வெண்ணிற மேகமே..
கண்ணீரும் ஏன் தானோ????
காற்றது கலைப்பதனால்
கலங்காதே நீயுந்தான்..
ஓடியே திரிந்தாலும்
ஓர்சக்தி உனக்குண்டு..
ஓளிபரப்பும் கதிரவனை
ஒளியவே வைக்கவுந்தான்..
வாழ்க்கை பாடமதுவே.
வலிமையது உண்டுனக்கு
உணர்ந்திடு உன் திறனை
உலகமது உன்கையிலே..
எண்ணுருவன் ஆனைக்கா (திருவானைக்கா) --2
6 days ago

1 comments:
அன்பு அகிலா!
தன்னம்பிக்கை ஊட்டும் அழகான கவிதை!
தொடர்ந்து கவியூற்றுப் பொங்கட்டும்!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment