Tuesday, May 15, 2018

Happy mothers day

happy mother's day maa..

பிறந்தநாள் உனக்கு
பாயசம் வெச்சியா என்றால்
பழக்கமே இல்லை என்பாள்.
எப்போது பேசினாலும்
எடுத்தவுடன் கேட்பாள்
சாப்பிட்டியா நீயென்பாள்
சாம்பார் பொடி இருக்கா
ரசப் பொடி காலியாயிருக்குமே
எங்கோ இருந்தபடி
எடை போடுவாள் எல்லாம்
குரல் வைத்தே கண்டுபிடிப்பாள்
கோபமா..குதூகலமா என்றே
அப்பறம் பேசறேன் என்பேன்
எப்போவுமே நீ இப்படி என்பாள்
உற்றார் உறவினர் கதையெல்லாம்
ஒன்று விடாமல் சொல்வாள்
பேத்திகளுக்கு பிடித்ததெல்லாம்
அத்துப்படி அவளுக்கென்றும்
பார்த்து பார்த்து செய்வதில்
பரம சந்தோஷம் அடைவாள்
அன்னையர் தினமெல்லாம்..
அவளும் கொண்டாடியதில்லை..
எடுத்துச் சொன்னாலும்
எதுக்கிந்த ஆரவாரமென்பாள்..
சண்டை பல பொழுது
சலிக்காமல் நடந்தாலும்
சமாதானக் கொடி பிடித்து
சரி சரி விடென்பாள்.
என்னை விட்டு நீ சென்றாலும்
எங்கம்மா இப்படித்தான் பண்ணுவானு
என்னை நான் நிலை நாட்டிக்க
அடிக்கடி வரும் உன் நினைவு
அன்னையர் தினத்தில்
மட்டும் தானா என்ன..?

Tuesday, May 8, 2018

ஓ..பாப்பா..லாலி.( மத்யமர்)

ஓ..பாப்பா..லாலி..

ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்குப் போனேன் சாயந்திரம். ஆபீஸிலிருந்து வந்தவள் ரொம்ப சோகமாக உட்கார்ந்திருக்க, அவள் மூணு வயது பைய்யன் அடங்காமல் அழுது கொண்டிருந்தான்.
கண்ணா..ஏன் செல்லம் அழறேனு கேட்டேன். அதுக்கு துடுக்குனு ஒரு பதில்..'aunty..டாட்டா.aunty ..டாட்டா' என்றான்.
என்ன நடக்கறது இங்கேனு அவளை விசாரிக்க..அழுதுவிடும் நிலையில் என் தோழி..' நான் ஆபீஸ் போறதால ஒரு baby sitter இவனை பார்த்துக்க வருகிறாள். வீட்டில் மாமியார் இருந்தாலும் வயசானவர். அவரால் இவன் பின்னாடி ஓட முடியலை. ரொம்ப நல்ல பொண்ணு..ரொம்ப அன்பா இவனை கவனிக்கிறாள். ரொம்ப ஒட்டிக் கொண்டு விட்டான். அதனால் தினமும் அவள் சாயங்காலம் கிளம்பிப் போனதும் இப்படித்தான் அழுகை என்று அவளும் விசும்பினாள். என் கிட்ட கொஞ்ச நேரம் வரவே மாட்டான். அவன் சமாதானமாகும் போது தூங்கி விடுகிறான்.இப்படியே போனால் என்னையே யார்னு கேட்பானோனு பயமாயிருக்கு என்றாள் நியாயமான கவலையில்.

வேலை ..விட முடியாது..
ஆளை..விட முடியாது..
வேறு வழி?

இப்போது இதெல்லாம் ரொம்ப சகஜமாகி விட்ட போதிலும் ஏனோ மனது பாரமானது.

எப்போதோ எழுதியது மீண்டும் நினைவுக்கு வந்தது.

ஓ..பாப்பா..லாலி..

ஆயா(aunty) வந்ததும் தான்
அம்மாவுக்கு உயிரே வரும்
அவசர ஆணைகள் பிறப்பித்தே
அவளும் ஒப்படைப்பாள்..தன்
அன்புச் செல்லத்தை..
அலுவலகம் ஓடியபடி..

ஆயாம்மா..
பாலும் சோறும் தருவாள்
பாதி அவளும் தின்பாள்.
(தெம்பு வேணுமே)

பாப்பாவுக்கு பிடித்த தெல்லாம்
ஆயாவுக்கு ரொம்ப அத்துப்படி

'கவனிப்பாள்' தன் குழந்தைபோல
'கவனிப்பாள்' எசமானியு மென்றே
ஆட்டுவாள் தலை எப்போதும்
ஆட்டுவிக்கும் பாப்பாவின் பொம்மையாய்
பொழுதைக் கழிக்கும் வித்தையில்
பல்கலைக் கழக பட்டதாரியிவள்.

முள்ளும் ஆறைத் தாண்ட
முள் மேல் இருப்பாளே
மூச்சும் வந்திடுமே..எசமானி
முகம் கண்டேதுமே..

பையை எடுத்து புறப்பட்டு
'பை''பை' சொல்ல..அவள்
புடவைத் தலைப்பை இழுத்து
போகாதே..நானும் வரேன்னு
பிடிவாத அழுகையில்
படுத்துமே பாப்பாவும்..

பயமும் பிடித்ததே..
பதிக்கணுமே  மனதிலே
பாப்பாவின் அம்மா..
படுபாவி நானென்று.

அரை நேர அம்மாக்களாக
ஆயாக்கள் ஆனபிறகு..
அக்குழந்தைக்கு தெரிவதில்லை..
ஆறு வித்தியாசங்கள்..
ஆயாவுக்கும் அம்மாவுக்கும்..

மங்கையாராய் பிறப்பதற்கே..(மத்யமர்)

மங்கையாராய் பிறப்பதற்கே..

இவள் ஒரு time keeper.
அலாரத்துக்கே ஆப்பு வைப்பவள்.

இவள் ஒரு master chef.
மனு போடாமலே மெனு தயாராக்குபவள்.

இவள் ஒரு advisor
அருவியாய் அறிவுரை கொட்டுபவள்.

இவள் ஒரு engineer.
உறவுப் பாலம் கெட்டியாய் அமைப்பவள்.

இவள் ஒரு HR.
வலையில் தேடி பல க்ரூப்பில் இருப்பவள்.

இவள் ஒரு store keeper.
ஷெல்ஃபும் பரணியும் கைவசமாக்கியவள்.

இவள் ஒரு CBI officer.
ஆதாரத்தோடு அமுக்கி பிடிப்பவள்.

இவள் ஒரு finance minister
debit credit தெரியாமலே deficit காட்டுபவள்.

இவள் ஒரு defence minister.
கராத்தே, குங்ஃபூ கற்காமலே குடும்பத்தைக் காப்பவள்.

இவள் ஒரு சுறுசுறு transporter
சாரதி வேலையில் சலிக்காதவள்.

இவள் ஒரு saviour.
அஞ்சறைப் பெட்டியிலும் பதுக்கி urgent க்கு உதவுபவள்.

இவள் ஒரு நடமாடும் encyclopedia.
விரல் நுனியில் விவரங்கள் வைத்திருப்பவள்.

எல்லாவற்றுக்கும் மேல்..

இவள் ஒரு திறமையான artist.
வீட்டையே கோவிலாக மாற்றுபவள்.

வீட்டிலோ,வெளியிலோ, வேலையிலோ..
 portfolio எதுவானாலும்
பின்னிப் பெடல் எடுக்கும்
பெண்மணிகள்..என்றும்
கண்மணிகள்...கண்ணின்..மணிகள்.

மகளிர் தின வாழ்த்துக்கள்.

Weekend (மத்யமர்)

Weekend வந்தாச்சு. எல்லாரும் பிஸி ஆகிடுவீங்க..
Walking போகும்போது, காதுக்குள்ள ஃபோனை மாட்டிக்காமல், கொஞ்சம் சுத்தி பார்த்து enjoy பண்ணுங்க.

எப்பவோ எழுதினது ..நீங்களும் இதையெல்லாம் தினம் பார்த்து ரசித்தபடி நடப்பீர்கள் தானே?

