Tuesday, March 10, 2020

Holi

Happy holi friends

holi ரொம்ப ஜாலி..வாரி வாரி இரைக்கும் வண்ணம்..வாளி வாளியாய் வீசும் தண்ணீர்.
கலர் ..கலர் ..கலர்..

புடவை ஷாப்பிங் போனதை விட ..இந்த பொடி ஷாப்பிங் நிறைய நேரம் ஆகும்.
pink,yellow, red, green ..buy two one free ..offer இருக்கிற கடையா பார்த்து உள்ளே நுழையணும்.
ஆர்கேனிக் பெளடர் தேடி வாஙகணும்.கெமிக்கல் வாங்கிட்டோமோ.. அப்பறம் கெமிஸ்ட் கிட்ட நடையா நடந்தாகணும்.

 ஊதி ஊதி தண்ணி ரொப்ப பலூனும் வேணும்.'காத்துதான் வரது' நு சொல்பருக்கு இந்த வேலை allot ஆகும்.

எங்க எதிர்த்த  வீட்ல ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஊறுகாய் பாட்டில்ல tesu flower ஊறியபடி வெய்யிலில் வைக்கப் பட்டிருக்கும். யாரும் தப்பித் தவறி வாயில போட்டுக்கப் போறாளேனு நான் கவலையாய் பார்க்க..அந்த வீட்டு வாண்டு என்னை ஒரு லுக் விட்டு போகும்.உள்ளே இருந்து ஒரு பாட்டி வந்து பாட்டிலை இடம் மாறி வெச்சு என்னை ஒரு முரை விடுவார்.

ஞாபகமா..வெள்ளை வெளேர்னு இருக்கற ட்ரஸ் எடுத்து வைக்கணும்..அப்போதான் கலர் combination நல்லாத் தெரியும்.

சாப்பாடு..ஐயோ என்ன வெரைட்டி..என்ன வெரைட்டி..( சாப்பாடுன்னா..சளைக்காமல் ஆஜர் ஆகிடுவேனே)
உருளை உருண்டு விளையாடும்.
உருவமும் பல எடுக்கும்.
சிப்ஸ் பண்ணலாம் வான்னு என்னை போட்டு வறுத்தெடுப்பாள் தோழி.
'குஜியா' நிறைய செய்யணும் ஒத்தாசைக்கு வா என்றாள். எனக்கு நதியா தானே தெரியும் ..இதென்ன குஜியா ?
இப்படி ஒரு இனிப்பா..tasty bhi healthy bhi..kaam bhi..!
.வாயில் போட்டால் சொர்க்கம் காட்டி குஷியாக்கும் குஜியா...ஆஹா..பேஷ் பேஷ்னு அப்படியே சாப்பிடலாம் குஜியா..

காத்துக் கிடந்த பண்டிகை..
ஹோலி ஹை ஹோலினு
கத்தலோடு காலை புலரும்.

கண் முழிக்கும் போதே கலரோடும் ..கெட்டித் தயிரில் மேல் தூவிய மிளகாய்ப் பொடியில் மூழ்கிக் கிடக்கும் வடையோடும் காத்திருப்பாள் பக்கத்து வீட்டு aunty.
பல் தேய்க்கற பட்சணம் ரெடி.

பாலிகை கரைக்கறது மறக்காம இருக்க.
பாக்கெட் கலரெல்லாம் தண்ணீரில்கரைச்சு
பக்கெட் டிலும்..பலூனிலும்..
pichkari யிலும் ...ரொப்பித் தள்ள..
மிசைல் அட்டாக் தான். பசங்களோடு பசங்களாய் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.

பக்கத்து வீட்டு சுமன் என்னடா ரொம்ப சுமுகமா கூப்பிடறாளேனு நான் குழம்பிப் போய் நிற்க..வீட்டுக்காரர் warning விடுவார்.
மயங்கிண்டு போகாதே..பக்கோடாவோட bhang ம் கொடுப்பா..ஜாக்கிரதைனு எதிரி முகாம் ரகசியத்தை போட்டு உடைப்பார்.
( அது எப்ப்டித்தான் இருக்கும்னு ட்ரை பண்ண விட்டதே இல்லை..)

அன்னிக்கு மட்டும் எல்லா வீட்லயும் காத்துக்கு பதிலா கொஞ்சம் தண்ணியும் குழாயில் வரும்.

ஆட்டம் முடிச்சு..அழுக்குப் போக ஒரு குளியலடிச்சு..துணியெல்லாம் முக்கி வெச்சு..மூக்கு பிடிக்க ஒரு சாப்பாடு..
மலையே இடிஞ்சு விழுந்தாலும் காதிலே விழாத தூக்கம்..

'ஆடி அடங்கும் வாழ்க்கையடானு' பாட்டு பாடியபடி..அடுத்த நாள் மூட்டை துணி தோய்க்கணும்..
ஆடியபடி என் வலதுகரம் ரஜ்ஜோ வருவாள்..கோணலாய் கொஞ்சம் சிரிப்பாள்.ஏய் என்னாச்சு ..நல்லாத்தானே இருந்தேனு கேட்பேன். சப்ஜியில் something  வைத்து யாரோ பழி வாங்கிட்டா என்று சிரித்தபடி அழ ஆரம்பிப்பாள்.

ஹோலி வந்ததும் தன் ஜோலி பார்க்க ஜ்வலிக்க வந்துடுவார் சூரிய பகவான்.
ஸ்வெட்டருக்கு எல்லாம் ' ஆரீராரோ பாடி தாச்சி தூங்கும்மானு சொல்லி திவானுக்குள் திணிக்கணும்.

வசந்த காலம்..வண்ணம் தூவி..வயது பாராமல்..விளையாடும் விளையாட்டு..
holi..
எல்லாம் ஒரு காலம்னு கடந்த காலத்துக்கு இழுத்துப்போய் ..கலகலப்பாக்கும்..எட்டிப் பார்க்கும்.அந்த நாளும் நினைவுகள்.

No comments: