அதை தனியா வெச்சுடுங்கனு' சொல்லி அடுத்த கவுண்ட்டருக்குள் நோட்டம் விடணும். கலர் கலராய் புடவை தோளில் சேர..

..நான் தேடும் செவ்வந்திப் பூ இதுனு பாடறதா..இல்ல..பச்சை நிறமே பச்சை நிறமே.. இல்ல..பிங்க்கு தான் எனக்கு புடிச்ச கலருனு எடுக்கறதா

இப்போ..confusion start..


 ஆனதும்..வீட்டுக்காரர் கிட்ட போய்..


#fifty_fifty  life line கேட்க..அவரு inky pinky ponky போட..

இது ரெண்டும் ஓகே..வா பில்லு போட்டுடலாம் உன் லொல்லு தாங்கலைனு அவர் நொந்து நூடுல்ஸ் ஆகும் வேளை..


ஐயோ..ஐத்தான்..அந்த கவுண்ட்டர் பார்க்கவே இல்லையேனு நான் ஓட

திரும்ப முதல்லேர்ந்தானு ..அவரு மண்டை காய..


நான் #flipthequestion ..life line க்கு போய்.."வேற என்ன புது டிசைன் இந்த தடவை introduce பண்ணி இருக்க்கீங்கனு சேல்ஸ்மேனை கேட்க..


அவரும் பாவம் ' இது கதக்கு..இது பரதநாட்டியம்' நு கமல் ஸ்டைல எடுத்துப் போட..


நான் முதல் முதல்ல ஒரு புடவை உங்க கிட்ட கொடுத்தேனே..உள்ளே வெக்க சொல்லி..அதையே அனுப்புங்க பில்லிங்க்கு சொல்லும் வேளை..


ஐயோ..wait wait..#phone_a_friend life line ல expert advice கேட்கணுமே என் உயிர் தோழி கிட்ட...

மயக்கமே வந்த வூட்டுக்காரர்.."ஏம்மா..நீ உன் ஃப்ரண்டையே கூட்டிண்டு வந்திருக்கலாமே..நான் நிம்மதியா வூட்ல KBC பார்த்திண்டு இருந்திருப்பேன் இல்ல 'என்று சோக கீதம் பாட..


சார்..இங்கே நாள் பூரா KBC தான் ..

எங்க நிலைமையை யோசிச்சு பாருங்க சார்னு அங்கே ஒரு சங்கம் கூட..


நாம நைஸா..அடுத்த ஃப்ளோரில்..


சீஸனுக்கு சீஸன்..புதுப் பொலிவுடன் #KBC..மட்டுமா..

#Kanjeevaram #Banaras #cottonsilk ம் தான்..


Group ல படிச்சவங்க...பாவம்..second time. ..என் சுவற்றில் மீண்டும்😀😀


படத்தில் ஒரு பக்கம் 

#amitabh_paa..

இன்னொரு பக்கம்..#என்னோட_paa😀

Friday, October 15, 2021

SPICMACAY

 It's only when you truly feel it, you can pen down something so nonchalantly !

A very heartwarming article written by Mrs. Akila Ramasami, a very talented and creative volunteer, about her experience with SPIC MACAY. 

SPIC MACAY is celebrating this year, as a year of volunteering. Therefore please come forward and share your thoughts and experience about SPIC MACAY at spicmacaydoon@gmail.com


Wednesday, October 13, 2021

கடுகுத்துவம்

 #கடுகுத்துவம்


..


 அஞ்சறைப் பெட்டியில் 

 Active member இவர்..


சின்னதா..பெரிசா..

மஞ்சளா..கறுப்பா..


கடுகடுனு இருப்பார்

குடுகுடுனு ஓடுவார்..


எண்ணெயில் போட்டதும்...

எகிறி குதிப்பார்.


தாளிப்பில்..தத்தளிப்பார்.

தந்திடுவார்..தேக ஆரோக்கியமும்


Mustard seeds.

Must என்றும்  நமக்கு..


வெடிக்கும் கடுகிலிருந்து..

வெளிவருமே..நறுமண எண்ணெய்..


வாய்க்கு 😋 ருசியும் தரும்..

வியாதிகளும் குணமாக்கும்..


குட்டியூண்டு..கடுகு இங்கு..

சுட்டியாக இருக்குதப்பா..


கடுகடு குடுகுடு கடுகுக்கு..

கடுகளவாவது ..நன்றியோட இருப்போமப்பா..


அன்புடன்😁😁😀


Start music 😁

Radha Sriram Meena Anand Shasri Shyamala Raghavendra Vaidehi Jagannathan😀..

யார் வேணுமானாலும் சொல்லுங்கப்பா..

கடுகுத்துவம்😁😁