புத்தம் புது காலை..

good morning சொன்னது
கொஞ்சியே..குயில்கள்..
பூபாளம் இசைத்தது..
பட்டாம் பூச்சிகள்..
கடைசி சொட்டு தூக்கத்தை
விட்டுக் கொடுத்து..
விரிய விழைந்த பூக்கள்..

பரீட்சைக்கு நேரமாச்சு
பதறியபடி..பள்ளிச்சிறார்கள்..
குழந்தைகளை பஸ் ஏற்றி
குட்டி மாநாடு போடும்...அம்மாக்கள்.

jogging நு சொல்லி ஜகா வாங்கி
jolly அரட்டை அடிக்கும்...அப்பாக்கள்
மருமகளுக்கு டிமிக்கு கொடுத்து
மாங்கு மாங்கென்று
exercise செய்யும்..மாமியார்கள்

மாமி கொடுத்த காபி!(கஷாயம்..) மறக்க
MTR வாசலில் க்யூவில் நிற்கும்..மாமாக்கள்..

காதலியின் தரிசனம் காலையிலேயே கிடைக்க காத்துக் கிடக்கும்..கட்டிளங் காளையர்கள..

senior citizens சிரிப்பது எப்படினு ..
seriousஆ கத்துக்கும்..laughter clubs
(என்னையும் கேட்டார்கள்.. கொஞ்ச நாள் போட்டும்னேன்)

வாக்கிங் வந்தும் வானத்தை பார்த்து
வாழ்க்கை யோசனையோடு ஒரு சிலர்
இப்படி தினம் வந்து போவோரை ந்ம்பி
வியாபாரம் நடத்தும் ஒரு கூட்டம்....

காலை வீசி நடக்கத் தானே வந்தே.
கதை என்ன வேண்டிக் கிடக்கு..
கடமை நினைவில் வர..
நடக்க ஆரம்பித்தேன்...
இந்த நாள் நல்ல நாளாய்
எல்லாருக்கும் இருக்கனும் என்று..

good day to all

little extras ..but not extremes.(மத்யமர்)

little extras ..but not extremes..

ஒரு கஷ்டம் வரது..இல்ல கஷ்ட்டமே வந்தபடி இருக்கு. அது வேலை சம்மந்தமானதாக இருக்கலாம். பணம் சம்மந்தப்பட்டதாக இருக்கலாம். உறவு that is relationship சம்மந்தப்பட்டதாக இருக்கலாம். எல்லாத்துக்கும் மேலே உடல்நலத்தோட தொடர்புடையதாக இருக்கலாம்.

இந்த நாலு வகைக்குள் எதோ ஒரு வட்டத்தில் சிக்கி மீண்டு வரும்போது அடுத்த வட்டம் ,வா..நான் உனக்காகத்தான் காத்திருக்கிறேன்னு மாலையோட மேள தாளத்தோடு காத்திருக்கு.தப்பிக்க முடியாது..தலை நிமிர்ந்து எதிர்கொள்ளணும்னு ஒரு திடம் கொஞ்ச கொஞ்சமா கரைந்து எதைத் தின்னா பித்தம் தெளியும்னு ஒரு நிலைக்கு தள்ளப் படுகிறோம்.

இப்படி வரிசை கட்டி வருத்தங்கள் வரும்போது உடனே என்ன தோணும்?

எனக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டம்.
இதுக்கு என்ன பரிகாரம் செய்யலாம்னு யோசிச்சு மண்டை உடைச்சுக்கறோம்.

'பரிகாரம் செய்' ..
எல்லாம் சரியாய்ப் போய்டும்னு நிறைய நமக்கு சொல்வதைக் கேட்டு..யார் என்ன சொன்னாலும் போய் செய்து..அது சில சமயம் பலிக்கும்..சில சமயம் அடுத்த சுற்றுக்கும் இழுத்துச் செல்ல..நம் வாழ்வின் focus மாறிப்போய் விடும் நிலைமை.

சில சமயம் எனக்குத் தோன்றும்..
இந்தக் கஷ்டமெல்லாம் கடல் அலையாய் வருவதே நாம் எவ்வளவு பலம்/பலமீனமானவர் என்பதை சோதிக்க த்தானோ..

for example..ஒரு இலையில் எல்லாமே இனிப்பாக பரிமாற ப் பட்டால் நம்மால் சாப்பிட முடிகிறதா..கொஞ்சம் உப்பு காரம் தேடுகிறோம். வாழ்க்கையும் அப்படித்தானே?

ஒரு சின்ன சந்திப்பை இங்கே ஷேர் செய்ய விரும்புகிறேன்.

நேற்று நான் ஒரு குருவின் மடத்திற்கு சென்றேன். அங்கே ஒரு நடுத்தர வயதுக்காரர் பம்பரம் போல வேலை செய்து அத்தனையும் தன் கண்காணிப்பில் ஒன்று கூட தப்பாகி விடக்கூடாதே என்று அப்படி ஒரு dedicated வேலை செய்து கொண்டிருந்தார் . என்னைப் போல போனோமா..பூஜை பார்த்தோமா.. சாப்பிட்டு வந்தோமா என்றில்லை அவரோட போக்கு.

பேச்சு கொடுத்த போது தெரிய வந்தது ஒரு அதிர்ச்சித் தகவல்.
அவருக்கு ஏழரை நாட்டுச் சனியாம்.எதைத் தொட்டாலும் செய்தாலும் கஷ்டம்.கஷ்டம் ..கஷ்ட்டமே..

பரிகாரம் ஏதாவது உண்டானு அவர் தேடி அலைந்தபோது..அவரின் ஆன்மீக குருவின் கட்டளைப் படி ஏழரை ஆண்டு குடும்பத்தை விட்டு ,ஏதாவது ஒரு முற்றும் துறந்தவருக்கு பணிவிடை செய்தால் பாவமெல்லாம் பறந்தோடிடும் என்று சொல்ல..பரிவாரத்தை விட்டு விட்டு பரிகாரம்.செய்தபடி அவர் அங்கே..

இவர் குடும்பம்?
பிள்ளைகள் இப்போ வேலையில் இருக்கிறார்களாம். அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள் என் அறிந்தேன்.
இருந்தாலும் ..இது சரியா

 குடும்பத்தலைவன்  கண்காணாமல் தன் கடமை விட்டு , துறவியுடன் இருக்க..
என்னதான் சமாதானம் சொல்லிக் கொண்டு அவர்கள் குடும்பம் வாழ்ந்தாலும் எப்போதும் ஒரு restless ஆகத்தானே வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருப்பார்கள்.

சம்பாதிக்கும் பிள்ளைகள்..என்ன கவலை என்று வாதிடலாம்..
இதுதான் நல்லதுனு சொல்லும்போது ..செய்யாமல் இருந்தால் இன்னும் கஷ்டம் வந்து விடுமோனு பயமும் இருக்கலாம்.

ஏழரை வருஷம்தானே ஏழு நிமிஷம் மாதிரி ஓடிடும்னு மனதை திடப் படுத்திக் கொண்டாலும்..ஏழரை வருஷத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பொறுப்புகள் எல்லாம் எங்கே போகும்?

விட்டு வந்த வேலையோ/ சொந்தத் தொழிலோ..தலை தூக்க முடியுமா..இரு நான் போய் பரிகாரம் முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போகும்போது?

தெய்வ பக்தி,பரிகாரம் எல்லாம் தேவைதான்.

ஆனால் 
why me..என்று புலம்பினாலும்..

try me என்று அடிக்கடி குஸ்திக்கு ரெடி ஆகி இன்னும் கொஞ்சம் extra உழைப்பு, extra care ,extra தைரியம், extra நம்பிக்கை அதுவும் தன்னம்பிக்கை..
எடுத்து extreme step க்கு போகாமல் எதிர்நீச்சல் போட்டு வாழப் பழகணும் இல்லையா...

அப்போது தான் திரும்பிப் பார்க்கும்போது நாம்  எப்படிக் கடந்தோம் இத்தனை கல்லும் முள்ளும் நிறைந்த கடினப் பாதை ...என்றும் ஒரு நிறைவும் சந்தோஷமும் தரும் தருணங்கள் அலாதிதானே?

mission of life..making every struggle a milestone..அதுதானே friends?

வேறென்ன விட்டுப் போகணும் நம்ம குழந்தைகளுக்கு காய(ல)த்தினால் கிடைத்த வலிமையா? வலியா?